கடந்த வெள்ளியன்று மாலை நடைப்பெற்ற இந்த கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களுடைய முதற் பேச்சுரையை துவக்கிய இந்திய தவுஹித் ஜமாஅத் பேசுகையில் முஸ்லிம்களை பொறுத்தவரை மூன்று விஷயங்களளை ஒருபோதும் விட்டுகொ டுக்க மாட்டார்கள்.
அது 1 அல்லாஹ்வின் பள்ளியை இடித்தால் அல்லது சேதப்படுத்தினாலோ
2அல்லாஹ்வின் வேதமாகிய திருமறை குர்ஆணை இழிவு படுத்தினாலோ
3அல்லாஹ்வின் தூதரை நபிகள் நாயகம் ஸல் அவர்களைப்பற்றி தவறாக சித்தரித்தாலோ ...! இம்மூன்றும் ஒரு முஸ்லிமும் இரத்தத்தோடு கலந்த ஒன்று, எனவேதான் முஸ்லிம்கள் இந்த மூன்று விஷயங்களில் யார் தவறு செய்தாலும் அதை எதிர்த்து கொந்தளிக்கின்றார்கள் .
இலங்கை யை பொறுத்தவரை முஸ்லிம்கள் பொதுவாகவே அமைதி சுபாவம் கொண்டவர்கள்.தம்புள்ளா பள்ளி இடிப்பதற்கு முன்பு அங்கே இருந்த தர்காவை தரைமட்டமாக்கிய புத்த பிக்குகள்[பக்கிகள்] தற்போது பள்ளியை இடித்துள்ளனர். முதலில் தர்காவை இடித்தார்கள் அப்போது முஸ்லிம்கள் அமைதி காத்தார்கள் காரணம் தர்கா கூடாது என்பதில் ஒரு சாராரும், கூடும் என்பதில் ஒருசாராரும் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளார்கள். அப்படியே கருத்துவேறுபாடு இருந்தாலும் அது நம்முடைய முஸ்லிம்கள் சொத்து அதை உடைப்பதற்கும் அங்கே பள்ளியோ அல்லது பாடசாலையோ அமைப்பதற்கு முஸ்லிம் களுக்கு மட்டுமே உரிமையுண்டு.
ஆனால் சற்றும் சம்மந்தமில்லாத பௌத்த பக்கிகளின் கூட்டம் தர்கா இடிப்பதின் மூலம் நாம் அப்போது உரிமைக் குரல் ஒலிக்கப்படாமால் அமைதி காத்ததால்.....நம்முடைய உரிமையி ல் கைவைத்தார்கள்.அப்போதே இலங் கை சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவி த்து கொந்தளித்து எழுந்திருந்தால் இன்றைக்கு தம்புள்ளா பள்ளியை நெருங்கி இருக்க முடியாது அதுதான் சிங்களனுக்கு பள்ளி இடிக்க சாதகமான தளமானது தொடர்ந்த உரை நீளமாக அங்குள்ள நிலையை விவரித்து பட்டியலிட்டது.
அதன் பிறகு தாய் கழகம் சொல்லப்படும் தேசிய முஸ்லிம் லீக் தங்களுடைய உரையை ஆரம்பித்து பேசியப்போது I.N.T.J . அமைப்பினர் அவ்வப்போது இதுப்போன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்து அனைத்து முஸ்லிம் மக்களையும் மற்ற பிற சமுதாயத்தினரையும் ஒன்று திரட்டி இதுப்போன்ற நிகழ்வுமட்டுமில்லாமல் மக்கள் சேவையரிந்து மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவது மகிழ்வூட்டினாலும் சில அமைப்பினர் சமுதாய ரீதியிலே ஒன்று படாமல் வேறுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது . இதுப்போன்ற அவல செயல்களுக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடினால் அனைத்தையும் பெற்றெடுக்கலாம் ஆகவே நம் அனைவரும் முதலில் ஒற்றுமை நாட வேண்டும் என்பதும் அனைவர் மத்தியில் தெரிவித்தார்கள் .
அதன்பிறகு பேசிய விடுதலை சிறுத்தை அமைப்பினர் இஸ்லாமியருக்கு ஏதாவது என்றால் முதலில் களத்தில் இறங்கி போராடுவது நம்முடைய தலித்தினர்தான் ஆனால் இஸ்லாமியர்களோ தலித்துக்கு எதிராக ஏதாவது என்றால் போராட முற்படுவதில்லை என்றும் அண்மையிலே இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இனவாத அரசுக்கும் நடந்த போரின்போது தமிழ் பேசும் விடுதலைப் புலிகளுக்கு இந்த இஸ்லாமிய சகோதரரர்கள் ஒருங்கிணையவில்லை அப்போது சிங்கள அரசுக்கு ஆதரவா க இருந்ததாக குற்றம்சாட்டியது டம் இன்று தம்புள மாநகரில் சேதப்படுத்தப்பட்ட பள்ளி வாசலுக்கு எதிராக முதலில் கண்டன உரையை ஓங்க செய்தது எங்களுடைய கழகம்தான் எதற்காக நாம் கண்டனத்தை தெரிவித்தோம் தலித்துக்கு எதிராக செயல்பட்ட இஸ்லாமியர் என காணாமல் இனத்தால் மனிதர்கள் நம்முடைய ஜாதி தமிழாகுமே தவிர நம்முடைய தமிழ் இனத்திற்கு எப்போதும் களம் இறங்கி போராட இந்த விடுதலை சிறுத்தையினர் தயாராக உள்ளதையும் தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த கழகத்திற்கு அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் அனைத்து ரீதியிலும் ஒன்றுப்பட்டு தலித்துகளும் முஸ்லிம்களும் களத்தில் இறங்கி கலைப்பணி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து முடித்துக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து பேசிய தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் . அவ்வப்போது இலங்கையில் நடக்கும் பிரச்சனையும் ,இந்தியாவில் நடக்கும் இஸ்லாத்திற்கு எதிராக வன்முறை பிரச்னைக்கு யூதர்களாகிய இஸ்ரேலியர்க்கல் காரணமாக இருக்கக் கூடும் என்பதாகவும் ,பாளிஸ்தீன் மற்றும் அராபிய நாட்டில் திட்டமிட்டு வன்முறையாக்கி கொண்டிருப்பது இந்த இஸ்ராயிளுடைய சூழ்ச்சியாகும் இதற்கு ஒருப்போதும் இஸ்லாமியர்கள் அஞ்சப்போவதில்லை எனவும் சமீப காலமாக பிரிந்திருந்து அவ்வப்போது இணைந்து போராடும் சகோதரர் பாக்கரின் செயல்களை வரவேற்பதாகவும் ஏனை சமுதாய அமைப்பு குர்-ஆன் ஹதீஸ் கூறிக்கொண்டு இதுப்போன்ற போராட்டங்களிலும் ,கூட்டங்களிலும் கலந்துக்கொள்ளாமல் வேறுபட்டு கடப்பது வேதனை அளிப்பதாகவும் .
இதுப்போன்ற செயல்களில் இஸ்லாமியராகிய நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு போராடுவோமானால் அதற்கு நிச்சயம் பலன் கிட்டும் என்பதாகவும் தெரிவித்த அவர்கள் இதுப்போன்ற நிகழ்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் I.N.T.J.அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தனர் .
அதற்கு பிற்பாடு பேசிய ம.தி.மு.க கழக நிர்வாகி ஒருவர் இது திட்ட மிட்டு தீட்டப்பட்டு அரங்கேறிய செயலாகும். இதில் இந்திய மதவாத கட்சிக்கும் இலங்கை அரசுக்கும் ஏதோ சூழ்ச்சி ஒன்றிருப்பதை தெளிவுப்படுத்துகிறது .
இந்த பள்ளி இடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு இந்திய மதவாதிகாவிகளுக்கும் இலங்கை இனவெறி பிடித்த ராஜபக்செவிர்க்கும் ஒரு ரகசிய சந்திப்பு நடந்து இருக்கிறது இலங்கையில் சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கும் அப்பாவி தமிழரின் நிலையை அறிந்துகொள்வதற்காக இந் திய நாட்டின் மத்திய அரசால் ப ஜ க வின் சுஷ்மா சிவராஜ் தலைமையில் அனுப்பிவைக்கப்பட்ட
மத்தியகுழு இலங்கைக்கு சுற்றுலா சென்றபொழுது அந்த அணியின் தலைவி சுஷ்ம சிவராஜ் [இவர் பாபர் பள்ளி இடிப்பில் தொடர்பு உடையவராவார்]இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை தனியாக ரகசியமாக சந்தித்து ஒருமணிநேரம் பேசி இருக்கிறார், அதன் பிற்பாடு இலங்கை பள்ளி இடித்த நாளில் அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே வெளிநாடு சென்று விட்டார்.
இதே வழிமுறையைத்தான் பாபர் பள்ளி இடித்தபோதும் அன்றைய ஆட்சியில் இருந்த நரசிம்ம ராவ் வெளிநாடு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பள்ளிகள் இடிப்பு சம்பவம் இந்திய காவிகளின் மத வெறியரின் சூழ்ச்சி தானே தவிர வேறு ஒன்றும் இல்லை!
எப்படி சில இந்து மத வாதிகள் ராமர் பிறந்த இடம் அயோத்தி புனிதம் என்று கூறி பாபர் பள்ளி இடிதார்களோ அதுபோல புத்த பிக்குகள் தம்புள்ளா பள்ளி இருக்கும் இடமும் புனிதம் என்றதான் பள்ளியை இடித்தார்கள். எனவேதான் இதுவும் அவர்களுடைய சதியாகத்தான் இருக்கக்கூடுமென சில சமூக ஆர்வலர்கள் கூறுவதை நினைவுப்படுத்துவதாகவும்
எனவே இனியும்முஸ்லிம்களை புண்படுத்தும் இதுபோன்ற செயல் கள் நடக்காத வண்ணம் அந்த நாட்டின் அரசாங்கமும் ஆட்சியாளர்களும் பார்துகொள்ளவேண்டும் என்பதே எமது ஆதங்கம் எனவும் கூறியதுடன் ஆனால் இன்னும் முஸ்லிம்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விடயம்.
நம்முடைய வீடோ அல்லது சொத்தையோ வேறொருவர் அபகரித்தலோ அல்லது சேதப்படுத்தினாலோ ஆக்கிரமைப்பு நாம் எப்படி கொந்தளித்து அதை மீட்டெடுக்க கோர்ட் வக்கீல் என உடனுக்குடன் களத்தில் இறங்குகிறோமோ அந்த அளவிற்கு இஸ்லாமிய புனித விஷயத்தில் எதிராக யாராவது தலையிட்டால் உடனுக் குடன் களம் இறங்கி போராடவேண்டும்.
அது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகும் அல்லாஹ்விற்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்கிறான் என்ற திருமறை வசனத்தை பாருங்கள் எடுத்து சொன்ன அந்த கழகம் ''மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்;
அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.22 -40
எனவே அல்லாஹ்விற்கு உதவி செய்வதின் மூலம் நாம் அவனுடைய உதவிகளை பெற முடியும். அல்லாஹ்விற்கு உதவி செய்வது என்பது எதை பொருந்துகிறது அல்லாஹ்வை நம்மால் யாராலும் உதவி செய்ய மு டியாத பட்சத்தில் அவனுடைய வேதங்களை யாராவது இழிவு படுத்தினால் அல்லது அவனுடைய தூதர்களை யாரவது இழிவு படுத்தினால். அல்லது அவனுடைய வீட்டை[பள்ளிவாசல்] யாரவது சேதப்படுத்தினால் நாம் அதை தடுப்பத்தின் மூலம் அவனுக்கு உதவி செய்கின்றோம். அதுபோல வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்தாலோ பசித்தவருக்கு உணவளித்தலோ அதன் மூலமும் நாம் அல்லாஹ்விற்கு உதவி புரிகின்றோம் என்று சில மார்க்க அறிஞர்கள் விளக்கம் அளிக்கிறார்கள் எது எப்படியோ அல்லாஹ்வை அஞ்சி அவன் கட்டளைகளை பின்பற்றுவதின் மூலம் அவனுடைய அருளை பெறமுடியும். எனவும் அந்த கழகம் நிர்வாகி இஸ்லாமிய ஹதீசுடன் பேசியதில் கூடிருந்த மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வியப்படைந்தார்கள் . இதுப்போன்று
பல்வேறு அமைப்பினர்அனைவரும் தங்களுடைய கண்டனத்தை வெடிகுண்டு சொற்பொழிவை கொண்டும் பேச்சு பீரங்கி முழங்க தங்களுடைய சிற்றுரையை வழங்கி இலங்கைக்கு எதிர்ப்பினை உணர்வுகளாக தங்கள் உரைகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்த கண்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்து சிறப்புரை வழங்கியமைப்புகளின் பட்டியல் !
குவைத்இந்திய தௌஹீத் ஜமாஅத் ,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம். தமிழ்நாடு முஸ்லிம் கலாசாரப் பேரவை,காயிதே மில்லத் பேரவை,குவைத் இந்திய பிடர்நிட்டி பார்ம்,விடுதலை சிறுத்தைகள், மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போன்ற அனைத்து நல்லிணக்க இனம் பாகுபாடின்றி அனைத்து சகோதர்களும் இயக்க வேறுபாடின்றி கலந்து கொண்டு தங்களுடைய உணர்வினை கண்டன சொற்பொழிவு ஏவுகணைகளாக ஆதங்கத்தோடு இலங்கையை நோக்கி வீசினார்கள்.
வருகைத்தந்த அத்துணை அமைப்பினருக்கும் I.N.T.J அமைப்பு நன்றியை சமர்பித்து வழியனுப்பினர்.
தகவல் : திப்பு சுல்தான் ,கூனிமேடு .