KEWA - விடத்திலிருந்து மடல் !

கடந்த வியாழன் அன்று இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக அமைப்பினை அமைத்துக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வாமாக கூனிமேடு குரலுக்கு அனுப்பி வைத்தனர் அதில் கூறப்பட்டிருப்பது தங்களின் அமைப்பு நம்முடைய ஊரைசார்ந்த உட்பட்ட பகுதிக்காக சேவை நோக்கத்துடன் துவக்கப்பட்ட அமைப்பாகும் .

கல்வி ,ஊராக வளர்ச்சி ,மருத்துவம் ,திருமணம் ,மற்றும் இசுலாத்தின் அடிப்படை விஷயத்தை மக்களுக்கு எத்தி வைக்கிற நோக்கத்துடன் திறக்கப்பட்டது எவருடைய தனி நபர் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் திறக்கப்பட்டதல்ல !

மேலும் இந்த அமைப்பு இசுலாம் சட்டத்திற்கும் ,இறைவனின் கட்டளையும் ,நபிகள் நாயகம் {ஸல் }அவர்களின் செயல்முறையும் மையமாக கருதி வழி நடத்திட முடிவை தீட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ளது .மேலும் எந்த ஜமாத்தாக இருந்தாலும் இசுலாம் சட்டத்திற்கு முரணாக செயல்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளவும் தயங்க மாட்டோம் என்பதாகவும் உறுதியாக தகவலாக இம்மடலில் தெரிவித்தனர் .

மேலும் ஜமாத்தில் உள்ளவர்கள் இசுலாம் சட்டத்திற்கு உகந்து  நடப்பது அவசியம் என்பதாகவும் அந்த சட்டத்தை மீறி நடப்பவர்களுக்கு அவர்களுக்கு இசுலாம் சட்டத்தை அறிய வைக்க இந்த பேரவை களத்தில் இறங்கும் என்பதாகவும் கருத்து பதிய வைத்துள்ளனர் .

கூனிமேடு ஜாமியா பள்ளிவாசலுக்கு தேவையான அத்துனை தேவைகளையும்  இயன்ற அளவுக்கு உதவி செய்திட இருப்பதாகவும் .அதுவும் முறைப்படி தபால்படி தகவலை அளித்தால் நிர்வாகம் கூடி மேற்பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் .மேலும் தாயகத்தில் உள்ளவர்கள் இந்த பேரவையில் இணைந்து செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்