பசியின் அருமை பசி அறியும் ! கவிதை .


Inline image 1
பசியோடு வாடும் ஏழையை 
கண்டு வருந்தாமல் வயிறுத்ததும்ப
 உண்டு பசியைக்போக்கி கொள்பவன்
 மறந்து ஏப்பமிடுவான் !

இருப்பதை கொடுக்காமல் வீணாக்கி  
வீசும் உணவு வீண் விரையமாகும் !
திரவியம் தேடுவோருக்கு வாழ 
அது இரையாகும் மீதமாகும் எச்சிலை !

வரவை எதிர்நோக்கும்  அனாதைகள் 
பிணியை போக்கிக்கொள்ளும் 
குப்பைத்தொட்டி மீதம் வைக்கும்!
 ஈக்கும்-நாய்க்கும் பிரதான கூட்டாஞ்சோறு !

வாட்டும் பசி இன்ப 
உறக்கத்தை துறக்கும் விழிகள் !
கிடைக்குமா எண்ணும் உள்ளம் 
மிகுந்த தேடலோடு ....!

செல்ல பிரயாணிகளுக்கு அரவணைக்கும் 
மனிதனின் அக்கறை அனாதைக்கு 
உதவிக்கரம் நீட்ட மறுக்கும் 
சமுதாயம் சிறப்பாய் வாழ்கிறது !-

ஒவ்வொரு நாளும் நொடியும் 
யுகங்களாகும் வாழ்க்கை!
இருக்கையில் கிடைக்காத 
வாழ்வாதாரம்! அணு அணுவாய்!

கொல்லும் உயிர் துடிக்கும் 
நாடித்துடிப்பு நிர்ணயிக்கும் காலம் 
தீண்டாட்டமாய் ஒரு நாள் 
பட்டநியோடு தவிக்கையிலே ...!

அவலப் பசியின் அருமை 
பசி அறிய வைக்கும் 
உலகத்தை இருள வைக்கும் 
இறுதி தொண்டைக்குழி அடை க்கையில் !
 தினம் ஏற்கும் சோதனை!- வேதனையோடு 
பட்டினியில் தவிக்கும் வறுமை !
போதனையாய்  கனத்து  கற்பிக்கும்
 பாடம் "பசி " பிறரை  உணர வைக்கும் !


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்