சமீபத்தில் இறந்த தமிழகத்தை சார்ந்த சகோதரர் சாதிக் அவர்களுடைய உடல் இன்று மாலை கத்தார் விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறது .

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணித்த சகோதரர் சாதிக் @வெத்தலை சாதிக் அவர்களின் உடல் இன்று காலை முதல் அல் சபாஹ் மருத்துவமனையில் பார்வையாளருக்காக வெளியே வைக்கப்பட்டது பிறகு சுமார் 11 மணி அளவில் இந்திய தூதரகம் சோதனைக்கு பிறகு சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டதாக சகோதரர் அஹமது ராஜா ஷரிப் தகவல் தந்தார் அதற்கு முன்பாக சகோதரர் அல் நாஸ் சாதிக் அவர்கள்{ சரக்கு சேவகர் }ஆசிரியரை தொடர்புக்கொண்டு காண  விரும்புவோர் இன்று காலை 10 மணி வரை காண்பிக்கப்படுவதாக தகவலை தெரிவித்தார் .

இறந்தவருக்கு அனைத்து சேவைகளும் செய்ய முன் வந்தது குவைத் T.N.T.J அமைப்பாகும் இவர்களுடன் சுப்ரீம் கார்கோ இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது .


தொடர்ந்து சரக்கு சேவையில் முன் மாதிரியாக விளங்குபவர் சகோதரர். சாதிக் அவார்,. 

சிந்திப்போம் தோழிகளே !முந்திப்போம் .!மானத்தை காப்போம் கவனத்தோடு இருப்போம் .


விழிக்க ஒரு ஆதாரம் !கள்ள காமத்தால் அரங்கேறும் அவமானம் !கள்வனின் கள்ளக் காதல் கேமிரா செய்யும் வியாபாரக் கதை சொல்லும் .! 

செல்போனிலோவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..
செல்போனிலோவிடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..

''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

மனிதன் கொள்ளும் பேராசை மார்க்க சிற்றுரை !

மனிதன் பிறப்பில் இருந்து இறக்கும் வரை அனைத்து வற்றிலும் ஆசைக் கொள்கிறான் ,அளவுக்கு அதிகமாக தேவைக்கு மிஞ்சிய அளவில் விரும்புகிறான் . அவனுடைய ஆசைக்கு முடிவில்லை ,எல்லையில்லை
அது அளவு கடந்து சென்றுக்கொண்டுள்ளது .ஆசைக்கு அதிகமாக விரும்ப விரும்ப பேராசையாகி தவறான வழிகேட்டிபால் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான் .அறிந்தும் தவறு செய்கிறான் அறியாமலும் தவறு செய்பவனாக இருக்கிறான் .

இந்தியாவின் அதி நவீன ரிசாட் -1 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பறந்து சாதனை

இந்தியாவின் அதி நவீன உளவு  வகை செயற்கைக்கோள் ராடார் புகைப்படம் விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டவிளிருந்து இன்று காலை 5.47 க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானம் சாதனைப்படைத்தது . 

முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை செய்ய இலங்கை பிரதமர் தி .ம. திலகரத்னே திட்டம் .

தம்புள்ள பள்ளி வாசல் விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் தலைவர்களை சந்தித்து முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தி .ம. திலகரத்னே இன்று தெரிவித்துள்ளார் .

இஸ்லாமிய மதத் தலைவர்களை அழைத்து பள்ளிவாசலை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்காக முதல் கட்ட ஆலோசனைக்   கூட்டம் நடத்த உள்ளதாகவும் . முஸ்லிம்களுக்கு சாதகமாக தாம் பேச உள்ளதாகவும் ஊடகச் செய்திகளுக்கு பிரதமர் தெரிவித்துள்ளார் .

தமிழர் மீது இணைப்பை திணிக்கும் இலங்கையும் தீர்வைத் திணிக்கும் இந்தியாவும்!- பூநகரான்


 தமிழர் மீது இணைப்பை திணிக்கும் இலங்கையும் தீர்வைத் திணிக்கும் இந்தியாவும்!- பூநகரான்
[ வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012, 01:47.58 PM GMT ]

இந்தியப் பாராளுமன்றக் குழு  இலங்கை வந்து திரும்பியிருக்கிறது. இந்தக் குழுவிற்கு மகிந்த எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லையென கொழும்பு தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழரிற்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான 13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மகிந்த எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லையென கொழும்புத் தரப்பு கூறுகின்றது. இல்லை, அது பற்றிப் பேசினோம் என இந்தியத் தரப்பு கூறுகிறது.

இரு நாடுகளினதும் பிரபல இரண்டு பத்திரிகைகளே இந்த முரண்பாடான செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தியத் தூதுகள் இலங்கைக்கு தூது வருவதும், வந்து அவமானப்பட்டுத் திரும்புவதும் ஏதோ ஒன்றும் புதிய விடயமல்ல.

இதிகாச கால அனுமன் காலந்தொட்டு தொடரும் நாடகமிது.

அன்று வந்த அனுமனோ இலங்காபுரியை எரியூட்டித் திரும்பினான. நேற்று வந்து குழுவின் முடிவோ, தமிழர் நெஞ்சங்களை மட்டுமன்றி பான் கீ மூன் அடங்கலாக மேற்குலகின் மனங்களிற்கே எரிச்சலையூட்டியுள்ளது எனலாம்.

தூது வந்த குழுவை வரவேற்ற மகிந்த அதே தூதுக் குழு ஊடாகவே தெளிவாக ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

13 வது திருத்தச் சட்டத்திற்கு அடிப்படையான “ராஜீவ் - ஜே ஆர்” இலங்கை இந்திய ஒப்பந்தமே (1987) இந்தியாவால்  இலங்கை மீது திணிக்கப்பட்டது என அவர் விபரமாக எடுத்துரைத்துள்ளார்.

இதனூடாக அவர் அதை அமுலாக்க இயலாதெனவும், இனியும் இந்தியா எதையும் செய்யும்படி இலங்கையைக் கோரக் கூடாதென தெளிவாக தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாதா?

வந்த அம்மா தாங்கள் சுற்றுலா வரவில்லையென்றும் அக்கறையுடன் வந்து நிலைமைகளை அவதானித்ததாகவும் கூறியுள்ளார்.  அப்படியானால் அவர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தன்னைத் தயார்படுத்தி ஆயுத்தமாக அல்லவா வந்திருக்க வேண்டும்.

இந்தியா  இலங்கை  மீது 1987 ல் அந்த ஒப்பந்தத்தை திணித்தது என்று மகிந்த கூறி முடிக்க முன்னரே, சிங்களவராகிய நீங்கள் தமிழர் மீது தனிச் சிங்களச் சட்டத்தை திணித்தீர்கள், தரப்படுத்தலை திணித்தீர்கள். இலங்கை ஒரே தேசமென்ற ஒற்றையாட்சியை அவர்கள் மீது திணிக்கிறீர்கள் ……

இப்போது புத்த சிலைகளையும் திணிக்கிறீர்கள். இந்தியாவிலும் தமிழர் இருப்பதால், இந்தியராகிய நாங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் தமிழரிற்கென ஒரு நாடு அல்லது அதிக அதிகாரம் அல்லது வலுவான பலம் உலகில் தமிழரிற்கு எங்கு அமைவதையும் அனுமதிக்க முடியாது.

எனவே தான் தீவின் பிரிவினையைத் தவிர்க்க அதிகாரத்தை பகிர்ந்து விரைந்து கொடுங்கள் என்று கேட்கிறோம் என்ற “ உண்மையை” சாணக்கியமாக உரைத்திருந்தால் போட்டுள்ள குங்குமப் பொட்டின் மதிப்பும் மகிமையும் அதிகமாகியிருக்கும்.

நீங்கள் ஈழத் தமிழர் மீது இணைப்பை திணிப்பதால் தான் இந்தியராகிய நாங்கள் அரசியற் தீர்வை உங்கள் மீது திணிக்க வேண்டியுள்ளது. வற்புறுத்துகிறோம். இனியும் இலங்கை இராணுவத்தை விலக்காது, சிறியளவு அதிகாரத்தை பெயரளவில் ஆவது (13) தமிழரிற்கு வழங்காது போனால் இந்தியாவாற் கூட சர்வதேச அழுத்தத்தில் இருந்து கொழும்பைக் காப்பாற்ற இயலாது என்பதை சுட்டிக் காட்டியிருக்கலாமே. விருந்து சாப்பிட்டுக் கொண்டே விடயத்தை கொடுப்பது தானே ஜனநாயகம்.

ஆம், இவ்வாறு பேசத் தெரிவது அரிது. தெரிந்தாலும் பேசுவது அதனிலும் அரிது. கனடாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இன்னுமாக இன்னும் பல நாடுகளிலிருந்தும் உறுதியாகப் பேச வந்த பொப் றே போன்ற பலரை மகிந்த நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இவரும் கனடாவில் எதிர்க்கட்சியைச் சாரந்தவராயினும், கனேடிய அரசின் விருப்பத்தையும் பிரதிபலித்தவர் என்பதை கொழும்பு அன்றும் கவனிக்கத் தவறிவிட்டது.

இந்தியாவின் அனைத்துக் கட்சிகளினதும் இந்திய தேசியக் குழுவாக வடிவெடுத்து வந்த இந்த அம்மா எதிர்க்கட்சித் தலைவி என்பதை கபடமாக பயன்படுத்த, ஜனாதிபதி மகிந்த, காங்கிரஸ் கட்சிக் கால தலைமைகளான இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி போன்றவர்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் பிரதமராக வரும்போது மொரார்ஜி தேசாய் (1979) போல எங்களோடு நட்புடன் இருக்கலாம் என்ற துரியோதனன் பாணி இராசதந்திரத்தையே பாவித்துள்ளதாகவே நான் பாரக்கிறேன்.

இவ்வாறு பேச்சுக்களிலும் விருந்துகளிலும் இராசதந்திரக் குளிகைகள் பரிமாறப்படும் ஏக காலத்தில் புலம்பெயர் தமிழராகிய எங்களின் சமகால பங்களிப்புப் பணிகளின் வடிவங்கள் எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பதை இலட்சியம் மாறாது அதன் வடிவங்கள் மாற வேண்டும் என்பதற்கூடாகவே பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

ஏனென்றால் உயிரைக் கொடுத்து போராடியும் எதுவும் கிடைக்க விடாது துரோகம் இழைத்து விட்டார்கள். அதாவது உயிர்களைக் கொடுத்தால் ஏதாவது விடிவு கிடைக்குமா என்றால் அதுவும் நடக்கவில்லை. ஆம், இலட்சியம் உயிரிலும் மேலானது தான்….உயிரைக் கொடுத்தால் ஏதாவது கிடைக்கும் என்பது நிச்சயமானால் இல்லாவிடின் யாருக்கும் பலனின்றி நாமே நம்மை அழிப்பது விவேகமாக புலப்படவில்லை.

எனவே புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் சாயம் பூசப்படாத, சமூக அமைப்பிற்களினூடான இனப் பணியினை மேலும் எவ்வாறு வலுப்படுத்த நாமென்ன செய்ய வேண்டும் என்பதே சம காலக் கேள்வியாகலாம். இந்த வலுப்படுத்தலிற்கு நேச சக்திகள் ஆன போதும் தடையாக உள்ளவை எவை, அவை எவ்வாறு இக்காலத்தில் வாசிக்க வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றியே புலம்பெயர் தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது.

இன்று மகிந்த தென் கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிரான ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை கைவிட இலங்கை அரசு சிந்திப்பதாகவும் தெரிகிறது. இவ்வாறு ஈழத் தமிழர் விடயம் இன்று சர்வதேசமயப் பட்டதிற்கும் அப்பால் உலக அழுத்த அரசியலாகவே ஆகிவிட்டது.

இந்த உலக அழுத்த அரசியலில் நமது இனக் கடமையான அரசியற் பங்களிப்பு என்ன? அது எவ்வாறு ஆதரவாக அமைய வேண்டும் என்பதே நம் காலத் தேடலாக இருக்க வேண்டும். இதை விடுத்து தமிழர் மத்தியில் சுயமய அரசியல் நடத்துவதை விடுத்து உலகமய அரசியலிற்குள் நாம் பிரவேசிக்க வேண்டும்.

நமது இனப் பிரச்சினையை இந்தியா தனது கட்டிற்குள் வைத்திருக்க இந்தியா இன்னமும் விரும்புகிறது. 1983 யூலை இனக் கலவரத்துடன் அன்றைய தமிழர் தலைவர் திரு அ அமிர்தலிங்கம் இந்தியா சென்று அன்னை இந்திராவைச் சந்தித்தபோது முதலிற் கேட்டது இந்த விடயத்தை ஐ நாவிற்கு கொண்டு செல்ல உதவுங்கள் என்பது தான். அதற்கு இந்திரா “இதனை நாங்கள் ஐ. நா கொண்டு சென்றால் மேற்குலகம் தங்களிற்கு தேவையான முறையில் தீர்ப்பார்கள். எனவே நாங்கள் பிராந்திய மட்டத்தில் தீர்த்துக் கொள்வோம்” என்று கூறியிருந்தமையை நாங்கள் கவனிக்க வேண்டும்.

உண்மையில், இந்தியா முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பிராந்தியப் பொறியை மீண்டும் பலப்படுத்துவதற்காக, அதற்கு சாதகமற்று எழுந்த 2002 “ரணில் - பிரபா” சமாதான ஒப்பந்தத்தையும், அதனூடாக மேற்குலகம் ஈழத் தமிழர் விவகாரத்தை கையாளும் வாய்ப்பையும் செயலிழக்க வைப்பதும் இன்னொரு நோக்கம் என்பதை புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் உணர்ந்து, கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், மற்றும் கனேடியத் தமிழர் பேரவை போல சர்வதேச அழுத்தத்துடன் சமாந்தரமாக பயணித்து கொழும்பிற்கான உலக அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.

கனேடியப் பாராளுமன்றத்தில் மீண்டும் காணொளியைக் இவர்கள் காண்பித்துள்ளார்கள். இவர்களிற்கான உரிய பலமான ஆதரவை நாம் வழங்க வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அதாவது, இந்தியாவை பகைக்காது அனுசரிக்கும் அதேவேளை, இந்தியாவாலும் நிலைமையை பிராந்திய வட்டத்துள் வைத்திருக்க இயலாத அளவு, அதை ஒரு சுயாதீன விசாரணை என்ற உலக மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

போர்க் குற்றம் என்பதற்கும் அப்பால் இது இன அழிப்பு விவகாரமாக உலக அழுத்தத்தை நேரடியாகக் கொழும்பின் மீதும், மறைமுகமாக இந்தியா மீதும் பிரயோகிக்க ஏதுவான வடிவத்தை தற்காலிகமாகவேனும் நாமெடுக்க வேண்டும்.

இதை விடுத்து, இந்தியாவையும் அமெரிக்காவையும் இவைகளுடன் பயணிக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பையும், எங்கள் மின் கணணிப் பக்கங்களில் விமர்சித்து இவ்வாறான இராசதந்திர நகர்வுகளிற்கு ஆதரவு தரவல்ல இன உணர்வுள்ள புலம்பெயர் தமிழர்களை இலட்சியம் கொள்கை போன்ற வார்த்தைகளால் கட்டிப் போடுவதை நாம் உணர்ச்சிக் கண்களை மூடி, அறிவுக் கண்களைத் திறந்து காண வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தினூடாக இந்திய மத்திய அரசையும், கனடாவிலிருந்தும் அமெரிக்காவிற்குள்ளிருந்தும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் வலுச் சேர்க்க வல்ல செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவையும் இந்தியாவையும் அதனுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பையும் இன ரீதியிலான உலகம் ஏற்கும் ஜனநாயக போக்கிற்கு இசைவான வடிவங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் இலங்கை ஒரு தீவு ஆனால் இரு நாடு என்ற இரட்டை நாட்டுக் கோட்பாட்டிற்கு எதிராகவே இலங்கையும், இந்தியாவும் செயற்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளிலும் தமிழர் இருப்பதால் இந்த நிலையே இன்று வரை தொடர்கிறது. இந்தியாவும் இலங்கையும் நண்பர்கள் அல்ல. ஆனால் தமிழரிற்கு நாடு மட்டுமல்ல அதிக அதிகாரங்கள் கூட கிடைக்கக்கூடாது என்பதே இந்தியாவின் தேசியத் தேவையாகவும் இலங்கையின் கொள்கையாகவும் உள்ளமையை நாம் புரிந்து செயற்பட வேண்டிய காலமிது.

விடுதலைப் புலிகள் பெங்களூரையும் திம்புவையும் டெல்லியையும் தாண்டி மேலெழுப்பி உலக நகரங்களிற்கு கொண்டு வந்த தமிழர் இனப் பிரச்சனையை சார்க் மாநாட்டின் ஊடாகவும், அணி சேரா அமைப்பின் ஊடாகவும், இந்தியாவும் இலங்கையும் முள்ளிவாய்க்காலுள் முடக்கி அழித்தமையே நிஜம்.

இந்தப் பிராந்திய மேற்குலகப் போட்டிக்குள் யாருடனும் பகைக்காது இயலுமான அளவு பெற்றுக் கொள்ள புலம்பெயர் தமிழர்களின் அரசியற் பங்களிப்பு அவசியம். அது இந்திய அக்கறையையும் தாண்டி மீறி, மேற்குலகின், ஐரோப்பாவின், சர்வதேசத்தின் கரிசனைக்குள் வர வேண்டும் என்பதே எனது இன்றைய பார்வையாகும்.

எனவே இந்தியத் தூதுக் குழுவின் தோல்வி நமது வெற்றியா தோல்வியா என்பதை காலமும் நமது அரசியல் இராசதந்திர நகர்வுகளும் தான் தீர்மானிக்க வல்லனவாக உள்ளன. சீதையைக் கடத்துவதிலும், சூதாட்டத்திலும் மகிந்த இன்று வெல்லலாம். இதில் இறுதி வெற்றி யாருக்கு என்பதில் புலம்பெயர் தமிழரின் அரசியற் பங்களிப்பே அதிகம் அவசியமானது என்பதே தமிழ்த்தாயின் சமகாலத் தேவையாகும்
(தகவலுக்கு நன்றி : தமிழ் வின் இணைய தளம் .)

இலங்கை அரசுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ஆசாத அலி ஆவேச உரை .

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்லாமிய இந்து  புனித தளங்கள் இடிப்பதற்கு முன்பாக பௌத்த இன புத்தார் சிலைகளை அகற்ற முன் வர வேண்டும் .முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ஆசாத அலி தன சுயக்கருத்தினை தெரிவித்துள்ளார் . இதனை தடுக்க அவரால் முடியாது என்று ஒப்புக்கொண்ட உறுப்பினர் அதை உடனே தீர்வு காண வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார் .

அண்மையில் தம்புள்ள மாநகரில் இஸ்லாமிய பள்ளி வாயிலை சேதப்படுத்திய புத்த இன குலத்திற்கு அவருடைய கருத்து கேட்டதற்கு .அந்த இன வன்முறைகள் அரசால் இயக்கப்படுவதை மறைமுகமாக சொல்வடிவில் கூற பிரதிபிக்கும் வார்த்தை மறுத்து மறைத்து வருத்தம் தெரிவித்த   அசாத் அலி அதைப்பற்றி கருத்து சொல்ல மறுத்துள்ளார் .

இருப்பினும் அங்கீகரிக்கப்படாத புனித தளங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் சொன்னால் முதலில் புத்தர் சிலைகள் அகற்றப்படவேண்டும் கூறியுள்ளது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இந்த பௌத்த இன செயலால் உலக அளவிலாக இலங்கைக்கு எதிர்ப்பு கூடிக்கொண்டே உள்ளதை பத்திரிகை வாயிலாக பல போராட்டங்கள் இஸ்லாமிய சமுதாயங்கள் செய்து வருகிறது .அதனால் இதனை அரசுவிரைந்து தீர்வு காண முன்வரவேண்டும் இன ,மத பேத , அடிப்படையில் இலாபத்தை எதிர்பார்த்து செயல்படுமானால் இலங்கை அரசு பெரும் நட்டத்தை ஏற்பட வாய்ப்புள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார் .

நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை அரசை எதிர்த்து எதிர் கண்டன சிறப்புக் கூட்டம் .



நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து  நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .

அயல் நாடுகளில் அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்படுமானால் அதை எப்படி மேற்கொள்வது சிறியக்குறிப்பு .

அயல் நாடுகளில்[குவைத்தில் }அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்படுமானால் அதை (எதிர் )மேற்கொள்வதுஎப்படி?.சிறியக்குறிப்பு .

இதில் இரண்டு வகைப்படும் விபத்து மற்றும் வழக்கு நிறைந்த இதர சம்பவம்ஒன்று. ''இரண்டு"நோய்வாய்ப்பட்டு இறப்பு .

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்து தகவல் கிடைத்த உறவினர்கள் செய்ய வேண்டியது .பின்பற்றவேண்டியது கீழேபுள்ளிகளிட்டு குறிப்பிட்ட எண்கள் .(13,14 ,1/1 , 2 ,16,17,6,7,8,9.10.11)

குவைத் :- தமிழ் நாட்டை சார்ந்த சகோதரர் மாரடைப்பால் மரணம் .


குவைத் நாட்டில் சலவையகத்தில் பணிப்புரியும் சகோதரர் சாதிக் புனைப்பெயர் (வெத்தலை சாதிக் )அவர்கள் மாரடைப்பால் மரணித்துள்ளார் . அவருக்கு வயது 42 .

சம்பவத்தன்று சகோதரர் பணிப்புரியம் கிடங்கிற்கு துணியை கொண்டு வருவதற்காக சென்று இருக்கிறார் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது  .

கீழே சரிந்த சகோதருடைய உயிர் அப்போது பிரிந்துள்ளது  சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகவும் வரவில்லையே என  காண சென்ற சக ஊழியர்கள் காணுகையில்  சகோதரர் இறந்து கடந்தார் .உடனே தகவலை தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் அதல் ஜினாஹியாவிற்கு தொலை தொடர்புக்கொண்டு தகவலை தெரிவித்ததுடன் . அவர்கள் இறந்த உடலை கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளனர் .

இருப்பினும் இவர் இறந்த செய்தியை தமிழ்நாட்டை சார்ந்த பாபா நாசம் பகுதிவாசி  சகோதரர்களுக்கு T.N .T.J  குவைத் தமிழ் நாடு தவுஹித் ஜமாஅத் அமைப்பு தகவலை அனுப்பி இருக்கிறது . மேலும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தகவலை தெரிவித்திருப்பதாக தகவலை தந்துள்ளார் சகோதரர் அஹமது ராஜா ஷரிப் .

மேலும் இந்த சகோதரருக்காக குவைத் T.NT.J அமைப்பு உடலை மீட்டு தாயகம் விரைவில் சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் விரைந்து செய்ய இருப்பதாகவும் அதற்கு மருத்துவ அணிச் செயலாளர் சகோதரர் சித்திக் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து கையோகப்படுத்தி சாவு கிடங்கில் வைத்திருக்கும் உடலை காணவும் சட்ட வழி முறைகளை கையாண்டு சிக்கல்களை  தீர்க்க விரைந்துள்ளதாகவும் சகோதரர் கூத்தாநல்லூர் ஜின்னாஹ்  தெரிவித்துள்ளார் . 


செக் பண்ணுங்க... ஹெல்த்தியா இருங்க,,,


"ஓட ஓட ஓட தூரம் குறையலை...
பார்க்கப் பார்க்கப் பார்க்க வேலை குறையலை...’
- இப்படி பாடாத குறைதான்...

வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி, வேலைக்குப் போவோருக்கும் சரி... எப்போதும் வேலை வேலை... வேலை மேல் வேலை

மரண படுக்கையும் மார்க்க சடங்கும் இஸ்லாம் மார்க்கத்தின் சொற்ப்பொழிவு .

குவைத் :- கடந்த வெள்ளியன்று மதியம் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற மார்க்க சொற்ப்பொழிவு கூனிமேடு சகோதரர் ஜனாப் . அஹமத் ராஜா ஷெரிப் மார்க்க சிற்றுரையை தமிழ் பேசும் இஸ்லாமியருக்கு வழங்கினார் .

இந்தியா வல்லரசு ஆகுமுன் நல்லரசைத்தேடுவது அவசியம் .

அண்மைகாலமாக இந்தியாவில் ஊழலும் , மதவாதமும் ,வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நாம் அனைவரும் வல்லரசு ஆகுமா ? கனவைக்கண்டு வருகிறோம். அதனால் நம்முடைய நாடு வல்லரசு ஆவதற்கு முன்பு  ஊழலற்ற நல்லரசைத்தேட வேண்டும் .

சமீபகாலமாக ஊழலுக்கு விளையப்போகும் அரசாங்கமும் ,வன்முறைக்கு ஆதரவாகும் அரசியல் இருக்கும் வரை நம்முடைய கனவு நினைவாகாது "அது கனவாகியேப்போகும் ".நல்லாட்சி செய்ய வல்லவர்கள் இல்லைநாட்டை கூறுப்போட கள்ளவர்களே உள்ளதால் கள்ளரசே ஆகுமே தவிர வல்லரசு ஆக்குவது கடினம் .

நேர்மை ,பொதுவுடைமை ,கடமைக்கானும் நேர்மையானஅரசியல் வாதிகள் முகவரியின்றி இருப்பதால் மக்கள் அவர்களை இனம் கண்டு அரசியல் களத்தில் கொண்டு வந்தால் மட்டுமே கள்ள அரசுக்கு தீர்வு காண முடியும் .

கூனிமேடு வளர்ச்சிக்கு இளைய சமுதாயம் ஒன்றுப்பட்டு பாடு படவேண்டும் கூனிமேடு குரல் இணையதளம் கருத்து .



கடந்த சிலவருடங்களுக்குமுன்பு வெளிநாட்டின் மீது மோகம் கொண்டு .அதற்காக படிப்பை தவற விட்டு வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற படிப்பறிவற்ற சகோதரர்கள் வெளிநாடு மோகத்தை கலைத்து இனி  வரும் காலங்களில் இதுப்போன்ற அவல  நிலையை மாற்றி இனி வரும் சமுதாயம் சிறந்த அறிஞர் சமுதாயம் உருவாக்க வேண்டும் .

அதனால் இனிமேல் உருவாகும் பிள்ளைகளை வெளிநாட்டு கனவை தகர்த்து இதுப்போன்ற செயல்களில் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்தாமல் பாட புத்தகத்தில் கவனம் செலுத்த போதிய வாழ்வாதாரத்தை அவர்களுக்கு தேடித்தருவது நமது கடமையாகும் .இதனால் நம்முடைய சமுதாயம் வளர்சிக்கண்டு சிறந்த கல்வியாளர்கள் ,சாதனையாளர்களை உருவாக்க பெருதுவக்க பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த முன் வரவேண்டும் .

மேலும் தற்போது தலைவிரித்திருக்கும் வட்டி ,வரதட்சனைப் போன்ற இழிவான செயல்களில் ஈடுபடாதவாறு காக்க இன்றைய  இளைஞகள்   களத்தில் இறங்கி முழுமையாக போராட வேண்டும் . 

அண்மைகாலமாக குடி, சூதுவுக்கு,அடிமையாகிருக்கும் சமுதாயத்தை உணர்த்தி திருத்த முன் வரவேண்டும் . பகைமையை மறந்து ஒற்றுமை மலர  நட்பால் மட்டுமே முடியும் என்பதால் ஒற்றுமை என்ற இணைப்பு கயிறைப்பிடித்து  முன்னேற்றிட பாடு பட வேண்டும் ."இயலாமை என்பது முடியாது நினைப்போருக்காகும்" !"முடியும் நினைப்போருக்கு அது வலிமையாகும் ".

கூடங்குளத்தில் 40 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும்: மத்திய அரசு

கூடங்குளத்தில் அணு உற்பத்தி செய்ய அப்பகுதி மக்கள் உதயகுமார் தலைமையில் 8 மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து 8 மாத காலமாக அணு உலை பணிகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடங்க தமிழக அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஆயத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஹாட்ரன் எனப்படும் வெந்நீர் மூலம் அணுஉலை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் எரிபொருள் நிரப்புவதற்

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் யார் ? அரசியல்வாதிகளின் அதரவு எவருக்கு ?



இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஏவுகணை தொழிற்நுட்ப வல்லுநருமான ஏ.பி.ஜே அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத்தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன.இப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவராக யாரை முன்னிறுத்தலாம் என்

பாகிஸ்தானில் நடைப்பெற்ற விமான விபத்து பயங்கரவாத சதியில்லை அந்த அரசு ஊடகங்கள் தெளிவான பதில்கள் ..

கடந்த 21 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் எந்த பயங்கர வாதத்திற்கும் தொடர்பில்லை அதுவோர் விபத்தென்றே பாகிஸ்தான் அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்ததால் .ஊடக செய்தியாளர்கள் அதை ஒப்புக்கொண்டனர் .

இலங்கை அரசுக்கு கூனிமேடு குரல் கண்டனம் .


குவைத் :-இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 2000  நபர்களிக்கொண்ட பௌத்தர்களால் பள்ளிவாயில்இடித்து தகர்த்ததற்காக கூனிமேடு குரல் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது . மத வாத வெறிப்பிடித்த காவிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கு புனிதஸ்தலம் அயோக்கியர்களால் தகர்க்கப்பட்டிருப்பதை கேள்வியுற்று மனம் வேதனை அடைந்ததுடன் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசு கண்டுக்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி இருக்கிறது.

மதப் பேரணி என்ற இதன் அடிப்படையில் இந்தியாவில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பிற்கும் ,இலங்கை பழமை வாய்ந்த பள்ளியைஇடித்து தகர்த்ததற்கும் ஏதோ இரத்த பந்தம் இருப்பதாக தெரிகிறது .

இந்தியாவின் ஏவப்பட்ட அக்னி G5 விண்கலத்தினால் உலக நாடுகள் கவலை .



இந்தியா கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்னி 5 என்ற விண்கல  ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவிசோதித்துசாதனைப்படைத்தது .இதனை அடுத்து இந்தியா விஞ்ஞானியானதிரு . மருத்துவர் விஜய்குமார்சரஸ்வத் ஊடகத்திற்கு தெரிவித்த அறிக்கையில் அது 5000 கி .மீ தூரத்தில்தாவி தாக்க கூடிய திறன் உள்ளதாக அமைத்திருப்பதாக தெரிவித்தனர் .

இந்த ஏவுகணை உருவாக்குவதற்கு காரணம் இந்திய இராணுவத்தை பலப்படுத்த நோக்கம் மட்டுமே .எந்த அட்டூழியத்திற்கும் ,எதிர்ப்போர்  தாக்குதலுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதை திட்டவட்டமாக இந்தியா தகவலை உலக ஊடகத்திற்கு தெரிவித்திருந்ததும் .

இதனை எதிர்த்து வல்லரசு நாடுகள் கண்டனத்தை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டனர் .
தற்போது விண்ணில்ஏவப்பட்டிருக்கும் அக்னி5 ஏவுகணையால் இந்தியாவின் நோக்கம் எந்த அடிப்படையில் சார்ந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளதாகவும். எதிர் வாதப்போருக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டு இதனை உருவாக்கி இருக்கக் கூடும் என்பதையும் வருத்தம் தெரிவித்தனர் .

இதனிடையில் நேற்றுமுன்தினம்சீன விஞ்ஞானிகள் பீஜைங்கில் இந்தியா சோதித்திருக்கும் விண்கலம் 5000 கி .மீதூரம் கடந்து தக்கக் கூடிய திறன் "வாயிந்தது அல்ல அதை விட 8000 கி .மீ தூரம் கடந்து தாக்கக் கூடியசக்தியும்திறன் வாய்ந்ததாக உள்ளதாக தெரிவித்தனர் .


நாடுகள் கவலை கொள்வதை தவிர்க்கும் வகையில் ஏவுகணையின் திறனை இந்திய அரசு தெரிந்தே குறைத்து கூறுகிறது’’ என்றார்.சீன தேசிய ராணுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஜாங் ஜாவ்ஜாங் கூறுகையில், ‘‘சீன தரவரிசை அடிப்படையில் 8,000 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கக் கூடியது ஐசிபிஎம் ஏவுகணை. இந்தியாவின் அக்னி 5 அந்தளவு திறனை விரிவாக்கம் செய்யத்தக்கது’’ என்றார்.

பள்ளிவாசல் தகர்ப்பு: இலங்கையில் மற்றொரு இனவாத யுத்தத்துக்கு வித்திடப்படுகிறதா?


தம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றில் கலந்து கொண்டனர்.

'புனித பூமி எனப் பிரகடனப்படுத்தப்பட்டதும் புனித ரங்கிரி விகாரை அமைந்துள்ள துமான தம்புள்ளை புனிதப் பிரதேசத்தில் அந்நிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் இருப்பது சட்டவிரோதம்' என்ற அடிப்படையில் பேரணியாளர்கள் நகரில் அமைந்திருந்த முஸ்லிம் பள்ளிவாயில் ஹிந்துக் கோவில் ஆகியவற்றை இடித்துத் தகர்த்துளனர். இதனால் இப்பிரதேசத்தில் பெரும் பதட்டம் நிலவியது.

அப்பிரதேசத்தில் சுமார் 50 வருட காலமாக முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்துவரும் மேற்படி பள்ளிவாயில் மீது முதல் நாள் இரவு வெடிகுண்டு வீசப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் எவருக்கும் அதனால் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் தி.மு.ஜயரத்ன 'நீண்ட கால பௌத்த வரலாற்றினைக் கொண்ட தம்புள்ள புண்ணிய பூமியிலோ அல்லது நாட்டில் அமைந்துள்ள ஏனைய புண்ணிய பூமியிலோ சட்டவிரோத நிர்மாணப் பணிகளுக்கு இடமளிக்க அரசாங்கம் தயாராக இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் அரை நூற்றாண்டு காலமாக உயர்ந்த மினராக்கள் எதுவும் இன்றி ஒரு சாதாரணக் கட்டிடமாக இருந்துவரும் முஸ்லிம் பள்ளிவாயிலையும் ஹிந்துக் கோவிலையும் இடித்துத் தகர்த்துள்ள இந்த இனவாத நடவடிக்கை முஸ்லிம் மக்களையும் ஹிந்து மக்களையும் பெரிதும் புண்படுத்தியுள்ளது. 

இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இந்தத் துவேஷப் போக்கு எதிர்காலத்தில் இலங்கை மக்களின் ஒற்றுமையான சகவாழ்வைப் பெரும் கேள்விக்குறியாக்கும் என அஞ்சப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் போது, அரபு நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலம் சிங்கள பௌத்த இனவாதிகளால் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ள சம்பவம், உலக முஸ்லிம் நாடுகளின் அதிருப்திக்கு ஆளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                                               நன்றி இந்நேரம் இணையதளம்

பாகிஸ்தானில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 127 நபர்கள் சம்பவ இடத்தில் இறந்த பரிதாபம் .

இஸ்லாமாபாத், ஏப். 21-
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு போஜா ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் புறப்பட்டு சென்றது. நேற்று மாலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரை இறங்க தயாரானபோது சாக்லா விமான தளம் அருகே கோதுமை வயல்கள் நிறைந்த பக்ரியா குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் தீப்பிடித்தது.

விலைமதிப்பற்ற நிலம் !


பிறவி ஒன்றே...இருப்போம் இருக்கையில் 
அன்போடுதாயை அரவணைப்போம்
உள்ளத்திலே நீங்கா இடம் வகிப்போம் !

பாட்டி வைத்தியம் நோயை குணப்படத்தும் மகத்துவம் .


பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறதுஅன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது! தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...!

பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. 

வாகனம் ஓட்டுனர் தேவை .

குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பத்து மணி நேரம் பணிப்புரிய நல்ல தேர்ச்சிப்பெற்ற அனுபவம் வாய்ந்த வாகனம் ஓட்டுனர் தேவை .விருப்பமுள்ளோர் தொடர்புக்கொள்ளவும் .

சகோதரர் கூனிமேடு அபூபக்கர் - 66010564 

கூனிமேட்டில் சூசகமாக குத்துகை விடப்பட்டது .!

கடந்த மாதம் வெள்ளிக்கிழமை இந்த குத்துகை தொடர்பாக பள்ளிவாசலில் இரு சாராருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது .யார் குத்துகை விடுவது ? வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில் எவரும் இதில் ஈடுபடக்கூடாதென்பது வாதமாகும் .

இரு சாராருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் ஏற்பட்டதால்   குத்துகை விடுவதில்  கேள்விக்குறியாகியது .அதனால் மறு நாள் குத்துகை விடுவார்கள் எதிர்பார்க்கப்பட்ட குத்துகை விடாமல் மௌனம் காக்கப்பட்ட்டது . 

கூனிமேடு குரல் வலைப்பதிவு இணைய தளமானது .


  • "அல்லாஹ்"  கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்"    தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் .)
  • எவர் ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை ஏவுகிறார்களோ  அவருக்கு நல்ல  காரியத்தை செய்தவருடைய கூலியைப் போன்று  கிடைக்கிறது .(அல் ஹதீஸ் .)
  • எந்த ஒருக்காரியம் செய்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும் இறையச்சம் இருக்கவேண்டும் இறைப்பொருத்தம் நாட வேண்டாம் .(அல் குர்-ஆன் ).
சில நாட்களாக கூனிமேட்டிற்கு பொதுவாக ஓர் இணைய தளம் மக்களுக்காக தரவேண்டும் .அதில் மக்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூனிமேடு குரல் நிர்வாகத்திற்கு நெடுநாள் ஆசையாக இருந்தது .அதை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்ட நிர்வாகம் இன்று அதை பூர்த்தி செய்தது.

மேலும் மக்கள் அளிக்கும் எந்த  விமர்சனமாக இருந்தாலும் அதை உடனே இதில் இடம் பெயர செய்வதுதான் எங்களுடைய உயரிய நோக்கமாகும் .
இனி வரும் காலங்களில் சுய கருத்துகளை "தவிர்த்து " மக்களுக்கு தேவையான அத்துணை கருத்த்துகளும் உடனுக்குடன் பரிமாறப்படும். 

கூனிமேட்டில்  நடக்கும் அத்துணை உண்மைகளும் ... உள்ளது "உள்ளப்படியாகவும் "நீதிக்கு நெறியாகவும் கடமை உணர்ந்து சில சட்டவிதிகளுக்கு (ஷரியத் மார்க்க சட்டத்திற்கு )உகந்ததாக இந்த இணைய தளம் இயக்கப்படும் .
இதில் மக்களிடும் கருத்துக்கு இந்த இணைய தளம் பொறுப்பேற்காது,.!



கூனிமேடு தலைவரை சந்தித்து கபர்ஸ்தானுடைய மேம்பாடிற்கு அவருடைய பங்களிப்பு பற்றி கேட்டறிந்தார் வலைப்பதிவு பிரதிநிதி!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கூனிமேடு கபர்ஸ்தான் மேம்பாடு பணிகளில் ஈடுபட்டிருக்கும்  குவைத் வாழ் கூனிமேடு இஸ்லாமிய அமைப்பான (K.M.J.K)கூனிமேடு முஸ்லிம் ஜமாத் குவைத் அவர்கள் கூனிமேடு குவைத் வாழ் சகோதரர்களிடம் பணம் வசூலிட்டு அதைக்கொண்டு மேம்பாடு செய்ய முடிவுக்கொண்டனர் .இவர்களுக்கு கைக்கோர்த்து ஊர் மக்கள் ஆதரவு தெரிவித்ததால் இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சகோதர்கள் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும் நமது தலைவர் இதற்காக என்ன பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பதை அறிந்துக்கொள்ள தலைவரை அணுகி கேள்வி எழுப்பியப்போது அந்த அமைப்பும் ,ஊர் மக்களும் கபர்ஸ்தான் மேம்பாடு செய்ய துப்பரவு பணிகளை செய்யக்கோரி வலியுறத்தியதால் அதனை நிறைவேற்ற செய்யும் நோக்கமாக சமீபத்தில் செய்யப்பட்ட அந்த துப்பரவு பணியென்றும் .மேலும் இவர்கள் அதற்காக எதாவது கோரிக்கை விடுத்தால் இதற்காக செய்ய ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் பணம் இழந்து தவிக்க வேண்டாம் மக்களுக்கு ஆசிரியர் வேண்டுகோள் !



தற்போது காதிம் சூனாகுவதாக  பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் நமது மக்கள் குரல் நிர்வாகம் கூர்ந்து கவனித்து வருகின்றது .

ஆகவே எவர் எதையாவது கூறினாலும் இந்த மக்கள் குரலில் செய்தி தெளிவாக வெளிவராத வரையில் பணம் தந்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது மேலும் முன் பணம் தந்த ஏமார்ந்த சகோதரர்கள் எப்படியாவது பணத்தை திருப்பி வாங்கும்படியும் அல்லது நிலைவையில் வைத்து சந்தர்பம் கூடும்போது மாற்றித்தரும் படி கோரும் படி கேட்டுக்கொள்கிறது .

உண்மையான தகவல் சேகரிக்க இந்த மக்கள் குரல் அவதிப்பட்டு வருவதை தங்கள் கவனத்தில் கொணர்ந்திட விரும்புகிறது  .

ஸ்பான்சர்ஷிப் அமைப்பு குறைக்க புதிய தொழிலாளர் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் குவைத் சமூக விவகார அமைச்சகம் தகவல் !




சமூக விவகார அமைச்சகம் மற்றும் புதிய 
தொழிலாளர் துறை தெரிவித்திருப்பது யாவை என்றால் தொழிலாளர்சட்டத்தை உடனே அமல்படுத்தும் தொடங்கும் என்று அறிகுறிகள் உள்ளன கோடைகாலத்தில் இருந்து தொடங்கி, ஸ்பான்சர்ஷிப் முறைமைபடிப்படியாக இந்த ஆண்டு, அரபு டைம்ஸ் உள்ளூர் தினசரி அல் முஸ்தக்பல்( Mustaqbal )மேற்கோளிட்டு கூறியுள்ளது.

ஒரு மூல அமைச்சகம் பாடர் அல் Duwailah மற்றும் முகமது அல் அபாசி தினசரி  உள் அமைச்சக அமைச்சர்களை சேர்க்கப்பட்டு விவாதங்கள நடமறைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்ற  நிலையில் 
விரைவில் கலந்தாலோசித்து எந்தநேரமும் அமுல் படுத்தலாம்  தெரிவிப்பதுடன் .

பல தடைகளை இந்த சட்டத்தை செயல்படுத்த முட்டுக்கட்டை ஆனால் தற்போதைய அமைச்சர் அதை செயல்படுத்ததீர்மானிக்க முடிவு செய்துள்ளதாகவும்  தினசரி நாளிதழ்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் 

அனைவரும்இதற்காக ஒன்றிணைந்து அமைச்சகம் செயல்பட்டால் இந்த சட்டம் விரைவு படுத்தப்படும் எனவும் அரப் டைம்ஸ்ஊடகங்களுக்கு தகவல் வழங்கி உள்ளது .பிரச்சினைகள் முடிவுக்கு மற்றும் இந்தமுடிவை பிராந்திய மற்றும் சர்வதேச மாவட்டங்களில் குவைத் நிலை ஏற்றம் தரும் அரசுக்கு ஆதாயம் உண்டாக்கும் விதமாகும் எனவும்  .

ஸ்பொன்சர் ஷிப் முறையால் பல தவறுகள் நடைமுறையில் உள்ளதை இந்த சட்டம் நடைமுறைபடுத்தினால் தீர்க்க தீர்வாக இதுவாகும் தவறுகள் இதன் மூலம் கலைக்கப்படும் எனவும் தினசரி நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது .


பதவி ஓர் அமானிதம்

             பதவி ஓர் அமானிதம்             
தொகுப்பை சேகரித்தவர் :- ஆசிரியர் .முபாரக் .
தொகுப்பு :முஹம்மத் இன்சாப் பிரான்ஸ் .

பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.
அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தொகுப்பை வழங்கியவர்:- :சகோதரர் அஹமத் ராஜா ஷரிஃப்.

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

கூனிமேட்டில் நேற்று விபத்து .! விபத்தில் சிக்கி சகோதரர் மஸ்தான் அவர்கள் மரணமடைந்தார்.

4:04 புதன் : நேற்று இரவு 8:30 மணிக்கு புதுவையிலிருந்து சென்னையை நோக்கி சென்ற டாட்டா இண்டிகா வாகனம் கூனிமேடு திப்புசுல்தான் வீதி எதிரில் கிழக்கு கடற்கரைச் பிரதான சாலையில் சகோதரர் மஸ்தான் வாகனம் வருவதும் கண்டும் காணாமல் சாலையை கடுக்க முயன்றார் அப்போது எதிர் பாராத விதமாக சகோதரர் மஸ்தானின் மீது வாகனம் மோதியதால் விபத்தில் சிக்கினார் .

இதை அறிந்த கூனிமேடு தலைவர் சகோதரர் ஷாபுதீன் அவர்கள் மற்றும் ஊர் சகோதரர்கள் அருகிலிருக்கும் கனக செட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க எடுத்து விரைந்தனர் அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உடனே எடுத்து விரைந்தனர் .

.அனுமதித்த சில மணிநேரத்திலே அவர் மரணமடைந்தார் . இன்று அதிகாலை 5 மணிக்கு இறந்த அவரின் சடலம் புதுவை அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நிலையில் அந்த சடலத்தை மீட்டு இன்று மாலை 5 மணிக்குள் அடக்கம் செய்யலாம் என தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றது .

இரங்கல் 

கூனிமேடு திப்பு சுல்தான் வீதியில் வசிக்கும் மஸ்தான் எனும் முட்டக்கார் மஸ்தான் . வயது சுமார் 45 .அவர்கள் இன்று அதிகாலை இறையடி  அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் . அன்னாரின் உடல் இன்று கூனிமேடு கபரஸ்தானில் அடக்கம் செய்யலாம் என தகவல் வந்துக்கொண்டிருக்கிறது .காண விரும்பும் சகோதரர்கள் ,தாய்மார்கள் (சகோதரிகள் )திடீர் நகரில்அவருடைய வீட்டில் காணலாம் .


தகவல் : ஜனாப் :அப்துல் ஹை. தகவல் சேகரிப்பு : சகோதரர் :ஷேக் அஹமது .

ஹவல்லியில் நடந்து முடிந்த மார்க்க விழிப்புணர்வு பயான்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த வுடன் வாரம்தோறும் நடத்தப்படும் மார்க்க சிற்றுரையை இம்முறை சகோதரர் மௌலான மௌலவி ஜலில் ரப்பானி வழங்க ஏராள மானோர்   கலந்துக்கொண்டனர்.

 சகோதரர் எடுத்துக்கொண்ட தலைப்பு மறுமையின் வெற்றி ?நினைவை ஏற்படுத்தும் வகையில் செய்த சொற்ப்பொழிவு குறிப்பிடத்தக்கது .அதன்பின்
ஜனாஹிஸ் அரபு நூலில் இருந்து சான்றாக அதில் இடம்பெயர்ந்த அத்துணை கருத்துக்களும் நம்முடைய சகோதரர் விரிவாக விளக்கினார் .

ஒரு சடலத்தை எப்படி குளிப்பாட்ட வேண்டும் .அனுசரிக்க வேண்டும் போன்ற பல வகையான செய்திகளை அந்த  நூலில் இடம்பெயர்ந்த கருத்துக்களை மொழிப்பெயர்ந்து நம்முடன் பகிர்ந்துக்கொண்டார் .இப்புத்தகம் சில தினங்களுக்கு முன்புதான் குவைத்தில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்  இம்முறை ஒன்றரை மணிநேரம் நீண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.இவருடன் கூனிமேடு சகோதரர் மௌலான மௌலவி இஷாக் மற்றும் இவருடன் நெல்லிக்குப்பம் நகைப்பை அசரத் ஜுல்பிகர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .

இதன் பின் மக்களிடையே எழுந்த சந்தேகத்தை சகோதரர் விளக்கம் அளித்தார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்