சமுதாய இணைய தளங்களுக்கு உன்னதொரு வழிக்காட்டி வந்தே மாத்திரம் இணைய ஆசிரியர் திரு .சசிக்குமார் .


இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . 

ஒரு காவல் நிலையத்திற்கு சென்று நீதி நிலை நாட்டுவதற்கும் அங்கே இலஞ்சம் தந்தால் மட்டுமே நீதிக்கே நீதி கிடைக்கும். ஒரு வழக்குறைஞரிடம் உண்மையை சொல்லி அதற்கு நியாயம் பெற்று தர கேட்டுக்கொண்டால் அங்கேயும் அந்த சகோதரர் நியாயத்திற்கு போராட அதற்கு தகுந்த கூலியை நிர்ணயித்து பணத்திற்காக போராடுவார் .

ஒரு நண்பன் ,மற்றொரு நண்பனிடம் பழகுவான் அப்போது அந்த நண்பன் அவனிடத்தில் அன்றைய சிலவுக்காக ஏதாவது கிடைக்குமா என்றே எதிர்பார்ப்பான் .

ஒரு உடன் பிறந்த சகோதரர் தன்னுடைய சகோதரருக்கு உதவி செய்ய வேண்டுமானால் அந்த சகோதரருக்கு தேவையெனும் பட்சத்தில் கேட்டால் மட்டுமே உதவி செய்ய முன்வருவார் .

ஒருத்தாய் தன "சேய்"கண்ணீர் விட்டு ஓலமிடும் வரையில் தாயிப்பாலூட்ட மறுப்பால் !அப்படியிருக்க !

இன்று விஞ்ஞானம் அதி வேகத்தில் உயர்ந்துக்கொண்டே உள்ளது . அதில் பல்வேறு நபர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டிருக்கும் நிலையில்.

தமிழ் நாட்டை சார்ந்த ஒரு சகோதரர் நம் அனைவருக்கும் தேவையான தகவல்கள் நம் தேவைக்கு சேகரித்து தொகுத்து நமக்குமுன்பாக தர காத்திருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது .நாம் இன்று சமூக ஆர்வலராக பலர் பரவலாக வந்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையோடு நிலைத்து நிற்க விரும்புகிறோம் . ஆனால் தமிழர் சசிக்குமார் போன்ற இளைஞர் சாதனையை நினைக்கையில் அவருடைய சிந்தனைக்கூட்டில் என்ன வைத்திருக்கிறார் என பிரமிப்பு ஊட்ட செய்கிறது . அவர் தலையில் உள்ளது மூளையா அல்லது இயந்திர மென்பொருளா என நம்மில் கேள்வி எழுப்பும் அளவில் அவருடைய திறமை வியப்பிலாழ்த்துகிறது. .
அவர் செய்யும் இந்த பணிகள் தன்னுடைய சுய வேலைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இல்லாமல் பலருக்கு உதவ வேண்டும் நோக்கத்துடன் செயல்படுவது அவருடைய முயற்சிக்கு வெற்றியின் இலக்கணமாகும் சாதனையுமாகும்.

இன்று ஒரு ஆலோசனையை அறிந்தவரிடம் கேட்டால் அதை பகிர்ந்துக்கொள்ள கீழும் மேலையும் பார்க்கும் தருணத்தில் எந்த ஒருப்பொருள் மேலையும் ஆசைப்படாமல் ,பொருள் ஈட்ட வேண்டும் நோக்கமற்று தன்னுடைய சமுக பணியை மக்களுக்கு செய்து வருகிறார் .

அதுவே வெப் டெவலப்பர் அவர்களிடம் யோசனைக் கேட்டால் கூட பைசாவுக்கு ஆலோசனைத்தரும் கால கட்டத்தில் பைசா இல்லை என்று சொல்லிவிட்டால் நைசாக நழுவும் பட்சத்தில் எவர் எப்போது தொடர்புக்கொண்டு ஆலோசனை கேட்டாலும் அதற்கு தயங்காமல் மறுக்காமல் உடனே ஆலோசனை வழுங்கும் இவரின் மாண்பு போற்றுதலுக்குரியது . சில வெப் தேவலப்பறை பார்த்து இதுப்போல சொன்னால் பிழைக்க தெரியாத மனிதராக இருப்பான் அல்லது இளைத்த வாயனாக இருப்பான் சொல்லும் பலரின் நோக்கம் பணத்தின் மேல் ஏறி எண்ணம் சவாரி செய்யவே நினைக்கிறது. ஆனால் இந்த தமிழனின் நோக்க்மோ தனித்து அனைவரையும் உதவ வேண்டும்.அறிந்ததை மற்றவருக்கு அறிய வைக்க வேண்டும் நினைக்கும் மாண்பு இன்றைய வாலிபர்களுக்கு நற் சான்றாகும் . 

மனிதன் வாழ்வில் பணம் என்பது ஒரு அங்கம்தான் இருப்பின் நாம் அறிந்ததை பிறருக்கு அறிவிக்கும் போது கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது நினைத்து இந்த சகோதரர் தகவலை மக்களுக்கு இணைய தளமூலமாகவும் வலைப்பதிவு வாயிலாகவும் கைப் பேசியின் வழியாகும் விளக்கும் தருவது போன்றவற்றால் அவருடைய சமூகப்பணி தொடர்ந்து நீண்டுள்ளது சொல்லலாம் . 

சாதனைஎன்பது ஏதாவது கண்டு பிடித்து அதில் வல்லுனராக திகழ்ந்து வானுயர பெயர் திகழ வேண்டும் நினைக்கும் பலர் மத்தியில் தற்பெருமைக்கு இடம் தரமால் மக்களின் சேவைக்காக மறைமுகமாக செய்யும் இவரின் செயல்தான சாதனையாகும் . இவருடைய சாதனைப் பின்னணியில் 

அவர் நம் தமிழ் மீது வைத்துள்ள பற்று .கணணி துறையில் கவனம் செலுத்தி அதினுள் இருப்பதை அறிந்து புரிந்து தெளிந்து இருப்பது .அதில் மீது தன்னை முழுமைபடுத்தி வைத்திருக்கும் கூடுதல் செலுத்தும் ஈர்ப்பே ... அதில் தன்னை பொருத்திக்கொண்ட கவனமாகும் .ஊர் வளம் பெற வேண்டும் நாடு நாடு நலம் பெற வேண்டும் தமிழ் தலை தூக்க வேண்டும் ,தமிழன் புகழ் உயர்ந்தோங்க வேண்டும் நினைக்கும் அந்த சகோதரர் சசிகுமார் இணைய தளத்தின் உள்ளே சென்றுப்பாருங்கள் அதில் இடம்பெற்றிருக்கும் தகவல் சற்று பிரமிக்க வைக்கும்.  www.vandhemadharam.com .
"தான் கற்றதை பிறருக்கு கற்பிக்கும் இவரின் உணர்வுக்கு நாம் மதிப்போம் ".!

"அவருடைய எண்ணம் ஈடேற பிரார்த்திக்கும் ".ஆசிரியர் கவிஞர் இ .முபாரக்.  

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்