உருது முஸ்லிம்களின் மொழியா?

 நச்சுப் பிரச்சாரம் நூல்கள் - வெளியீடுகள்  பார்ப்பன இந்து மதம் புதிய கலாச்சாரம் ! 

தமிழ் மொழியே இந்து மொழிதான்இந்திய  தமிழர்கள் இந்துக்கள்தான் என்று காட்டி முஸ்லிம்களுக்கு இங்கே இடமில்லை என்று – மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் இலக்கணத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு பொழிப்புரை எழுதப்படுகிறது. 

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி! 

இரங்கல் செய்தி !

இன்ன லில்லாஹி வாஇன்ன இளைஹி ராஜிஹூன் !
""""INNA LILLAAHI VAAINNA ILAHI RAAJIHOON ""!
கூனிமேடு பஞ்சாயத்போர்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மர்ஹூம் .அப்துல் கப்பூர் அவர்களின் மூத்த மகனான ஜனாப் .சையத் ஹுசைன் சுனாபா(இமாம் வீடு ) அவர்கள் இன்று அதிகாலை மரணம் .அவருக்கு வயது சுமார் 67 ஆக இருக்கும் !

அன்னார் அண்மையில் மலேசியாவில் வாழ்ந்து தற்போது கூனிமேட்டில் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .அன்னாரின் இறுதிச் சடங்கு அசர் தொழுகைக்கு பிறகு கூனிமேடு கடற்கரையில் அமைந்திருக்கும் கபரஸ்தானில் (மயானத்தில் )அடக்கலம் செய்யப்படும் .

மேலும் அன்னார் செய்த அத்துணை பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் நுழைய ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம் !

சென்னை வண்ணார பேட்டை லாலா குண்டாவில் நடந்தது என்ன! SDPI கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள் !

சென்னை வன்னரபெட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்களான இவர்கள் கறிக்கடை மற்றும் சிறிய தொழில்களை செய்து வருபவர்கள்.ரத்ததானம்,கல்வி உதவி என்று தமுமுக இங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதால் வட சென்னை மாவட்டத்தில் தமுமுகவின் ஆதரவாளர்கள் அதிகமுள்ள பகுதி இது.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக SDPI,PFI அமைப்பு இங்கு வேரூன்ற முயற்சி செய்து வருகிறது.குடிகாரர்கள்,பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்று இவர்கள் யாரை சந்தேகப்பட்டு கின்றனரோ அத்தகைய நபர்களை தங்கள் அடையாளங்களை மறைத்து கொண்டு தாக்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 16 வயதுள்ள ஒரு முஸ்லிம் இளைஞர் அவரது வீடு அருகில் SDPI,PFI அமைப்பை சேர்ந்த இளைஞர்களால் தாக்கபடுகிறார்.இந்த தாக்குதலில் அவரது கையில் முறிவு ஏற்படுகிறது.இதையடுத்து அந்த இளைஞரின் குடும்பத்தினர் தமுமுக பகுதி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சொன்ன தமுமுகவினர் அந்த குடும்பத்தினர் கேட்டு கொண்டதால் SDPI அமைப்பின் நிர்வாகிகளிடம் நேற்று இரவு நியமத் மற்றும் மற்றொரு தமுமுக சகோதரர் இருவரும் இது குறித்து விளக்கம் கேட்க அவர்களும் விளக்கம் அளித்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் திடீரென அங்கு இருந்த அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் நீங்க எண்டா இந்த பிரச்னையல தல்யிடுறீங்க என்றவாறே தமுமுக நிர்வாகி நியமத் என்பவரை தாக்க உடனே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் அடிக்க ஆரம்பித்தனர்.தமுமுக நிர்வாகிகள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் தமுமுக சகோதரர்கள் திரள ஆரம்பித்தனர்.இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் நன்கு பயிற்சி பெற்ற SDPI,PFI தொண்டர்கள் தாக்கு பிடிக்க முடியாமல்  ஓட்டம் பிடித்தனர்.காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால் பெரும் கலவரம் தவிர்கபட்டது.மேலும் ஒரு கடையில் SDPI அமைப்பினரால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களும் போலிசால் கைப்பற்ற பட்டன.

தமுமுகவை சேர்ந்த 6 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் SDPI அமைப்பினர் சென்னை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்க பட்டுள்ளனர்.இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தமுமுகவினர் குடிபோதையில் பெண்களை கிண்டல் செய்ததை தட்டி கேட்டதால் தங்கள் மீது  தாக்குதல் நடத்தியதாகவும்,ஜவாஹிருல்லா எம் எல் ஏ தூண்டுதலில் தாக்குதல் நடைபெற்றதாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர்.குடிபழக்கம் இருந்ததால் தமுமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிலரை(பெயர் குறிப்பிட விரும்பவில்லை) தங்கள் அமைப்பில் சேர்த்து கொண்ட இவர்கள் இது போன்ற பொய் செய்திகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.

மேலும் வட சென்னை மாவட்டம் முழுவதும் திரண்டு தமுமுகவினரை தாக்க SDPI கட்சி தொண்டர்கள் விரும்பியதாகவும் இவர்கள் தடுத்து விட்டதாகவும் பெருமை பட்டு கொள்கின்றனர்.தமுமுகவினர் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து இவர்களின் தலைமை தடுத்து வைத்துள்ளது என்பதே உண்மை.சங்பரிவார்  கூட்டத்தை சமாளிப்பதற்காக பயிற்சி எடுத்து வருவதாக சொல்லும் இவர்கள் சொந்த சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்துவதுதான் அதிகம்.அதிரமபட்டினத்தில் தமுமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இவர்கள் முன்பு திண்டுக்கல் இப்போது சென்னை  என பலத்த அடி பட்டதால் கதி கலங்கி போயுள்ளனர்.

தங்கள் திறமைகளை சங்பரிவார் கும்பலிடம் மட்டும் காட்டினால் இவர்களது அமைப்புக்கும் நல்லது சமுதாயத்துக்கும் நல்லது.அமைப்பு வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு.பொய் செய்திகளை பரப்பி குறுக்கு வழியில் அதை செய்ய வேண்டாமே. சகோதர  சண்டையை விரும்பாத நல்லெண்ணத்தில் இதை சொல்கிறோம்.புரிந்து கொண்டால் சரி.

தகவல் காஞ்சி இனிவன் .சென்னைஉயர் நீதி மன்ற வழக்கறிஞர் .

செய்திகள் வழங்குவதில் தோய்வு-ஆசிரியர் !


சில தினங்களாக வேலை பளு காரணமாக சரியாக செய்திகள் வழங்க முடியாமல் ஆசிரியர்! அவதியில் மக்கள் ஆர்வத்தோடு அலைப்பேசியில் விவரத்தை கேட்டு வருகின்றனர் .ஆகவே வாசகர்களுக்கு பணிவான வேண்டுகோள் ! இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த தோய்வு-நீடிக்கும் எனவும் இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் .

குவைத்தில் ! காதிம் உரிமையாளர் விசா மாற்றும் சட்டம் அமலாக்கப்பட்டது !


குவைத் உரிமையாளர் விசாக்களில் பணத்தை தந்து அனுமதியற்ற விசாவான அவ்விசா முறையை கவனத்தில் கொண்ட அரசு இதனை தவ்டுக்கவும் மேலும் இதுப்போன்ற தவறுகளில் ஈடுபடாதவாறு தவிர்க்கவும் போட்ட திட்டமே இந்த உரிமையாளர் விசா மற்றம் சட்டம் அண்மையில் அனைத்து பகுதிகளில் கடும் சோதனையில் பிடிக்கப்பட்டு நாடு கடத்தி வருகின்ற நிலையில் அரசு அறிவித்த தேதியில் ஜூன் இருபதாம் தேதி சட்டத்தை அமலாக்கியது . 

இதனால் காதிமில் உள்ள நபர்கள் அரசு கோரியிருந்த சட்ட விதிகளுக்குப்படி மாற்றம் செய்யப்படும் .ஆகவே இதனை வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்கள் இந்த அரசு சலுகையில் மாற்றம் செய்துக் கொள்ளலாம் .

தமிழனை தமிழன் குடியரசுத்தலைவரை வரவேற்காது மறுப்பது ஏன் ? ஆசிரியர் கருத்து !


நாளை மறுநாள் நடவிருக்கும் குடியரசுத்தலைவர் பதிவிற்கான வேட்புமனு தாக்கலை ஆளுங்கட்சி வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு குட்டனியின் பிரணாப் முகர்சியும் ,ப.ஜா.க மற்றும் ஜனதா தளம் ,மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் களமிறங்கும் சக்மாவும் போட்டியிடுகிறார் .மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த முன்னாள் ஆளுநரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஏமாற்றப்பட்டு ஆதரவின்றி வெளியேற்றப்பட்டதாகவே கூறமுடிந்தாலும் .பெருமனதோடு அவர் தற்போதும் ,எப்போதும்  குடியரசுத்தலைவர் பதிவிக்கு ஆசைப்பட்டதில்லைஎனவும் ,அதனை ஏற்க விரும்பவில்லையெனவும் தன்னுடைய விருப்பத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார் .

கடல் வழி சரக்கு கப்பலின் மூலம் கொண்டு வரப்பட்ட மது பாட்டல்கள் பறிமுதல் .

குவைத் துறைமுகத்தில் மது பாட்டில் 1554 அட்டைப்பெட்டிகளோடு ஏற்றி வந்த சரக்கு கப்பலில் , கப்பல் கண்காணிப்பு காவல் துறையினரால் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த மது பாட்டில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்டதாகவும் .சந்தேகப் பேரில் பிடித்து அவரை விசாரித்ததில் பல ஆதார தகவல்கள் சிக்கி உள்ளது .அந்த நபர் குவைத் நாட்டை சார்ந்தவராவார்அவரை பல்வேறு குற்றசாற்றின் கீழ் கைது செய்து புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது .

குவைத் இஸ்திக்ளால் பகுதியில் மூன்று நாட்களாக அவதி !


குவைத் சார்க் பகுதியே அமைந்திருக்கும் தமிழர்கள் குடியிருக்கும் மிகவும் பிரசத்தியானப் பகுதி இஸ்திக்லாலாகும் இப்பகுதில் கடந்த இரண்டு ,மூன்று நாட்களாக மின்சாரத்தையும் குடி தண்ணீரையும் அரசால் துண்டிக்கப்பட்டுள்ளது .அதனால் அப்பகுதி வாழ் வெளிநாட்டை சார்ந்தவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது வருந்ததக்கது .

மேலும் அப்பகுதியில் இரவு நேரங்களில் சோதனை அட்டை பரிசோதனை மட்டும் சட்டத்திற்கு எதிரானவர்களின் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளதால் உரிமை விசா பெற்று வந்தவர்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகி  தங்கிருக்கும் அறையோடு முடங்கியுள்ளனர் .

சகோதரர் ஜின்னாஹ் அவர்கள் கூனிமேடு குரலுக்கு கடிதம் !



அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்ட திட்டத்திற்கு எதிராக முரணாக நடக்கின்றவர்கள் என்றும் இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர்களாக நிர்வகிப்பது இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை எனவும் சூசகமாக அந்த கடிதத்தில் பதிவு செய்துள்ளார் .மேலும் அந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் புதிய நிர்வாகம் இஸ்லாம் வழிமுறைகள் அறிந்து இருப்பவராக இருக்கவேண்டும் எனவும் இக்கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார் .

கைக்கு எட்டியது கை சேதாரமாச்சி !

குவைத்:-ஹவல்லியில் பிரசத்தி பெற்ற வணிக வளாகமான அல் ரிஹாப் வணிக வளாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் நெரிசல் இருந்தப்பொழுது ஓர் குவைத்துடைய பணப்பை தவறிவிட்டது .அதன்பிறகு அதை கண்டெடுத்த ஓர் இந்தியர் அந்த பணப்பையை எடுத்துக்கொண்டு அதிலிருந்த பணத்தை மறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் அதைப்பற்றி கூற அவர் அவரின் ஆலோசனையாக பணத்தை எடுத்துக்கொண்டு அதிலிருக்கும் வங்கி கணக்கு அட்டையை மற்றும் இதர அத்தியாவசையுடைய அட்டைகளை உடைத்து தூக்கி எறிந்திவிடுக்கூற அவர் சொல் பேச்சைக்கேட்டு அந்த இந்தியரும் உடைத்து தூக்கி எரிந்து விட்டார் .

பணப்பை தவறவிட்டு தேடி அலைந்து கிடைக்காமல் அவதிப்பட்ட அந்த குவைத்தி வளாக கண்காணிப்பாளர்களை சந்தித்து கண்டு பிடிக்கும்பக்டி கோரியுள்ளார் .அவர்கள் அவரின் கோரிக்கையை ஏற்று காணொளி பிடிப்பு கண்காணிப்பு காமெரா மூலம் பார்த்ததில் அவர் எடுத்தது உறுதி செய்யப்பட்டது .இருப்பினும் அவன் யார் எந்த கடையில் வேலை செய்கிறான் என்பதை அறியாத வளாக கண்காணிப்பாளர் அனைத்து கேமாராக்களின் கடும் சோதனையால் உடைக்க  சொல்லியவருடன் வீட்டுக்கு செல்லும்போது பிடிக்கப்பட்டார் . 

மேலும் குவைத்தியை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் குவைத்தி அவர் மீது எந்த புகாரும் காவல்நிலையத்தில் அளிக்க முன்வரவில்லை .அவருக்கு பணப்பியுடன் வங்கி கணக்கு அட்டை மற்றும் திருப்பி தந்தாள் போதும் கூற நடந்த வற்றை அந்த இந்தியர் விளக்க அதற்கு அபாராதமாக அந்த குவைத்தி ஐம்பது தினாரை வழங்குமாறு கேட்டுள்ளார் வேறு வழியின்றி ஐம்பது தினார் கொடுத்தப்பிறகு இந்த பிரச்னைக்கு முற்றானது .

அன்று மேலும் அரை தினாரை அந்த இந்தியர் முன்னிலையில் கடந்துள்ளது கேமரா அச்சத்தில் அதை எடுக்காமல் விட்டுள்ளார் .இறுதியில் கைக்கு கிடைத்தது கை சேதாரமாகப் போச்சி ~!

சகோதரர்களே தங்களுக்கு முன்னிலையில் எப்பொருள் கிடைத்தாலும் அருகிலிருக்கும் நிர்வாக மேலிடத்தில் தந்துவிடவும் .தாங்கள் எடுத்துக்கொண்ட பொருள் ஒரு வேலை தங்களுடைய வாழ்க்கையை சீறடிக்க வந்த சோதனைப் பொருளாகக் கூடும் .கைப்பேசி ,கணினி போன்ற இதரப்போருளின் மூலம் ஈர மேச்சிலை தொண்டையில் போகுமே ஒழிய வயிற்று பசியினை நிரந்திரமாக போக்க முடியாது .!அதற்கு இந்த சம்பவம் எடுத்துகாட்டு !நல்லவன் இருக்கையில் ஐம்பது தினார் சேதாரத்துடன் போச்சி !அது வே வேறு குவைத்தி திருடன் கூறி அதில் பத்தில்லை நூறு இருந்து கூறி பழி சுமத்தி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தால் அதனால் வாழ்க்கையே பாடாகிபோயிருக்கும் !

பிறர் பொருளை ஆசைப்பட்டால் நம்பொருள் இழுக்க நேரிடும் என்பதற்கு எடுத்துக்காட்டு இதைவிட நல்ல உதாரணம் கிடைக்காது .ஆகவே விழிப்பாய் இருப்போம் .,பிறர் பொருளை எடுக்க மறுப்போம் !

மாணவர்களுக்கு ஊக்கமளிக்க முன் வராத அமைப்புகள் இருந்து என்னப் பயன் ?


நம்முடைய கூனிமேட்டிற்கும் அதில் அங்கம் வகிக்கும் மக்களுக்கும் உதவ வேண்டும் நோக்கத்தோடு அமைக்கப்பட்ட பல அமைப்புகள் கிளைகிளிருந்தும் நிலைகள் இல்லாமல் இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது .அண்மையில் கூனிமேட்டை சார்ந்த மாணவ ,மாணவிகள் இவ்வருடம் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது வரவேற்க விதத்திலும் ,அவர்களையும் ,

மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு !


+2,10 ஆம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று இருக்கும் கூநிமேட்டை சார்ந்த மாணவர்களுக்கு ஊக்கவிக்கும் வகையில் சான்றிதழ் மற்றும் கேடையம் வழங்க கூனிமேடு குரல் திட்டமிட்டுள்ளது.!அதற்காக இந்த இணைய தளத்தின் கண்ணோட்டத்திலிருந்து தப்பிய மாணவர்களை சேகரிக்க அண்மையில் ஓர் அறிக்கையில் செய்தியாக கூனிமேடு குரல் வெளியிட்டது .அதில் எவரும் முன்வந்து தான் எடுத்த மதிப்பெண் சமர்பிக்க வரவில்லை ஆகவே கொடுக்க நினைத்த நிர்ணயித்த காலம் நெருங்குகையில் .

கூனிமேடு :தலைவரின் முயற்சியால் உற்சாகத்தில் இருக்கும் திடீர் நகர் வாசிகள் !


அண்மையில் ஒரு வீட்டிற்கு ஒரு விளக்கு என்கின்ற மின்சாரப்போக்கை மறைந்து விளக்கு நிறைந்த வீடுகளை மாற புதிய யுக்திகள் கூனிமேடு தலைவர் சாபுதீன் கையாண்டுள்ளார் .அவர் எடுத்துக்கொண்ட முயற்சியில் நேற்று அரசாங்க மின்சார அதிகாரிகளால் சோதனையிடப்பட்டு மேலும் இரண்டு மாதங்களில் புதிய இயந்திரம் ட்ரான்ஸ்பார்மர் இயந்திரத்தை அமைக்கும் பணி நடைப்பெறும் எனவும் இதனால் திடீர் நகர் பகுதிக்கு மட்டுமின்றி ,கூனிமேடு குப்பம் வாசிகளுக்கும்இதன் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிகிறது .

குவைத் :நிறுவனத்தில் மற்றும் வெளியே பணிப்புரிபவர்கள் சோதனை அட்டையின்றி வெளியே செல்ல வேண்டாம் .


அண்மையில் குவைத் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் மிகுந்த கண்டிப்பிற்குரியதாக உள்ளதால் குவைத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தாங்கள் வெளியே செல்லுகையில் சோதனை அட்டையின்றி வெளியே செல்ல வேண்டாம் .

மேலும் வீட்டு அனுமதி விசாவில் வெளியில் பணிப்புரியும் அன்பர்கள் ,தங்களுடைய உரிமையாளரை அவாப்போது தொடர்புக்கொண்டு பேசிக் கொள்வது மிக அவசியமாகும் .அதுமட்டுமின்றி ஓர் வேலை அகப்பட்டால் என்ன காரணம் கூற வேண்டாம் என்பதை விளக்கி கொள்ளவும் அச்சமயம் தாங்கள் அளிக்கும் தகவலும் ,தங்களுடைய உரிமையாளர் அளிக்கும் தகவலும் ஒற்றை கருத்தாக இருக்கும் பட்சத்தில் தங்களை மீட்டு வர இலவாகும் .

சட்டத்திற்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பவர்கள் ,உடனே அதிலிருந்து விலகிக் கொள்வது அவசியம் .நீங்கள்அரசின் அனுமதியின்றி அரசுக்கு ஏதிராக ஈடுபடும் ,மது ,மாது ,சூது இவ்விசயத்தில் கவனத்தை கொள்ளவும் .இதனால் தாங்கள் மட்டும் அவதிப்படாமல் தங்களுடைய குடும்பமும் பாதிப்பிற்குள்ளாக நேரும் .

கடைத்தெருவுக்கு ,மறைமுக இடத்தில் புகைப்பிடிக்க செல்லுகையில் தங்களுடன் சோதனை அட்டை எடுத்து செல்லவும் .மேலும் தங்களுக்கு அனுமதி அட்டை அவகாசமுள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்துக்கொள்வது இன்றியாமையாகும் . தாயகம் செல்ல நினைக்கையில் அதற்கு முன்பு தங்களுக்கு ஏதாவது பயணத்தை இடையூறு உள்ளதா பரிசோதனை செய்தப்பின் பயணச் சீட்டை தயார் செய்யவும் . தங்கள் நலனில் கூனிமேடு குரல் .

குவைத்:ஹவல்லி ,நுகரா பகுதியில் சட்டத்திற்கு விரோதமானவர்கள் 187 நபர்கள் கைது !


குவைத் நுகரா பகுதியில் நேற்று இரவு காவல்துறை மூன்று மணி நேர சோதனை துரித நடவடிக்கை மேற்கொண்டதில் ஆசியர்கள் மற்றும் அரபியர்கள் மொத்தம் 187 நபர்கள் சட்டத்திற்கு விரோத நடவடிக்கையில் சிக்கினர் . மேலும் இந்த நடவடிக்கை ஹவல்லி அனைத்து பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

குவைத்தில் இந்திய நாட்டை சார்ந்த சகோதரர் கோமா நிலையில் பர்வானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .



சகோ.அப்துல் சமத் கோமா நிலையில் மீட்கப்பட்டு பார்வானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் இருக்கும் காணுகையில் உள்ளம் உருக வைக்கிறது .

சகோ .அப்துல் சமத் ஜிலீப் ஓட்டலில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் சம்பவத்தன்று குளியலறைக்கு குளிக்க செல்லுகையில் அப்போது மயங்கி விழுந்துள்ளார் .நேரம் கடந்தும் வராத காரணத்தால் அவருடன் இருந்த சகாக்கள் குளியலறை கதவை உடைத்து பார்த்ததில் சகோ . அவர்கள் வாயிலிருந்து ரத்தம்வெளி வந்த நிலையில் மயங்கி கெடந்தார் .

நன்றி :புகைப்படம் மற்றும் தகவல் இந்தியன்ஸ் இன் குவைத் இணையதளம் .
அதை கண்ட அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மூளை நறும்பு பாதிக்கப்பட்டு ரத்தம் வெளிவருவதாக மருத்துவர் தகவல் அளித்ததுடன் அவருக்கு மூளை நறும்பியல் அறுவை சிகிச்சையும் செய்துள்ளதாக வும் தெரிவித்தார்கள் .சகோ .அப்துல் சமத் நாடு திரும்பி சில நாட்களான நிலையில் இந்த அவல சம்பவம் நடைபெற்று இருக்கிறது .அவர் ஊருக்கு சென்று புதிய கட்டிடம் வீட்டை கட்டிவந்த நிலையிலும் அந்த வீட்டிற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது தாயக தகவல் வந்துள்ள நிலையில் ,அவருக்கு திருமணமாகி பதினான்கு வருடம் ஆகியுள்ளது அவரின் துணையாரின் பெயர் நஜிமா இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளன ,மூத்தவள் எட்டாவதும் ,நடுப்பெண் ஆறாவதும் ,இளையவள் முதலாம் வகுப்பில் படித்து வருகிறார்கள் .

இதுவரையில் கோமாவில் மோசமான நிலையில் இருக்கும் சமயத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதினால் அவர் பெற்ற கடனை ஏற்க வேண்டிய நிபந்தனையில் சகோதரி நஜிமா தள்ளப்பட்டுள்ளார் .

ஞாயிறு மாலை :மிர்காப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் "தீ "!


படம் .நன்றி :இந்தியன்ஸ் இன் குவைத் இணையதளம் .

குவைத் :மிர்காப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும்  அடக்கு மாடு கட்டிடத்தில் திடீர் தீ பற்றியது.இந்த விபத்து மூன்று மணிக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் சிறிது சிறிதாக பற்றிய தீ சில மணி நேரத்தில் நான்கு மாடிகளை பிடித்து எரிந்தது .இந்த தீயை மீட்க தீயை மீட்கும் பாதுகாப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை மீட்டனர் .இந்த தீயால் இரண்டு தீயணைப்பு படையினர் இருவருக்கு பழுத்த காயம் ஏற்பட்டது .உடனடியாக அவர்களுக்கு ஷர்க்கில் அமைந்துள்ள அல் அமீரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது .எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்த்ததாக தீயணைப்புத்துறை மேல் அதிகாரி கலீல் அல் அமீரி தெரிவித்தார் . விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூடுதல் தகவல் தெரிவித்தார் . -நன்றி ":தகவலுக்கு :" KUNA "

10 ,+2 ,கூனிமேட்டிலையே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை தட்டிச் செல்ல அழைக்கிறது !


பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் கூனிமேட்டிலையே அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை சமர்பிக்கமாறு கூனிமேடு குரல் கேட்டுகொள்கிறது .இது வரையில் கூனிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி ,A.L.M உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அல்லாது கூனிமேட்டிலிருந்து ,புதுவை காலாப்பட்டு ,கனக செட்டிகுளம் ,அனுமானத்தை ,மரக்காணம் போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று இருப்பின் அவர்கள் உடனடியாக தங்களுடைய மதிப்பெண்ணை கூனிமேடு குரலுக்கு சமர்பிக்கமாறு கேட்டுக் கொள்கிறோம் .

கூனிமேடு அமைப்புகளுக்கு அழைப்புவிடுக்கிறது கூனிமேடு குரல் .


சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற இரு சகோதரரும்.மேலும் கூனிமேட்டில் அமைந்துள்ள எ.எல் எம் பள்ளி விழுப்புரம் மாவட்டத்திளையே இரண்டாவது இடம் பிடித்திருப்பதர்காகவும் ,பல்லாண்டு வருடமாக இயங்கி வரும் கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தற்போது உயர்நிளைப்பல்லியாக மாறி இருப்பதை கவனத்தில் கொண்டிருக்கும் இந்த இணையதளம் அவர்களை ஊக்கவித்து உற்சாகப்படுத்த திட்டமிட்டுள்ளது ,

அதனால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நினைவுப்பேழை வழங்க உத்தேசிக்கப்பட்ட நிலையில் அதை அறிந்து இந்த இணையதளத்துடன் கைகோர்க்க KEWA அமைப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் .அதேப்போல கூனிமேட்டிற்காக சமூக சேவையில் முன்னோடியாக திகழும் அமைப்புகள் இதுப்போன்ற வற்றில் இணைந்து செயல்பட வேண்டுமாய் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறது .

இந்த சான்றிதழ் தற்போது கூனிமேட்டின் கல்வித்தரத்தை மாணவர் மத்தியில் அதிகரிக்கவும் ,மேன்மேலும் அதன் வளர்சிக்காணவும் உறுதணையாக இருக்கும் என்பதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தி ,ஊக்கவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மேலும் கூனிமேட்டிலே இருந்து இயங்கி வரும் பள்ளிகளுக்கும் ,சிறப்பாக பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கும் நன்றிப்பாராட்டி சான்றிதழையும் ,நினைவு கேடையமும் வழங்கப்படும் ,

மேலும் நல்ல தரமான கல்வியை வழங்கும் பள்ளிகளுக்கும் இதுப்போன்ற வற்றால் ஊக்கவிக்கப்படும் .ஆண்டுக்கு ஒருமுறைத் தரவும் வருடாவருடம் கல்வி  என்கின்ற சான்றில் ,மாணவர்களுக்கு ,மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மேலும் ,கூநிமெட்டில் ஊருக்காக எவர் மிகச் சிறப்பாக வருடாவருடம் சமூக சேவை எந்த அமைப்பு செய்து வருகிறதோ அவர்களுக்கும் வழங்கப்படும் .

அதுமட்டுமின்றி இந்த இணையதளத்துக்கு நேரம் கருதாது தன்னார்வத் தொண்டு சேவை செபவர்களுக்கு ,செய்தி மற்றும் தகலவல் அறிந்து தெரிவிப்பர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்க திட்டமிட்டுள்ளது ,.

இதன் வரிசையில் முதன் முறையாகவும் முதலாகவும் இறைவன் பெயரோடு கல்வியில் முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும் நோக்கத்துடன் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்படும் .அதுமட்டுமின்றி கூநிமேட்டிளையே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை இனம் கண்டு அவர்களையும் ஊக்கவிக்கப்படும் .இதற்காக கூநிமேட்டிற்காக தன்னலம் கருதாது உழைத்துக்கொண்டிருக்கும் அமைப்புகள் இதில் இணைந்து ஊக்கவிக்க முன்வரவேண்டும் . 

ஒரே நாளில் 1700 நபர்கள் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் பிடிப்பட்டு கைதாகியுள்ளனர்.





குவைத் ஆசியர்கள் பெரும்பாலும் அங்கம் வகிக்கும் பகுதி ஜிலீப் மற்றும் பார்வானிய ,அப்பாசியா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்திற்கு முரணான போக்கையும் ,அதற்கு விரோதமான செயல்பாட்டிலும் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளது .மேலும் வீட்டை விட்டு பாய்ந்தவர்கள் ,ஓடிவிட்ட வழக்குகள் ,விபச்சார வழக்குகள் ,குடியுரிமையின்மை ,குடியியல்யின்மை ,போதைப்பொருள் உட்கொண்டிருத்தல் ,வாகனம் ஓட்டுனர் உரிமையின்மை ,கைப்பேசி மூலம் வெளிநாட்டு தொடர்பு அழைப்பு பனி செய்பவர்கள் அதில் ஈடுபட்டவர்கள் {INTERNET CALL CENTER}போன்ற பல்வேறு குற்றசாட்டில் இருந்தவர்களும் வழக்கு பதியப்பட்டு காவலாள் தேடப்பட்டவர்களும் காவலர்களின் அதிரடி வேட்டையால் அகப்பட்டுள்ளனர் .

மேலும் தொடர்ந்து இதுப்போன்ற சோதனைகள் நடைப்பெறும் எனவும் நிறுவனத்தின் சட்டத்திற்கு எதிராகவும் மாறாக அரசு அங்கீகரிக்கப்படாத குடியுரிமை (வீட்டு வேலை )வைத்துக்கொண்டு அந்நிய இடத்தில் தொழில் செய்பவர்களையும் (காதிமில் வேலைப்பார்க்கும் நபர்கள்)சோதனையில் கண்டறிந்து நாடு கடத்தப்படும் எனவும் காவல் துறை ஜெனரல் சுலைமான் அல் பெஹத் தெரிவித்துள்ளார் .

மேலும் இக்கண்காணிப்பில் காவல்துறை மூத்த அதிகாரிகளும் ,பாதுகாப்பு படையினர்களும் ,மேலும் பகுதி காவலர்களும் தீவிரமாக இதில் இரங்கி சோதனை செய்து வருகின்றனர் .

குவைத் முதல் ரிங் ரோட்டில் துல்லியமாக படம்பிடிக்கும் நவீன கேமரா !

குவைத் முதல் ரிங் ரோட்டில் புள்ளிக்கு ,புள்ளி துல்லியமாக படம்பிடிக்கும் நவீன கேமரா வரும் ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி முதல் பொருத்தப்பட்டு இயங்க இருக்கிறது .

சீறிக்கொண்டு வேகத்துடன் செல்லும் வாகனத்தை கண்காணிக்கும் நோக்கத்துடன் பொருத்தப்பட்ட இந்த கேமரா ஒரு வாகனத்தின் இடையிலிருந்து மற்றொரு வாகனத்தை துள்ளியமாக படம் எடுப்பதுமட்டுமின்றி  அதி விரைவாக செல்லும் வாகனத்தின் வேகத்தின் செயல்பாடுகள் குறித்து மிக விவரத்துடன் அதை காண்பிக்கும் .

மேலும் ஒன்றிற்கும் ,இரண்டிற்கும் மத்தியில் வேகத்தை கணக்கெடுக்கும் என்பதாகவும் கண்காணிப்பு காவல்துறை தெரிவித்துள்ளது .

கூனிமேட்டின் சகோதரரின் குழந்தை இறந்த பரிதாபம் !


கூனிமேடு நபிகள் நகரில் வசிக்கும் அமனி அவர்களின் மூத்த மகனான அலாம் அவர் புதுவை மாநிலம் காலாப்பட்டில் குடியேறி வசித்து வருகிறார் .சம்பவத்தன்று இரவு அவரின் சுமார் ஐந்து வயதான பெண் குழந்தை இரவு உணவு முடித்தப் பிறகு நல்ல முறையில் உறங்கி இருக்கிறாள் மறு நாள் அவளின் தாயார் எழுப்பி பார்த்ததில் அசைவு இல்லாமல் ஜடமாய் கடந்ததை கண்டு அதிர்ச்சியுற்று உடனே அருகிலிருக்கும் பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் .

அப்போது அந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் கூற அலறி கதறி அழுததில் அந்த பரிதாபத்தை கண்டவர்களின் உள்ளத்தை உருக வைத்தது .இந்த சம்பவம் புதன் காலையில் நடைப்பெற்றது அதன் பிறகு மருத்துவ பிரேத பரிசோதனை முடிந்து பெறப்பட்ட அக்குழந்தையின் சடலம் அன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது .குழந்தையின் தந்தை அலாம் குவைத்தில் டி.வி .எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

திரு ராகுல் காந்தி இன்று குவைத் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் அப்துல் லதிப் அல் பதரை சந்தித்தார்


"நன்றி" படம் குவைத் இந்தியன் இணையதளம் .
திரு ராகுல் காந்தி இன்று குவைத் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் அப்துல் லதிப் அல் பதரை  சந்தித்தார் அவரிடம் குவைத்   கலாச்சார உறவுகளை மற்றும் இந்திய குடியரசு வசிக்கும் மக்களிடையே கல்வி சமூக உறவுகளை போன்றவை  பல்வேறு வழிகளில்  வலுப்படுத்த விவாதிக்கப்பட்டது.மேலும் 

குவைத்தில் வெள்ளியன்று நடக்கும் சிறப்பு நிகழ்ச்சி!


அரபு வசந்தம் எதிர்பார்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வருகைப் புரிந்திருக்கின்ற அல்  ஷேய்க் ரவுப் சேன் நளிமி அவர்களால் சிறப்புரையாற்ற உள்ளதாக இந்த விழாவை ஏற்பாடு செய்த இக்ரா இஸ்லாமிய சங்கம் தெரிவித்துள்ளது .

அன்னை கதிஜா மகளிர் கல்லூரி !

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை பயின்றிட உலக தரத்திற்கேற்ப கல்விமுறையும் இஸ்லாம் வழிமுறையும்கற்றிட அறிய வாய்ப்பு !இதனை அறிந்து பயன்பெற விரும்புவோர் பயன்பெறலாம். பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான அனுமதி நடந்துக்கொண்டுள்ளது .

தமிழகத்தில் பொறியியற் பி .இ , பி .டெக் படிப்பிற்கான கவுன்சலிங்

தமிழகத்தில் பொறியியற் படிப்பிற்கான பி .இ , பி .டெக் படிப்பிற்கான கவுன்சலிங் வரும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி சென்னையில்  துவங்குகிறது . ஆனால் இதற்கு முன்பு இந்த கவுன்சலிங் ஒன்பதாம் தேதி நடக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை மாற்றம் செய்து புதிய தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இதனை அறிவித்திருக்கிறது .


ஆண்டு தோறும் கவுன்சலிங் நடத்தி இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசமாக பொறியியற் படிப்பை படிக்க ஊக்கவிக்கும் அந்த பல்கலைக்கழகம், சென்ற ஆண்டைப்போல இவ்வாண்டும் கவுன்சலிங் நடத்த திட்டமிட்டுள்ளது .இதன் அறிக்கையை அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் இன்று வெளியிட்டுள்ளார் .

மாற்றியமைக்கப்பட்டு  கீழ் வரும் தேதிகளில் நடக்க இருக்கும் கவுன்சலிங் :
ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 25ம் தேதியும் ,ரேங்க் பட்டியல் வெளியீடு ஜூன் 30 ம் தேதியும் , விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவக்கம் ஜூலை 5ம் தேதியும் ,தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7 முதல் 11ம் தேதிவரை நடைப்பெறும்  எனவும் ,மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 12ம் தேதியும் ,பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 13ம் தேதி முதல் துவங்க இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் .

மேலும் இந்த தகவல் மூலம் பொறியியல் பட்ட படிப்பை பயில ஆர்வமுள்ளோர் இந்த கவுன்சலிங்கில் கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது .

KEWA - (Koonimedu Expatriate Welfare Association ,) அமைப்பினர் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு பாராட்டு !

நடந்து முடிந்த பத்து மட்டும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வாகிய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து அவர்கள்  தெரிவித்திருப்பதாவது நலிந்த குடம்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அதுவும் தகுந்த ஆதாரங்களோடு வழங்கினால் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் .

மேலும் கூனிமேட்டில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிய தாரிப் அலிக்கும்  அதற்கு அடுத்தப்படியாக வந்த காமேஸ்வரனுக்கும் ஒரே குடம்பத்தை சார்ந்த

கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு கூனிமேடு கல்வியில் முன்னேற்றம் !

கூனிமேடு பல்வேறு பகுதியை சார்ந்த மாணவர்கள் அரசு உயர்நிலைப் பள்ளி ,எ.எல் .எம் உயர்நிலைப்பள்ளி மற்றும் புதுவையில் தனியார் பள்ளியில்  படித்து வருகின்ற நிலையில் !இவர்கள் சமீபத்தில் தேர்வுகள் எழுதி வெளியாகி இருக்கின்ற தருணத்தில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவ ,மாணவிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு  முன்னேறி உள்ளனர் .

கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் 82 %சதவிகிதம் .ஆகும் ஆனால் இவ்வாண்டு அதிகரித்து 92 %சதவிகிதத்திற்கும் கூடுதலாக இம்முறை தேர்ச்சிப்பெற்றுள்ளனர் .அதேப்போல பனிரெண்டாம் வகுப்பில் கடந்த ஆண்டு 81 % சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்தனர் .தற்போது அதைவிட  முன்னேறி தற்போது 94 %சதவிகிதம் தேர்ச்சிபெற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

கடந்த ஆண்டைப்போல தற்போதும் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

கூனிமேடு A.L.M. உயர்நிலைப்பள்ளி சாதனை !



படம் :கூனிமேடு இன் "நன்றி !

விழுப்புரம் மாவட்டத்திலையே 2011 ஆம் ஆண்டு சிறந்த பள்ளி கணக்கெடுப்பில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் இப்பள்ளி உண்மையிலையே கல்விதரம் தற்போது மேலும் உயர்ந்து இருக்கிறது வியக்கத்தக்கதுள்ளது .கூனிமேட்டில் வாழ்ந்துக்கொண்டு படிக்க வைக்க வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் நாம் எண்ணத்தில் இதுவெல்லாம் பள்ளியாக கருதுவதில்லை காரணம் நம்மிடத்தில் தேவைக்கு அளவு பணம் அதிகமாக இருப்பதை காண்பிக்கவே வெளி ஊர்பள்ளியை தேர்வு செய்து படிக்க வைத்து வருகின்றநிலையில் .

நம்முடைய ஊரில் இருந்தே நல்ல தரத்துடன் கல்வி பயிற்சியை தந்துக்கொண்டிருக்கும் A.L.M உயர்நிலைப்பள்ளி தற்போது 2012 ஆம் ஆண்டிலும் கல்வி தரத்தை மக்கள் மத்தியிலும் மாநிலம் மத்தியிலும் நிரூபித்துள்ளது.இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் தேர்ச்சி பெற்று இருக்கும் எண்ணிக்கையோ தற்போது அதிகரித்துள்ளதை செய்தி நாளிதழ் ,அதாவது பனிரெண்டாம் வகுப்பு மற்றும் ,பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்பள்ளியினால்  தேர்வு எழுதி வெற்றிப்பெற்று சாதனை புரிந்திருப்பதை பதிவாகியுள்ளது .

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் இப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 94 % சதவிகிதமாகும் .இருப்பினும் இப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பில் 100% க்கு 100% விகிதம் தேர்ச்சிபெற்று  இருப்பது பாராட்டக்குரியது  .

இந்தப்பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தை சார்ந்த இரு மாணவிகள் அந்த பள்ளியிளையே வகுப்பில்  முதன்மை பள்ளி மாணவிகளாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது  ,பனிரெண்டாம் வகுப்பில் சைமா பேகம் மற்றும் அவளுடைய சகோதரி பத்தாம் வகுப்பில் ஷாகிரா பேகம் ,இவர்களுடைய தந்தைப்பெயர் சையத் மாலிக் ஆகும் .இவர்களின் குடும்பம் கூனிமேடு பஞ்சாயத்போர்டு ஈ .சி ஆர் .பிரதான சாலையில் அமைந்துள்ளது .

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதன்மை பெற்ற மாணவி ஷாகிரா பேகம் அவள் எடுத்த மொத்த மதிப்பெண் 396 ஆகும் ,அவளை அடுத்ததாக ரஞ்சிதா என்ற மாணவி தந்தைப் பெயர் ராஜேந்திரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளாள் அவள் எடுத்த மதிப்பெண் 323   ஆகும் .


பனிரெண்டாம் வகுப்பில் முதன்மை இடத்தை பிடித்த அப்பள்ளி மாணவி சைமா பேகம் எடுத்த மொஹ்த  மதிப்பெண் 780 ஆகும் அவள் அதிக பட்சமாக தமிழில் 171 மதிப்பெண்களை பெற்றுள்ளாள் அதேபோல அவளை பின்தொடர்ந்து கூனிமேடு பிர்தவுஸ் நகரில் வசிக்கும் திரு/ஜனாப் -சையத் அகமதின் புதல்வி ஷாகிலா பானு இரண்டாம் இடத்தில் பிடித்துல்லால் .அவள் எடுத்துள்ள மொத்த மதிப்பெண் 768 ஆகும் .அதிக பட்சமாக ஆங்கிலத்தில் 161 மதிப்பெண்களை பெற்றுள்ளாள் .


இப்பள்ளியில் படித்து இப்பள்ளிக்கு மட்டுமல்லாமல் கூனிமேடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த அத்தனை மாணவ மாணவிகளுக்கு கூனிமேடு குரல் சார்பாக இந்த பதிவின் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறது .

இப்பள்ளியில் படித்து இப்பள்ளிக்கு மட்டுமல்லாமல் கூனிமேடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த அத்தனை மாணவ மாணவிகளுக்கு கூனிமேடு குரல் சார்பாக இந்த பதிவின் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறது .


கூனிமேடு கோமட்டிக்குலம் பகுதியில் வசிக்கும் சகோதரர் ஜனாப் .அப்துல் சலீம் சகோதரி ஜனாபா.ஹசீனா பேகம் (சிலார் குடும்பம் )அவர்களுடைய மகனான சகோதரர் தாரிப் அலி ,காமேஸ்வரன்  என்கின்ற கூனிமேடுவை சார்ந்த மற்றொரு மாணவன் புதுவை லாஸ்பேட்டையில் விவேகானந்தா பள்ளியில் படித்துவந்தார்  கூனிமேட்டிலையே பனிரெண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண்கள் பெற்று இருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் .


மேலும் இப்பள்ளி மட்டுமில்லாமல் பிற பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்சிப்பெற்று  வெற்றியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுதலை இந்த இணைய தளம் தெரிவித்துக்கொள்கிறது .


எஸ் .எஸ் எல் .சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின !


தேர்வு எழுதிவிட்டு தேரிடோவோமா ? தேரமாட்டோமா ? நினைத்து அக சோகத்தில் மூழ்கியிருக்கும் மாணவ மாணவி பட்டாரங்கள் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகி ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது .
சில ஆண்டுகளில் ௧௦ ஆம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து முதலாவதாக வரும் மாணவிகள் மத்தியில் இம்முறை ஆண்கள் அவ்விடத்தை பிடித்துள்ளது ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது . சமீப கால பெண்கள் மத்தியில் ஆண்கள் படிக்காததற்கு காரணம் கேட்டால் அவர்கள் கூறிய சொற்கள் பெண்கள் பாட புத்தகத்தை பார்க்கிறார்கள் ஆண்களோ பெண்களை பார்க்கிறார்கள் .இப்படி சொல்லிக்கொண்டு ஆண்கள் சமுதாயத்தை விழிக்க வித்தை பெண்கள் சமுதாயத்தை வாழ்த்த வேண்டும் பாராட்டவும் வேண்டும் .ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பேன் உள்ளதை தமிழ் கூறும் பழமொழி நாம் அறிவோம் அந்த

குவைத்தில் 83000 ஆயிரம் குடியுரிமை ரத்து !



இது வரை குவைத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 83000 ஆயிரம் குடியுரிமை பெற்று ரத்து செய்யாமல் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர்களின் ஆய்வு அறிக்கையை சமர்பித்தது .இந்த ஆய்வை நேற்று சமூக விவாகாரம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நேற்று குவைத் நாலேடுவுக்கு தெரிவித்திரிப்பது .இதுவரை 83 ,௦ஆயிரம் வெளியூர் நபர்களின் குடியுரிமை ரத்து செய்து புதிப்பிக்காமல் உள்ளதை ஆய்வு கணக்கு காண்பிப்பதாக தகவலை அறிவித்திருக்கிறது .இதில் பெரும்பாலும் 37 ஆயிரம் வழக்குகள் நாட்டைவிட்டு வெளியேற்றமுடியாதவர்கள் சட்டத்திற்கு எதிராக வழக்குகளில் உள்ளவர்கள் மேலும் 423 வழக்குகள் இறப்பால் துண்டிக்கப்பட்டுள்ளது மேலும் 18463 வழக்குகள் அரசாங்கத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்குகளாகும் 

மேலும் வீட்டில் வேலை பார்க்கும் விசாவான நிபந்தனை விசா 13465 வழக்குகளும் நிறுவனத்தில் பணிப்புரிந்து புதிப்பிக்காதவர்களின் 6186  களும் நிறுவனத்தினால் ஏற்பட்டிருக்கும் பிழக்குகளின் வழக்கு எண்ணிக்கை 183 .822 ஆகவும் ,தனியார் நிறுவனத்திலிருந்து அரசு குடியுரிமை விசா வழங்கல் வழக்கு 4986 வழக்குகளும் இன்னும் நிலவையில் உள்ளது .

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினர்

இமாம் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது“தௌஹீத்இறைத் தூது,விதி,
ஈமானின் கடமைகள் போன்ற விடயங்களில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும்
சில அடிப்படைகளைப் பின்பற்றி நடந்துள்ளனர். எனவேபித்அத்துக்களில் ஈடுபடாமல்
அவர்கள் பின்பற்றிய அதே அடிப்படைக் கொள்கைகளைப் பேணி நடப்பவர்கள் அனைவரும்
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினராவர்
[அல்-பதாவா அஸ்ஸஃதிய்யா: 63].

இது பற்றிப் பல அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது,
குர்ஆன்ஹதீஸ்ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து முரண்பாடில்லாத முன்மாதிரிகள்,இஜ்மா ஆகிய அடிப்படைகளைப் பின்பற்றி நடந்த நம் முன்னோர்களும்இன்றுவரை அவற்றைப் பின்பற்றுகின்ற
அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்படுவர். அவ்விடயத்தில் அறிஞர்கள்,பாமரர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை.

ஒரு மனிதன் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவன் என்று சொல்வதற்கு
அவரிடம் மூன்று அடிப்படைகள் இருக்க வேண்டும். அவை:
1. குர்ஆன்ஹதீஸ் பற்றிய அறிவு
2. அவற்றின் அடிப்படையில் செயற்படுதல்
3. வழிகெட்ட கொள்கைகள்பித்அத்துக்கள் போன்றவற்றில் ஈடுபடாதிருப்பதோடுஅவற்றில்           
  ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி நடத்தல்.

எனவேநபி வழிஸஹாபாக்களின் முன்மாதிரிகள் போன்ற இரண்டையும்
புறக்கணிப்பவர்களோ பித்அத்துக்களில் ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ் ஸுன்னா
என்றழைக்கப்பட எந்த அருகதையும் அற்றவர்களாவர். மேலும்அவர்கள்
அஹ்லுஸ் ஸுன்னாவின் எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர்.
இது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.  [ஷரஹுஸ் ஸுன்னா: 78].(மணாருத்தஃவா)


மின் அஞ்சல் சேகரிப்பு !
"{நன்றி" !
சகோ. எஸ் .ஏ .சுல்தான்
sea port dawah office
JIP,JEDDAH-K.S.A
TELE: 026275573 Cஎல்ல்: +966502565509

கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைஞர்கள் நடத்திய மட்டைபந்து போட்டி !


கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரியும் எ அணி சார்பாக இக்பாலும் இணைந்து சக வீரர்களின் ஒப்புதலின் பேரில் கோப்பையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்த போட்டியில் கூநிமேட்டை சார்ந்த அணிகல்  மட்டும் ஐந்துக்கு மேற்பட்டதாகும் மேலும் செட்டிநகர் அனுமந்தை, மரக்காணம் ,புதுவை ,போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின .!

தொடர்ந்து இரு வாரங்களாக நடைபெற்று வரும் விறுவிறுப்பான  இந்த போட்டியில் பங்கேற்ற அத்துணை அணிகளும் இறுதி போட்டியில் கலந்துக்கொள்ள வாய்ப்பினை பெறவில்லை தகுதியை இழந்ததால் இறுதிப்போட்டிக்கு  பஞ்சாயத்போர்டு அணியும் ,அனுமந்தை அணியும் மோதிக்கொண்டதில் கூனிமேடு அணி வீரர்கள் சொற்ப ரன்கள் அடித்து வெளியேறினர் .மிக சிறப்பாக விளையாடிய அனுமந்தை அணி தங்களை எதிர்த்து விளையாடிய அத்தனை அணிகளையும் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது .

இவ்வளவு பெரிய ஊர் கருதும் கூநிமெட்டில் விளையாட்டில் கூட ஒற்றுமையின்மை நினைக்கியைலே வருத்தமளிக்கிறது .ஊருக்கு ஆறு ,ஏழு அணிகள் உள்ளன !அதை தவிர்த்து ஒன்றுக்கூடி கூனிமேட்டிற்கு என்று ஒரு அணியை மதச்சார்பற்று உருவாக்கி விளையாடினால் மட்டுமே சிறக்கும் வலுவான ஒரு அணிகளை உருவாக்கவும் முடியும் அதை தவிர்த்து மதத்திர்கேற்ப அணிகல உருவாக்கி பிரித்துக்கொண்டால் தோல்வியை தழுவது உறுதி !

ஒன்றுக்கூடுவோம் மதத்தில் இல்லை !விளையாட்டிலாவது !

குவைத் தமிழோசை நடத்திய மாதாந்திரக் கூட்டம் !


குவைத் ஜிலீப் சுவைக்  பகுதியில் அமைந்துள்ள அல் -ருசி உணவகத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 .30 மணி வரை மாதாந்திரக்கூட்டம் நடைப்பெற்றது .ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்களை நினைவுப்படுத்தும் சிறப்பு அம்சம் இந்த குவைத் தமிழோசை குழுமம் செய்து வருகின்றது  .அவ்வகையிலே இம்மாதம் கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் ,மா  .போ சா - அவர்களையும் நினைவுக் கூறும் வன்னமாகவும் ,நடைபெற்று முடிந்த சங்கத்தமிழ் தங்க விழா கூட்டத்தில் வருகைத் தந்து முழு ஈடுபாட்டுடன் பங்களிப்பை வழங்கி வெற்றியை தேடித்தந்த களப்பணியாளர்களை  கவுரவிக்கும் விதமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .இந்த விழா தொகுப்பாளராக பொருளாளர் கார்த்திகேயனும் ,தலைவர் பிராசிஸ் மற்றும் செயலாளர் பேச்சுரையோடு துவக்கப்பட்ட இந்த கூட்டம் முதலில் தமிழ் அறிந்ஞர்களை நினைவுப்படுத்தும் வரிசையில் கவிஞர் கண்ணதாசனின் மனதை கொள்ளைக்கொண்டு குடியிருக்கும் பாடல்களை பாடகர்கள் யோகேஸ்வரன் ,கணேஷ் மற்றும் பாடகி ராணி மோகன் வரிசையாக பாடி அசத்த..!

 கவிதை தொகுப்புகளை கவிஞர்கள் தொடர்ந்து வழங்க அதன் பின் கலந்துக்கொண்ட அத்துணை தமிழ் உறவுகளுக்கும் ,கலந்துக்கொண்டு பாடுப்பட்ட தமிழோசை குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவிக்கப்பட்டது .அதன் [பிறகு மதியம் உணவு முடிந்து தொடரப்பட்ட கூட்டம் தங்கத்தமிழ் தங்க விழா களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக முதலில் நன்கொடை அளித்து இறுதிவரை உடனிருந்து வெற்றியுனும் கனியை பறிக்க உதவிய டி -வி எஸ் நிறுவனத்திற்கும் ,உடன் சலிக்காமல் கைகோர்த்த 
அல் அவதா தச்சுப்பட்டரை நிறுவனத்தின் நிருவனரையும் பொன்னாடை போர்த்தி கவுரிவித்தார் மன்றத்தின் உயர் ஆலோசகரான முனைவர் குமார் .!மேலும் பாடகர்களுக்கும் ,நடந்து முடிந்த விழா தலைப்பை பெயரை உருவாக்கி தந்த கவிஞர் பட்டுக்கோட்டை சத்தியனுக்கு நினைவு பேழையும் ,தன்னார்வத் தொண்டாற்றிய அன்பர்களுக்கு நினைவு சான்றுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது . 

இந்த விழாவில் அறுபதுக்கும் மேலான கவிஞர்கள் கலந்துக்கொண்டு கவிதை முழங்கினார்கள் . 

வெள்ளியன்று (KEWA) அமைப்பினர் கூனிமேடு ,குவைத் பகுதிகளில் சுவரொட்டி விநியோகம் !


கூனிமேடு இளைய சமுதாயத்தினர்களால் குவைத்வாழ் கூனிமேடு சாகோதரர்கள் சமூகநல பேரவை (KEWA - Koonimedu Expatriate Welfare Association ,)என்கின்ற அமைப்பை அதன்  ஆக்கப்பூர்வத்தை கடந்த மாதம் குவைத் மக்கள் மத்தியில் அமைக்கப்பட்டது .அதன் செயல் திட்டங்களை குறித்து அறிவிக்கப்படும் என்பதாக அறிவித்த அந்த அமைப்பை சார்ந்தவர்கள் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர்களுடைய செயல் திட்டங்களை குறித்து அண்மையில் (வெள்ளிக்கிழமை )கூனிமேடு பள்ளிவாசலிலும் ,குவைத் மிர்காப் பகுதியிலும் விநியோகம் செய்யப்பட்டது .மேலும் குவைத்தில் பகுதியில் பகுதிவாரியாக சென்று தங்கிருக்கும் அறைகளில் கூனிமேடு குவைத் வாழ் மக்களுக்கு இந்த அமைப்பின் நோக்கத்தையும் ,செயல் திட்டத்தின் விழிப்புனர்வையுன் ,ஆலோசனைகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் வீடு வீடாக சென்றும் ,சகோதரர்களை சந்தித்து இந்த சுவரொட்டியை வழங்கி அவர்களின் ஆலோசனையை பெற இருப்பதாக அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார் .மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் ஏழை எளியோர் பயன் பெரும் நோக்கத்தில் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள் .

சாத்தியமா ,கருத்தும் பலர் மத்தியல் நிறைவேற்றிடும் முன் சுவரொட்டியை வழங்கி அசாத்தியத்தை வெளிப்படுத்தும் இந்த அமைப்பின் திறமை வாழ்த்துதலுக்குரியது .

குவைத் மக்கள் பயன் பெற ,உதவ நினைக்கும் கரங்கள் திறந்திருப்பது கொடையின் அருமையையும் ,மறுமையின் நினைவையும் உணர்ந்து ,ஒற்றுமை எனும் மகிமையோடு உளமார கொடுக்க நினைக்கும் மனிதர்களை ,அமைப்புகளை பாராட்ட செய்ய வேண்டும். இதுப்போன்ற அமைப்புகள் மேலும் முன்னேறி அறியப்பல சாதனைகளை செயல் திட்டங்களாக மக்களுக்கு தந்து அவர்களின் துயர் துடைக்கும் பணிகளை மேற்கொள்ள முயல வேண்டும் .

பெருமைக்கு ஒரு அமைப்பு இல்லாமல் ஒருமைக்கு அதாவது ஒற்றுமைக்கு ஒரு ஜமாஅத் என்ற நல்ல பெயரை வென்றெடுக்க வேண்டும் .அவதூறு சொல்லி திரியும் பல அமைப்புகள் மத்தியில் வேறு விதத்தில் சென்று ,அறுக்கப்பட்ட வேரில் புதிய ஈறாய் முளைத்து மக்களுக்கு விழுதாய் தாங்க வேண்டும் ,என்பதே குரலின் ஆர்வக் குரலாகும்!

தமிழகத்தை உலுக்கும் டெங்கு காய்ச்சல் ஓர் ஆய்வு !

டெங்கு நோய் கொசுவால் பரவக்கூடிய தோற்று நோயாகும். இந்த நோய் தொற்றுவதனால் சீரிய சுகாதார பாதுகாப்பு இல்லாவிடில் (உயிரை துறந்திட )மரணிக்க வைக்கும் கொடிய நோய் இதுவாகும் .இன்றைய உலக அளவில் அதீவிரைவில்ன் பறந்துவரும் இந்த நோய் உலக மக்கள் தொகையில் பாதி அளவில் பாதிக்க கூடும் எனவும் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆராயிந்து தகவலை தெரிவித்துள்ளனர் .டெங்கு நோய் பெரும்பாலும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் உலகளாவிய வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல காலநிலைகளில் காணப்படுகிறது.
இந்த நோய் பாதிப்பால் ஆசியா மற்றும் லத்தீன அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி இந்தியாவிலும் பரவியிருக்கிறது அதன் தாக்கத்தை உலக அளவில் ஏகப்பட்ட குழந்தைகளை பாத்திபிற்குள்ளாகி பாலியாகி வருகின்றனர் .

இதனை தடுக்க முயற்சிகள் கையாண்டு வருகின்ற நிலையில் உலக மருத்துவர்களின் கருத்தானது முறையான மருத்துவ சுகாதாரத்தின் சிகிச்சியினால் 1 %சதவிகிதம் நோய் இறைப்பினை குறைக்கலாம் .இருப்பினும் இந்த நோய் ஏற்படும் நிலையில் அதன் அறிகுறிகளை கண்டு சரியான போதிய மருந்துக்களின் துணையோடு தடுக்கலாம் . இதை முற்றிலும் ஒழிக்க இன்று உலகளாவிய தீவிர முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நோயுடைய   தாக்கமானது  அதிக அளவில் நகர்ப்புறத்திலும் ,அரை நகர்ப்புற பகுதிகளில் பரவிnவருவதை கண்டெடுக்கப்பட்டுள்ளது .
டெங்கு உலகம் முழுவதும் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும் ஒரு கொசு-பரவும் தொற்று நோய் சமீபத்திய ஆண்டுகளில், ஒலிபரப்பு நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதினை ஆய்வு செய்து முக்கிய சர்வதேச பொது சுகாதார துறை தெரிவித்தது. அதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதான பணிகளை செய்துவருகிறது.மேலும் மருந்துகள் தயாரிப்பில் முழு வீச்சில் அக்கறை கொண்டு இந்த நோயினை ஒழிக்க  பல யுக்திகளை கையாண்டு வருகிறது .இந்த நோய் பல்வேறு வகைகளில் காணப்படும் அதிலும் கடுமையான டெங்கு (முன்பு டெங்கு இரத்த காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது) முதல் பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து டெங்கு நோய் 1950 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். 

அதன் பிறகு இன்று, இந்த நோயின் தாக்கத்தை பெரும்பாலான ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் குழந்தைகள் மத்தியில் மருத்துவமனையில் இறப்பு விகிதத்தை    அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது .வைரஸ் நான்கு, தனித்துவமான செல்கள், ஆனால் மிகவும் நெருங்கிய தொடர்புடைய serotypes நோய் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கிறது டெங்கு (குகையில்-1, டென்-2, டென்-3 மற்றும் டென்-4). ஒரு தொற்று இருந்து மீட்பு குறிப்பிட்ட serotype எதிராக வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. எனினும், ஒவ்வொரு வருக்கும் இந்த செல் இருக்குமேயானால் அது நோய் வராமல் காக்கும் .இந்த செல் பலவீனம் அடையும் பட்சத்தில் நோய் தொற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

குறுக்கு தடுப்பு பகுதிகள் கொசுக்களை உருவாக்கும் இடங்களாகும்.பழுதடைந்த நீர் தேங்கிகளால் மற்றும் துப்புரவு செய்யாத குப்பைத்தொட்டிகளால் உருவாகும் கொசுக்கள் நோய் உண்டாக்கும் .

கொசு மூலம் தொடர்ந்து நோய் தொற்று பரவி கடுமையான டெங்கு காயிச்ச்சலை உருவாக்கி ஆபத்தை அதிகரிக்கிறது .டெங்கு நோய் உலக மக்கள் தொகையில் அதன்  காய்ச்சலின் நிகழ்வால்  சமீபத்திய எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த நோய் 2.5 பில்லியன் உலக மக்கள் மக்கள் தொகையில் 40% மேல் - டென்குவால் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டெடுத்துள்ளனர்.அந்த ஆய்வில் பதிய பட்டிருப்பது! வரவிருக்கும் ஒவ்வொரு வருடமும், 50-100 மில்லியன் டெங்கு நோய் காய்ச்சலால் தொற்று இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது .

1970 முன், தான் ஒன்பது நாடுகளில் கடுமையான டெங்கு நோய் அனுபவம் இருந்தது. நோய் ஆப்ரிக்கா, அமெரிக்க, கிழக்கு மத்தியதரைக்கடல், தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது அதிகரித்துள்ளது . தென் கிழக்கு ஆசியா மாகாணம் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது .அமெரிக்கா முழுவதும் இதன் நிகழ்வுகளில், தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் 2008 இல் 1.2 மில்லியன் மக்கள் இந்த நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக (உறுப்பினர் நாடுகள் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில்) 2010 இல் 2.2 மில்லியனாக இதன் பாதிப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதன் தாக்கத்தை சமீபத்தில்முழுமையாக அதிகாரப்பூர்வமாக கணக்கெடுத்து  அறிவிக்கப்படவில்லை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2010 இல், டெங்கு மற்றும் 1.6 மில்லியன் பாதிப்பு எனவும் 49 000 இதனால் மரணித்துள்ளதாகவும் தகவல் அறிக்கையில் சமர்பித்துள்ளனர் .இந்த அதிகாரப்பூர்வ ஆய்வை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2010 இல் டெங்கு காய்ச்சல் ஒரு சாத்தியமான அச்சுறுத்தலுக்குள் ஐரோப்பா,மற்றும் டெங்கு உள்ளூர் பரிமாற்றம் பிரான்ஸ் மற்றும் குரோஷியா முதல் முறையாக அறிவிக்கப்பட்டது .பின்னர் மேலும் இந்த நிகழ்வுகளில் மூன்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டது.கடுமையான டெங்கு ஒரு மதிப்பீட்டின்படி 500 000 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதாக தகவல் வெளியாகின.அது யாரை பாதிக்கிறது சொல்லப்ப்போனால் இதன் தாக்கம் பெரும்பாலான குழந்தைகள் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளடங்குகின்றனர் .



அந்த பாதிக்கப்பட்ட இறப்பு  சுமார் 2.5%. சதவிகிதம் தற்போது கணக்கெடுத்து குழந்தை இறப்பு விகிதத்தை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது .இந்த நோய் WHO / TDR / StammersAedes aegypti கொசு டெங்கு முதன்மை வெக்டராகும். வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் கொசுக்கள் கடித்தால் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. 4-10 நாட்கள் வைரஸ் அடைகாக்கும் பிறகு, நோய்த்தொற்றுடைய ஒரு கொசு தனது வாழ்நாள் முழுவதும் வைரஸ் கடத்தும் திறன் உள்ளது.நோய்த்தொற்றுடைய மனிதர்களை பாதிப்பற்ற கொசுக்கள் இந்த வைரஸ் ஒரு ஆதாரமாக இருக்கிறது . முக்கிய கேரியர்கள் வைரஸ் பெருக்கிகள் உள்ளன. முதல் அறிகுறிகள் தோன்றும் பிறகு Aedes கொசுக்களின் மூலம்; ஏற்கனவே டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் தொற்று (அதிகபட்சம் 12 4-5 நாட்கள்) தொடர்ந்து இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்ய முன் வர வேண்டும் .பெரும்பாலும் நகர்ப்புற வாழ்விடங்களில்  இனங்களை Aedes aegypti கொசு உயிர்களை கொள்கலன்கள் பெருக்கி பகுதி வாரியாக  அதன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மற்ற கொசுக்கள் Ae போலல்லாமல். aegypti என்ற பகல்நேர ஃபீடராக இருக்கிறது .அதன் உச்ச கடிக்கும் காலங்களில் காலையில் மற்றும் அந்தி முன் மாலைபொழுது அதிகரித்து உருவாகும் . ஏ பெண். aegypti என்கின்ற ஓர் வகையான கொசு .Aedes albopictus, ஆசியாவில் ஒரு இரண்டாம் நிலை டெங்கு வெக்டார், பயன்படுத்தப்படும் டயர்கள், (ஒரு இனப்பெருக்க வாழ்விடம்) மற்றும் பிற பொருட்கள் (எ.கா. அதிர்ஷ்டம் மூங்கில்) மற்றும் குப்பைத்தொட்டி (சாதங்கள் விரையமாகுமிடம்.). Ae. albopictus எனும் கொசு அதன் இனவிருப்தியை குளிர்  பிரதேசத்தில்பெருக்கும் .சர்வதேச வர்த்தகமாக  தற்போது திகழ்வது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் இன்று அதிகரித்து காணப்படுகிறது.ஐரோப்பா குளிர்ந்த வெப்பமான பகுதிகளில் ஒன்று ஆகவே அங்கு அது பரவக்கூடிய அளவில் மிகவும் தகவமைப்பு மிகுந்த இடமாகும் .

அதன் பரவல் microhabitats செயல் திறன் முடக்கம், செயலற்றிருத்தல், மற்றும் திறன் கீழே வெப்பநிலை அதன் சகிப்புத்தன்மை காரணமாக நோய் எதிர்ப்பு உள்ள எடுத்ததில் தாக்காமல் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்தவர்களை இந்த நோய் அதன் பண்புகலை டெங்கு காய்ச்சலாக கொடுக்கிறது .அது பெரும்பாலும்  கைக்குழந்தைகள், இளம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தாக்குகிறது . சிறந்த பராமரிப்பு இல்லாத பட்சத்தில் கடுமையான, காய்ச்சாலை அதிகரித்து மரணத்தை ஏற்படுத்துகிறது .இதன் தாக்கம் முதலில் கடுமையான தலைவலி உண்டாக்கும் பிறகு  கண் சிவக்க வைக்கும் , பின்னால் தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, தடித்த சுரப்பிகள் அல்லது வெடிப்பு: உயர் காய்ச்சல் (40 ° C / 104 ° F) பின்வரும் அறிகுறிகள் இரண்டு சேர்ந்து வருகையில் அது தேங்கு காய்ச்சலின் அறிகுரியாகிறது .

நோய்த்தொற்றுடைய ஒரு கொசு இருந்து கடித்த பிறகு 4-10 நாட்களுக்கு ஒரு நோயரும்புகாலம் பிறகு, 2-7 நாட்களுக்கு பொதுவாக கடந்த அறிகுறிகள்.கடுமையான டெங்கு கசிவு, திரவம் குவிதல், சுவாசித்தலில், கடுமையாக பெருகும் .அதன் எச்சரிக்கை அறிகுறிகள் 3-7 நாட்கள் வெப்பநிலை குறையும் (கீழே 38 ° C / 100 டிகிரி பாரன்ஹீட்) இணைந்து முதல் அறிகுறிகள் ஏற்படலாம் மற்றும் பின்வருமாறு: கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, வேகமான சுவாசித்தல், இரத்தப்போக்கு, ஈறுகளில், சோர்வு, ஓய்வின்மை, இரத்தத்தில் வாந்தியெடுக்க. கட்டமும் அடுத்த 24-48 மணி அபாயகரமானதாக இருக்கலாம்; முறையான மருத்துவ சிக்கல்கள் மற்றும் மரண ஆபத்தை தவிர்க்க தேவைப்படுகிறது

டெங்கு காய்ச்சல் குறிப்பிட்ட சிகிச்சை காலங்களில் கடுமையான பாதிப்பிலிருந்து தவிர்க்கலாம் .டெங்கு,நோயின் விளைவுகள் மற்றும் தீவிரமடையும் நிலையில் அதை அனுபவமுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் மருத்துவ உயிர்களை காப்பாற்ற முடியும் ஆனால் அதுவே முத்திய நிலையில் கால அவகாசம் எடுத்துக் கொண்டாப்பிறகு குணம் படுத்த முடியாது . 1% க்கும் குறைவாக க்கும் மேற்பட்ட 20% இறப்பு சிறந்த சுகாதாரம் மூலம் இறப்பு விகிதம் குறையும் என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.நோயாளியின் உடல் திரவ அளவை பராமரிப்பு மற்றும் கடுமையான டெங்கு பாதுகாப்பு சுகாதாரம் முக்கியமானது.நாய்த்தடுப்புடெங்கு விலங்குகளின் மூலம் பரவும் தேங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதற்கு  எதிராக பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது .அந்த தடுப்பூசியின் வளர்ச்சி சமீபத்திய முன்னேற்றம் இருந்தது எனினும் டெங்கு / கடுமையான டெங்குக்கு எதிராக தடுப்பூசி பெரும் சவாலை கொண்டதாக அமைந்தது .அச்சமயம் உலக நாடுகள் டெங்குஒழிக்க முயற்சி பல உலக நாடுகள் கையாண்டது. தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு ஆதரவை தனியார் நிறுவனங்கள் அதன் பங்களிப்பை தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மருத்துவத்துறைக்கு நல்கியது அந்த நோயினை தடுக்க அப்போது பேருதவியாகிருந்தது .

தடுப்பூசி சோதனைகள் பல்வேறு கட்டங்களில் அகில உலகில் தீவிர கண்காணிப்பில் இறங்கியப்போது தடுப்பு மற்றும் கட்டுப்பாடுWHO / TDR / துணையோடு டெங்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தமுடியும் .துப்புரவு சுற்றுசூழல் மற்றும் சுகாதாரமான கழிவறைகள் ,மூலம் கொசு  முட்டை இடுவதை தவிர்க்கலாம் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் மாற்றியமைத்தல் மூலம் வாழ்விடங்கள்;சரியாக திட கழிவு அப்புறப்படுத்துகிறது மற்றும் செயற்கை மனிதனால் வாழ்விடங்களை நீக்குவது;காலியாக்கும்போது மற்றும் ஒரு வாராந்திர அடிப்படையில் உள்நாட்டு நீர் சேமிப்பு கொள்கலன்களின் சுத்தப்படுத்துதல், உள்ளடக்கும்;நீர் சேமிப்பு வெளிப்புற கொள்கலன்களுக்கு பொருத்தமான பூச்சிக்கொல்லிகள் விண்ணப்பிக்கும்;போன்ற ஜன்னல் திரைகள், நீண்ட sleeved ஆடைகள், பூச்சிக்கொல்லி சிகிச்சை பொருட்கள், சுருள்கள் மற்றும் vaporizers போன்ற தனிப்பட்ட குடும்ப பாதுகாப்பு பயன்படுத்தி;நீடித்த நோய்ப்பரப்பும் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் mobilsation அதிகரிக்கிறது;இடம் அவசர வெக்டார் கட்டுப்பாடு நடவடிக்கைகள் ஒன்றாக திடீர் போது தெளித்தல் போன்ற பூச்சிக்கொல்லிகளை விண்ணப்பிக்கும்;வெக்டார்களின் செயலில் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாடு தலையீடுகள் செயல்திறனை தீர்மானிக்க மேற்கொள்ளப்படும்.யார் பதில்பின்வரும் வழிகளில் டெங்கு பதில்:ஆய்வகங்கள் அதன் ஒத்துழைத்து நெட்வொர்க் மூலம் திடீர் உறுதிப்படுத்தல் நாடுகள் ஆதரவு;தொழில்நுட்ப ஆதரவு மற்றும் டெங்கு திடீர் திறன்மிக்க நிர்வாகத்திற்கான நாடுகளுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது;மருத்துவ மேலாண்மை, நோய் கண்டறிதல் மற்றும் அதன் ஒத்துழைத்து மையங்கள் சில பிராந்திய மட்டத்தில் நோய்ப்பரப்பும் பயிற்சியை வழங்குகிறது;ஆதாரம் சார்ந்த உத்திகள் மற்றும் கொள்கைகள் formulates;; பூச்சிக்கொல்லி பொருட்கள் மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட புதிய கருவிகள், உருவாகிறது100 க்கும் மேற்பட்ட உறுப்பினர் நாடுகள் இருந்து டெங்கு மற்றும் கடுமையான டெங்கு உத்தியோகபூர்வ பதிவுகளை சேகரித்து;டெங்கு தடுப்பு மற்றும் உறுப்பினர் நாடுகள் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் புத்தகங்களையும் வெளியிட்டு விழிப்புணர்வு தந்து வருகிறது .

தமிழ்நாட்டில் 20012 டெங்கு காய்ச்சல் நிலவரம் .

இந்த  டெங்கு காய்ச்சலால் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர்.இதன் நிலையில் இந்த நோய் தமிழகத்தில் நெல்லை ,தூத்தக்குடி,கன்யாகுமரி மற்றும் பல்வேறு தென் மாநிலங்களில் பாத்திப்பிற்குல்லாகியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரம் தெரிவிக்கின்றது . இது ஒரு கொடிய நோய் கொசுக் கடியினால் ஏற்படும் விளைவே அது நோயாக மாறுகிறது .நோய் ஏற்பட்டப்பிறகு கொசுக்கடி பல்வேறு நபர்களுக்கு கடிப்பதால் அது எளிதாக பரவுகிறது .

டெங்கு காய்ச்ச்சல் என்றால் என்ன ?
டெங்கு காய்ச்சல் (DENGUE FEVER) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால்ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள்ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்குகுருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. 

நோய் பரவும் முறை

AEDES எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (AEDES) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (break bone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும். உதாரணமாக:வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற நாடுகளில் பரவி வருகின்றன.

இதன் அறிகுறிகள் !
scematic depiction of the symptoms of dengue fever
  • நல்ல காய்ச்சல்
  • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
  • கடும் தலைவலி
  • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
  • வாந்தி
  • தோல் சிவத்தல் (ரஷ்)
  • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
  • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள்.
  • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
இந்த நோய் 2006 இல் தொடங்கி உலக அளவில் பரவி வருகிறது இந்த நோயால் இதுவரை உலகில்மருத்துவ) முறை இந்த நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் சிலருக்கு இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. இந்த நோய் குணமடைய நல்ல ஓய்வு, நிறைய குடி நீர் ,உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும்.

தடுப்பு முறைகள்

கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.

ஆராச்சிகள் டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, வைரசுக்கான தடுப்பு மருந்து உருவாக்கம், வைரசுக்கேதிரான மருந்துகள் கண்டுபிடிப்பு என பல வழிகளிலும் ஆராச்சியாளர்கள் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.


சுகாதாரத்துடன் நடந்தால் இந்த நோய் வரமால் பாதுகாக்கலாம் . ஆகவே கொசு கடியிலிருந்து மீள அதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டால் இந்த நோயினை தடுக்கலாம்.


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்