கவிஞர் .முபாரக்கின் கவிதை முதல் இடம் பிடித்தது .

 தமிழ்நாடு தமிழ் சங்கம் நடத்திய கவிதைப்போட்டியில் கவிஞர் .முபாரக்கின் கவிதை முதல் இடம் பிடித்தது .

மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் கவிதைப்போட்டி இம்முறை தாய்மை என்கிற தலைப்போடு கவிதை எழுத  முன் வைக்கப்பட்டது .இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகள் வரவேற்கப்பட்டன சேகரிக்கப்பட்ட கவிதையை கருத்து ,பொருள் ,நுனக்கமாய் ஆராய்ந்து வெற்றியாலரென முடிவு செய்யப்பட்டது .

இதில் கூனிமேடுவை சார்ந்தவரான கவிஞர் முபாரக் முதல் பரிசை வென்றுள்ளார் .


"தாய்மை"!(பரிசைவென்றக்கவிதை )

அன்பும் ஆதரவும் பெருக்கெடுத்து
அரவணைப்பாய் உள்ளங்களிரு உறவாடுகையில்
புடைத்தெடுத்த பரிமாணம் உருகுகையில்
இன்ப ஆனந்தத்தில் விழும் சிருத்துளிநீர் !

ஓடையில் விழுந்திடுகையில் கற்பநிலத்திற்காகும்
பாசனை ! - அந்நீரில் உருவெடுக்கும் விதையாய்
முளைத்து கருவாகி கனியாக முளைக்கையிலே
தந்திடும் "தாய்மை"யின் முகவரி !

வாசமாய் மணக்கும் உறவுகளில்
வசந்தமாகும் பெருமை அருமையே !-அகம்
நிறைத்திடுமின்புறுவள் பெருகிடும் வலிமை
எளிமையோடு பெற்றெடுக்க தாங்கிடுவாள் வலியை!

இனிமையோடு பெருத்தாலும் பைக்கோனிக்கு
வருத்தமில்லை ஊசியால் தைத்தாலும்
இரணக்காது கனத்தே சுமந்துடுவாள்
தாய்மையென்ற நினைப்போடு சுமை !

நாட்கள் முடிகையில் சிசுவாய்
பெற்றதால் பாசத்தின் வெளிபாடு
வெளியேறிவிடும் சிசுவாய் நாக்கூறும்
அவள்கொண்ட உறவுக்காகுமது ஆதாரமே "தாய்மை


நம்மிடத்தில் ஒற்றுமையின்மையை எடுத்துக்காட்டிய கார் விபத்து !


நேற்று காலை சுமார் ஏழு மணி அளவில் சுபுஹு தொழுகைக்கு பின்னால் ஏற்பட்ட கார் விபத்தால் பள்ளிவாசல் தடுப்புச் சுவர் பலத்த சேதாரமடைந்து நொறுங்கியதால் அவ்வப்போது கூடிய மக்கள் அந்த வாகனத்தை கையகப்படுத்தி இருபத்தைந்து ரூபாயை கோரியுள்ளனர் .போதையில் தடுமாறி கவனக் குறைவால் விபத்து நேர்ந்தாலும் பாதிக்கப்பட்ட சுவரை அமைக்க கோரிய பணம் போதிய அளவில் கையில் இல்லாததால் ஐந்தாயிரம் ரூபாயை தர ஒப்புக்கொண்ட வாக ஓட்டி...!

இதையறிந்து வந்த முன்னாள் முத்தவல்லியின் முப்பதாயிரம் ரூபாய் கோரிக்கையின் காரணமாக நம்மிடத்தில் இல்லை மறுத்த வாகன உரிமையாளர்களை காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன் கூறி காவல் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு பேசியதால் மரக்காணம் காவல் நிலையத்திலிருந்து கூனிமேடு மக்களால் கையகப்படுத்தப்பட்ட வாகனத்தை காவலர்கள் கையகப்படுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் .

கைக்கு எட்டியதுக்கூட சேதாரமாய் போச்சே ...என்கின்ற உதடுகள் விரிந்து பிசையும் வார்த்திகள் வந்தாலும் ,கிடைத்தவரைக்கும் வாங்கிக்கொண்டு இருக்கலாம் தற்போது காவல் நிலையத்திற்கு சென்றதால் இலாபம் இல்லாமல் போச்சே ..என்கின்ற முன்முனுப்புகளும் உணர முடிகிறது .

மேலும் சிலர் யார் இடத்தை சேதப்படுத்தி வாகனத்தை கொண்டு செல்ல அனுமதிக்கலாம் .ஊர் மக்களை விட காவலர்களுக்கு எந்த உரிமை !மக்களால் சாதிக்க முடியாது நினைப்பது வருந்தத்தக்க செயலாகும் நாம் ஒன்றுப்பட்டு முற்றுகைஇட்டிருந்தால் கண்டிப்பாக நல்ல தீர்வை எட்டி இருக்கலாம் .நம்மிடத்திலே ஒற்றுமையின்மை காரணத்தினால் எல்லாமே கை நழுவி செல்கிறது .

இதை எப்போது நம்முடைய ஊர் மக்கள் உணர்வார்களோ?

K.M.J.K வினரால் அங்கீகரிக்கப்படாதவர்களுக்கு பித்ரா வழங்க வேண்டாம் அந்த அமைப்பு கோரிக்கை !

குவைத் வாழ் கூனிமேடு மக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட மொத்தம் பனிரெண்டு உறுப்பினரை தவிர ...!இல்லையெனில் ஜமாஅத் ரசீது உள்ளவர்கள் அந்த ரசீதில் ஜமாத்தின் முத்திரையும் தலைவரின் கையொப்பம் இருக்கும் நபர்கள் வசமே பித்ரா ,ஜகாத் பணத்தை வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளனர் .

மேலும் கடந்த ஆண்டைவிட மிகவும் சிறப்பாக செய்யவும் திட்டமிட்டுள்ளனர் ,தாங்கள் வசூல் செய்யும் மொத்த பணமும் கூடுதலாக வேண்டுமானால் மக்களுக்கு சென்றடையும் ,வேறு சில ஜமாஅத் போன்று மற்ற ஊர்களுக்கும் ,தாங்களின் சொந்த அமைப்புக்கும் செயல்பாட்டிற்கும் நிர்வாகத்திற்கும்  செல்லாது என அந்த ஜமாஅத் உறுப்பினர்கள் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளனர் .

K.M.J.K அமைப்பினர் முழு ஈடுபாடுடன் பித்ரா வசூலில் ஈடுபட்டுள்ளனர் .

அவ்வப்போதும் போட்டியும் பொறாமையும் நிலைத்திருக்கும் இந்த ஜமாத்திற்கு சோதனை வந்தாலும்  தாங்கி வெற்றி நடைப்போட வேண்டும் என்கின்ற ஆர்வம் துணிச்சல் ,அவர்களுக்கு இருக்கிறது .

பல்வேறு அமைப்புகள் ,ரமதான் முதல் நோன்பன்ரே பித்ரா வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் மத்தியில் தாங்களும் சலித்தவர்கள் இல்லையென நிரூபணம் செய்துள்ளனர் .முதல் நோன்பன்று துவங்கிய பித்ராவசூல் பனிரெண்டு உறுப்பினர்களுடன் ,நிர்வாக அமைப்பினர்களும் தங்களின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர் .

மக்கள் மத்தியில் யார் எந்த ஜமாஅத் நல்ல ஜமாஅத்த கேட்ட ஜமாஅத்தா ?கேட்டு கொடுக்க நினைக்கும் பல்வேறு மத்தியில் எப்படி இல்லைஎன்று சொல்வது ஆளுக்கு எதையாவது கொடுத்து அனுப்பவேண்டும் நினைப்பவர்களும் உண்டு .இருந்தாலும் கூனிமேடு ஜமாஅத் என்பது பல்வேறு நபர்களின் ஆதரவிலும் மக்கள் பெருவாரியான கிளைகளாக பிரிந்து வசூல் செய்து வருவதால் எண்ணிக்கையில் இவர்கள்தான் அதிக அளவில் இம்முறை வசூல் செய்வார்கள் கருதுகிறோம் .குறைந்தது முன்னூறு  குவைத்தி தினாருக்கு மேலாக வசூலாக வாய்ப்புள்ளது .இது வரையில் நூறை தாண்டிருக்கும் என்கின்ற கருத்து கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது .ஆகவே  இம்முறை வசூலில் குவைத் முஸ்லிம் ஜமாஅத் கூனிமேடு சாதனைப்படைக்கும் .


குவைத்தில் பித்ரா வசூல் செய்யும் K.M.J.K அமைப்புக்கு கூனிமேடு குரல் ஆதரவு .!

ரமதான் மாதத்தில் வசூல் செய்யும் பணத்தில் எப்படி வழங்கலாம் ?பணமா?இல்லை பொருளா?எது சிறந்தது என்று ஒப்பிட்டு பார்த்தும் மார்க்க அறிஞர்களின் 
சொல்லும் ,அறிவுரையும் முன்னிறுத்தி ,நேர்மையாக வழங்கப்பட்டுள்ளது .

இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமாக தேவையாக கருதுவது பணமே !மக்களிடத்தில் பொருளுக்கு ஆதரவு இல்லை இருப்பினும் ஏன் இந்த ஆதரவு என்கின்ற கோணத்தில் ஆய்வுக் கொள்ளுகையில் எங்களுக்கு கிடைத்த ஓர் மறுக்க முடியாத உண்மைத் தகவல் .

கூனிமேட்டில் கார் விபத்தால் பள்ளிவாசல் சுவர் சேதம் !




நேற்று அதிகாலை காலை சுப்ஹு தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற விபத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைப்பெற வில்லைஎனத்தகவல் வந்தாலும் தற்போதுதான்
பள்ளிவாசலுக்கு வண்ணமடித்து பல்லாயிரம் ரூபாய் செலவழித்து புதுப்பித்திருக்கும் வேலையில் இந்த கோர சம்பவம் நடைப்பெற்றிருப்பது நினைத்தால் வருத்தமளிக்கிறது .

அண்மையில் ,அதாவது ஒரு வாரத்திற்கு முன்புதான் ரமதான் மாதத்தை முன்னிட்டு அனைத்து வேலைப்பாடுகளும் முடித்து தயார் படுத்திய நிலையில் ...
நடைப்பெற்ற விபத்தால் பள்ளிவாசலின் தடுப்பு சுவர் பக்கத்தில் வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் இடித்ததில் சுவர் சேதமடைந்துள்ளது .

மேலும் ,பாதிப்பிற்குள்ளாகிய சேவரை சேதப்படுத்திய வாகனிடம் வசூல் செய்துள்ளார்களா? பொடு ,போக்காக விட்டு விட்டார்களா?செய்திகள் இன்னும் வராத காரணத்தால் இதைப்பற்றி முழுமையான தகவல் கிடைக்கவில்லை .

இந்த சம்பவத்தினால் கவலையடைந்துள்ள குவைத் கூனிமேடு வாழ் சகோதரர்கள் ,சரியான ஊரில் தலைமை இருந்திருந்தால் எதையாவது வாதாடியாவது தொகைப் பெற்று இருக்கலாம் .ஆனால் யார் எவரிடம் கேட்பார்கள் என்கின்ற முன்முனுப்பும் இருக்கிறது .முழு விபரம் அறிந்து வெளியிட கூனிமேடு குரல் கடமைப்பட்டிருக்கிறது .

பிரணாப் முகர்ஜி 13 வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்க உள்ளார் .

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைப்பெற்ற குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சராக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகவும் பெரும்பான்மை காட்சி ஆதரவினாலும் தனக்கு எதிராக போட்டியிட்ட பழங்குடி மக்கள் இனத்தவரும் லோக் சபாஹ் நிர்வாகியுமான திரு. சக்மாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் , பிரணாப் எடுத்த வாக்குகள் மொத்தம் 558,௦௦௦ சக்மா பெற்ற மொத்த வாக்கு 239,966 ஆகும் .ஆகவே அவரைவிடை பாதியளவில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவராக பிரணாப் அவர்கள் அமர இருக்கிறார் .

எது சிறந்தது பணமா-பொருளா? ஆய்வுக்கட்டுரை விரைவில் ....!

இன்றைய பிரச்சனைகளை முன்னிறுத்தி அன்றைக்கு வழங்கப்பட்ட கோதுமை !{நபி ஸல் }செல்வந்தர்களிடம் கொள்முதல் செய்த கோதுமை வழங்குவது அவசியமா இன்றைக்கு கால கட்டத்திற்கு ,பிரியாணி செய்யும் பொருட்களா ?இல்லை எது வேண்டுமானாலும் அவர்களின் விருப்பமே ....கூறும் பணமா? .

நம்முடைய இசுலாத்தில் கருத்து ஒன்றுதான் மன நிலை வேறுபட்டு மோதல்கள் உருவாகும் நிலை இருப்பதால் எது சிறந்தது என்பதினை ஆய்வு செய்து முடிவினை வெளியாக்கப்படும் .இது இந்த இணையத்தின் சொந்த கருத்தாக இருக்காது மார்க்க வல்லுஞர்களின் சேகரிக்கப்பட்ட தொகுப்பாகும் .ஆகவே காத்திருக்கும் பணிவோடு சில நாட்கள் வெளியாகும் வரையில் !

பித்ரா பணம் யாரிடம் வழங்குவது கூனிமேடு மக்களின் குமுறல் .!

அண்மைக்காலமாக ஜமாத்தே இல்லை என்று சொல்லிக்கொண்டு வேதனைப்பட்டுக்கொண்டிருந்தோம் .அனால் தற்போதோ வீதிதோறும்  ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு நாங்கள்தான் சிறந்தவர்கள் எங்களிடம் தங்களின் நன்கொடை பித்ரா வசூல் வழங்கினால் இசுலாத்தின் முறைக்கும் நெறிக்கும் உகுந்ததாக வழங்கப்படும் என்பதாக ஒரு அமைப்பும்.,!அதற்கு மாறாக  மற்றொரு அமைப்போ நாங்கள் மக்கள் செல்வாக்கிலும் ஆதரவிலும் செயல்படும் ஊர் ஜமாத்தாகும் அதனால் தனி நபர் வசூலில் நாங்கள் குறைக்கூற விரும்பவில்லை !

நேர்மைக்கும் ,பணிவுக்கும் ,இசுலாத்தின் வழிமுறைகளை  இன்றைய கால கட்டத்தின் அவசியத்திற்கும்  உணர்ந்தவாறு அதனை கருத்தில் கொண்டு இன்றைய அத்தியாவசிய நிலைப்பாடுகளை முன்னிறுத்தி எது சிறந்தது ? பணமாக தருவதா?பொருளாக பங்கிடுவதா? தங்களின் சிந்தனைக்கே எங்களின் கருத்து  வைக்க கடமைப்பட்டோம் அப்போது ஊர் மக்களின் நிலைப்பாடும் ஆதரவும் பணத்திற்கே  ஆதரவளித்ததினால்  ஏகோபித்த முடிவினை மக்கள் ஆதரவினால் எடுக்க முடிந்தது .எனறுக் கூறுகின்றனர் .

ஆனால் இன்றைய நிலையில் அத்தியாவசியப்பொருட்கள் அவர்களுடைய விருப்பத்திற்கும் ,அவர்களின் நிலைக்கு வாங்கிக்கொள்வதுதான் இன்றியாமையாகிருக்கும் ,ஆகவே புத்தாடை  அணிவதும் ,உணவு பண்டங்கள் வாங்கிக்கொள்வதும் பொருட்கள் வாங்கிக்கொள்வதும் அவர்களைப்பொருட்டேஅவர்களின் நிலை  என்பதால் .!

அதை மையமாக வைத்து பணமாக அளித்து அவர்களின் பூர்த்தியை நிறைவேற்றும் விதமாக இருக்கும் என்பதின் நோக்கத்தால் முடிவு செய்யப்பட்டது .மேலும் பொருள் தேவையானது அனைத்துமே நம்மால் வழங்க முடியாது சிலர் குடும்பத்தில் சிலப் பொருட்கள் இருக்கலாம் ,மேலும் சில வீட்டில் ஏதாவது குறையலாம் .ஆகவே சிறந்ததும் தேவையானதும் மக்களுக்கு பணமே !அன்றைய காலத்தில் நபி பெருமானார் {ஸல் } அவர்கள் எப்படி தந்தார்கள் அதேப்போன்று தர வேண்டும் கூறிக்கொண்டு வருகிறார்கள். அதன் நிலையை முன்னிறுத்தி பித்ரா வசூல் செய்யும் அமைப்புகள் சிலர் அந்த கோட்பாட்டில்தான் வழங்க வேண்டும் உறுதியோடிருந்தாலும்.

இப்படி வழங்க  வேண்டும்?எத்தன அடிப்படையிலே அப்படி வழங்குவது காலத்தின் கட்டாயமும் அவசியமும் தற்போது என்ன என்பதினை ஆராய்ந்து சொல்வது இன்றியாமையாகும் .ஆகவே சில அமைப்புகள் பேச்சு முழங்க சுவரொட்டி மூலமும் அறிக்கையின் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் எப்படி தருவது ? நம்மிடம் பணம் வாங்கி இவர்கள் பொருளாக தருவார்களா?
இல்லை பணமாக தருவார்களா? எவருடைய யோசனை நன்றாக இருக்கிறது எது சரி ?எது முரண் ? ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு முறையும் பித்ரா வசூல் செய்ய வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது என்ன?யாரிடம் வழங்குவது எவரிடம் வழங்கினால் முறையாக சென்றடையும் இதுவெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கும் மக்கள் அனைவரும் கூறுவதைப்போல யார் முறையாக நபி வழியாக தருகிறாரோ அவரிடம் கொடுக்கலாம் ஆனால் ?சொல்லி இழுக்கும் நபர்களே   எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் .

இதனால் யாருக்கும் தர மனம் இடம் தரவில்லை !சில அமைப்புகள் இன்னொரு அமைப்புகள் விசயத்தில் தலையிடமாட்டோம் ,அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது .அவர்கள் பணமாக தருகிறார்கள் நாங்கள் பொருளாகத் தருகிறோம் கூறுவதால் ஸ்தம்பித்துப்போன மக்கள் நாங்கள் யாரிடமும் வழங்கமாட்டோம் .எங்களின் விருப்பத்திற்கேற்ப தர எண்ணமிட்டுள்ளோம் அதன்படியே தர இருக்கிறோம் கூறி வருவதையும் செவியேற்க முடிகிறது .இருந்தாலும் இந்த கூனிமேடு குரலின் விருப்பமோ தங்களின் எண்ணத்தைதைப்பொறுத்தே தாருங்கள் .

பொருளாக தர விரும்புவோருக்கு பொருளாகத்தாருங்கள்.பணமாக தர விருப்பமிருந்தால் பணத்தை தருவர்களிடம் தங்களுடைய பித்ரா பணத்தை தாருங்கள் .ஆனால் இஸ்லாம் சட்டம் கூறும் நபர்கள் அவர்கள் அவர்களுடைய தற்பெருமைக்கு மட்டும் இடம் தாராமல் உண்மையான நெறிக்கு தருபவர்களை தங்களின் ஆதரவை தாருங்கள் .சில அமைப்புகளில் முறையற்ற வரைமுறையில் அமைப்பை அமைத்துக்கொண்டு தலையும் வாலில்லாமல் இயங்கிக்கொண்டிருகின்றன.இசுலாம் சட்டம் கூறும் இவர்கள் அடிப்படை  சட்டமும் அதன் நோக்கமும் அறியப்படாமல் தானாக ஓர் அமைப்பை உருவாக்கி இசுலாம் சட்டம் இது சொல்லி இருக்கிறது கூறும் இவர்களுக்கு அதே இசுலாம் சட்டம் நிர்வாகத்தைப்பற்றியும் அதன் அடிப்படை விஷயம் பற்றியும் விளக்குகின்றன .

அதை துறந்துவிட்டு இந்த பித்ரா வசூல் விசயத்தில் அரசியல் நாடகம் நடிப்பது சரியில்லை கவுரவம் பெற்றுத்தருவதற்கு கூடுதலாக பல விஷயங்கள் இருந்தாலும் சேவை நோக்கம் கூறிக்கொண்டு இசுலாத்திற்கு முரணாக செயல்படும் இவர்களுக்கு மட்டும் பணத்தை தந்துவிடாதீர்கள் .இசுலாம் சட்டம் கூறும் இவர்களுக்கு எந்த தகுதியில்லை எனக்கருதுகிறோம் காரணம் அந்த அமைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் தலைமையை அமைக்காமல் தனி நபரோடு அந்த அமைப்பு நடந்துக்கொண்டுள்ளதால் அதற்கும் ,அந்த அமைப்புக்கும் அவர்கள் நிர்வாக அமைப்பு அமைக்காத வரையில் தலைவர் மற்றும் பொறுப்பாளிகள் நியமனம் செய்யாத வரையில் இந்த கூனிமேடு குரல் அவர்களுக்கு ஆதரவு அளிக்காது ,

மேலும் தவறான நோக்கம் ,ஆரம்பத்தில் அமைப்பு துவங்கும் முன்பு பெரிய அமைப்பு ஈடுபடும் எந்த ஆக்கத்திலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் கூறிய இவர்கள் அந்த அமைப்புக்கு எதிராக வசூல் செய்து வருவதுசெயல்படுவதும்,எதை செய்தாலும் முன்னுக்கு முரணாக நடந்துக்கொல்வதும் கண்டனத்துக்குரியதே ...!.

திருடிவிட்டு தாயகத்திற்கு தப்பி ஓடிய பணிப்பெண்ண தேடி ஆதரவாளர் இந்தியாவுக்கு சென்றார் .

குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இந்திய நட்டு குடிப்பெண் தன் ஆதரவாளரின் குடியிலிரிந்து குவைத்தி தினர் 20000 எடுத்துகொண்டு திருடிவிட்டு தாயகத்திற்கு தப்பி ஓடி விட்டதாக அவரின் ஆதரவாளர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவளை கண்டுபிடிக்க இந்திய தூதரக ஒத்துழைப்புடன்  இந்திய நாட்டிற்கு பணிப்பெண்ண தேடி இந்தியாவுக்கு சென்றுள்ளார் .

இனிய ரமலான் துவக்கம் !ரமதான்-வெற்றியின் மாதம்!

மத்திய பிரதேச மாகாணமான அரபு நாட்டில் கடந்த வியாழன் இரவும் ,வெள்ளி அதிகாலை சாகர் துவங்கப்பட்டு இனிதே துவங்கிய ரமதான் மாதம் இந்தியாவில் வெள்ளியிரவும் சனிக்கிழமை அதிகாலை துவங்கியது இதனால் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் ஆர்வத்துன் நோற்றிருக்கும் ரமலான் மாதத்தை ஒவ்வோர் முஸ்லிமும் இதன் சிறப்பை அறிவது அவசியமே ...!

ஆகவே தினந்தோறும் ரமதான் வரை ராமதானுடைய சிறப்பை சிற்றுரையாக வழங்கவும் இதனால் மக்கள் உணர்ந்து நடக்கவும் தெளிவுப்படவும் ஆக்கம் ஊக்கமுடையதாக இருக்குமென நாம் நம்புகிறோம் .தற்போது ஊடகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பெருதுவக்க பேசப்பட்டாலும் அன்றைய நிகழ்சிகள் அன்றைக்குமட்டும் காண முடியும் அதற்கு பிறகு காண்பது அறிது  என்பதால் எப்போதும் படித்து பயன் பெறுகிற வகையில் இந்த ஆக்கத்தை தங்கள் முன் பதிவு செய்கிறோம் .

புனிதமாதமான இந்த ரமதான் இசுலாமியர்களின் பாவங்களைப்போக்கி நன்மையை  சேர்க்கும் இனிய மாதமாகும் .ஆகவே இம்மாதத்தில் 
தான் செய்திருந்த பாவங்களை இறையச்சத்தோடு விரதம் நோற்று பிரார்த்தனை செய்து செய்த பாவங்களை  மன்னிப்பு  கோருவதே ..இந்த மாதத்தின் சிறப்பாகும் மேலும் இறைவனின் கட்டளையும் மனிதனை,மனிதன் உணரவும் ஏழை செல்வந்தர் என்கின்ற பாகுபாடின்றி ஒற்றுமையை நாடவும் இந்த மாதம் சிறப்பம்சத்தை வெளிப்படுத்தினாலும் .

பசியை அறிய வேண்டும் வறுமையை உணரவேண்டும் என்பதற்காகவும் தான் அறிந்தப்பசிதான் ஓர் வறுமையாலனுக்கும் இருக்கும் உணர உணர்த்த வந்திருக்கும் இம்மாதம் இறைவனளித்த வரப்பிரசாதம் சொல்லிக்கொள்வதில் தவறில்லை .

ரமதான்-வெற்றியின் மாதம்!

புகழனைத்தும் அகில உலகங்கள் அனைத்தின் அதிபதியாகிய அல்லாவிற்கே உறித்தாகுக. அவனே தனது அருள்மறையில் விவரிக்கின்றான்..



உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)



ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது படைப்பினங்களை சோதனைக்கு ஆட்படுத்தி தனது அருட்கொடையைப்பெற ஒரு வாய்ப்பினை வழங்குகின்றான். முஸ்லிம்களின் ஈமானும் இஸ்லாத்தின் மீதான ஈடுபாடும் ஒரே தலைமையின் கீழ் போர்க்களத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதும் இம்மாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.



நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தனர். அக்காலங்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

அல்லாஹ்(சுபு)ன் கட்டளைகளை உயர்வாகப்போற்றி அதனை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கான மும்மாதிரியாக அவை விளங்குகின்றன. அல்லாஹ்(சுபு)வின் பாதையில் தியாகம் செய்வதற்கும் அவனது கட்டளைகட்கு கீழ்படிந்து அவைகளை மெய்ப்பிக்கப் பாடுபடுவதற்கும் சிறந்த உதாரணங்களாக அச்சம்பவங்கள் திகழ்ந்தன.



மதீனாவிலிருந்த பொய்யர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி அல்திரார் எனும் ஒரு மசூதியை கட்டினர். ரமதான் மாதத்தில் தபூக்கிலிருந்து திரும்பிய நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு உத்தரவிட்டனர்.



ரமதான் 17ம்நாள் 2ம் ஹிஜிரி அல்லாஹ்(சுபு) பத்ர் போரின் போது முஸ்லிம்கட்குசிறந்த ஒரு வெற்றியை அளித்தான்.



'பத்ர்' போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போதுஇ அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?' என்று.(ஆல் இம்ரான் 3:123 124)



இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.



உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)



இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது' என்றனர். இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.



பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல் ஆன்மீக ராணுவ மையமாக ஆக்கியது.

ஆறாம் ஹிஜிரி ஆண்டில் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்தஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹரிதா அனுப்பப்பட்டார். அதற்குமுன்பு ஒருமுறை அவ்வரசி சயித் தலைமை தாங்கிச்சென்ற குழுமத்தை தாக்கி அவர்களின்பொருட்களை அபகரித்தார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியப் பகுதிகளில் மிகவும் காவல்மிகுந்த அரசியாகக் கருதப்பட்டார். மேலும் அவர் வெளிப்படையாக இஸ்லாத்தைஎதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவர் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்குஎதிரான போரில் கொல்லப்பட்டார்.



எட்டாம் ஹிஜிரி ரமதானில் ஹூதைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதனால் இஸ்லாமியப்படையானது பைசன்டைன் படையை எதிர்த்துப் போரிட்டது.

அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்) ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டனர். இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகே இஸ்லாம் அரேபியாவில் வலுவாக வேறு}ண்றியது. அச்சமயம் மக்காவின் தொழுவுருவங்களை

அழித்தபிறகுஇ அரேபியாவின் மற்ற பகுதிகளில் சிறப்பானதாகக் கருதப்பட்ட அல்-லாத்இ மனாத்இ சுவா போன்ற தெய்வவுருவங்களும் அழிக்கப்பட்டன.



இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் கொண்டதாக இருந்தது. நல்லவற்றை ஏற்று தீமையை ஒதுக்கித்தள்ளி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வார்த்தைகளை மெய்ப்படுத்திஇஸ்லாமை ஒரு மேன்மையான தீனாக நடைமுறைப்படுத்த விழைந்தனர். நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகு முஸ்லிம்கள் அந்த சுன்னாவை தொடர்ந்தனர். இவ்வாறாகரமதான் மாதம் பல முக்கிய நிகழ்வுகளை தம்மிடத்தே கொண்டதாக இருந்தது.



ஹிஜ்ராவின் 92 ஆண்டுகட்குப்பிறகு ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன்; வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் சையத் உடன் சேர்ந்து ஸ்பெயின்இ சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசுடன்இணைத்தனர். இது அப்பகுதிகளின்(அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று.இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.



682ம் ஹிஜிரி சலாஹூதீன் அல் அய்யூபி சிலுவைப்போர்ப் படைவீரர்களை சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் ரமதான் மாதத்தில் விடுவித்தார்.



ஹிஜிரி ஏழாம் நு}ற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான். 617 ஹிஜிரியில் சமர்க்கண்ட்இ ரேஇ ஹம்தான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு 70இ000 மக்கட்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.656ஹிஜிரி யில் செங்கிஸ்கானின் பேரனான ஹூலாகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான்.இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில் 180000முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும்முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மசூதிகளில் மதுபானம்தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது.



இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்;த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.



இதுவே ரமதான் மாதம் தரும் ஊக்கமாகும். இந்த ஊக்கத்தின் காரணமாகவே நமது முன்னோர்கள் சவாலாகத்தோன்றிய செயல்களையும் செவ்வெனே செய்து முடித்தனர். பகலை போர்க்களத்திலும்இ இரவை இறைவனிடம் இறைஞ்சியும் அவர்கள் தமது ரமதானை கழித்தனர்.



இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகமானது அன்னிய ஆக்கிரமிப்புகளாலும்இ தாக்குதல்களாலும்இ பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும் வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான போரானது முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆகவே இறைவனின் விசுவாசிகளே எழுச்சி கொள்வீராக. நபிகளாரும்(ஸல்)இ சஹாபா பெருமக்களும்இ தாரிக் இப்ன் சையித்இ குத்து}ஸ்இ சலாஹூதீன் போன்றோரும் காட்டிய வழியில் சென்று வெற்றி காணப்பாடுபடுவீர். இறைமறுப்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருந்துஇ இறைவிசுவாசிகளிடம் அன்புடன் நடந்து முழுமையான நோன்பு நோற்று ரமதானில் இறையருளை பெருவீராக.



அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்(சுபு)இ கிலாஃபாவை மறுபடியும் நிலைநாட்டி இஸ்லாத்தை உலகெங்கும் பரவச்செய்யும் தலைமுறையில் நம்மை ஆக்கியருள்வானாக. அதற்கான முறையான அடித்தளத்தை அமைக்க நமக்கு ஊக்கமும் சக்தியும் அளிப்பானாக! ஆமீன்

இனிய ரமலான்


இனிய மாதம் 
புனிதத்தை விளக்கும் 
கணித நாட்கள் 
முப்பதேயாகும் !

கிடைக்கும் பலனோ 
எண்ணிலடங்காதவை 
செய்யும் கடமையோ 
சொல்லில் அடங்குபவை !

இறைவனின் பரிசோதனை 
உனக்காகும் -நிறைவேற்று   
முடித்திட்டால்  மறுமையில் 
சொர்க்கமே ...இருப்பாகும் !

பசியின் கொடுமை 
நோன்பு நோர்க்கையிலறியும்
சேர்த்த செல்வத்தை 
கொடையளித்து மகிழ்ந்திட்டால் விடையாகும் !

மனிதனை மனிதன் 
நேசிக்கவே இம்மாதம் 
வருமைதனை அகற்றி 
ஒற்றுமையை விளக்கவே ரமதானாகும் !

வருக ,வருக இனிய ரமலானே ...!
பாவங்களை போக்கிட்டு 
அருள்மழை விழவே 
கருனையருள் பொழியவே அளவற்ற எம்ரகுமானே !
 

இனிய  ரமலான் வாழ்த்துக்களுடன் !
கவிஞர் முபாரக் & கூனிமேடு குரல் இணையம் .

இரங்கல் செய்தி !- ஜனாபா -சைனுன்பீ காலாமானார் .



இன்ன லில்லாஹி வஇன்ன இளைஹி ரஜிஹூன் !

inna lillaahi vaainna ilaihi raajihoon !

திடீர்நகரில் வசித்துவந்த மர்ஹூம் ஜனாப் .அப்துல் காதர் அவர்களின் துணைவியார் ஜனாபா -சைனுன்பீ வயது 60, இன்று ஆறு மணி அளவில் வந்தவாசியில் தன்னுடைய மகனுடைய வீட்டில் காலமானதாக அவர்களின் குவைத்தில் வசிக்கும்  புதல்வனான சகோ . சான்பாஷா அவர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் இணையதளத்திற்கு செய்தியினை  வழங்கியுள்ளார் .

மேலும் அன்னையின் உடல் வந்தாவசி அடக்கஸ்தலத்தில் அடக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .மேலும் விபரம் அறிய :+965 99117469.தொடர்புக்கொள்ளவும் .

அன்னை செய்த அத்துனை பாவங்களையும் மன்னித்து ,உயரிய சொர்க்கத்தில் அடைய வேண்டி பிரார்த்திக்கும் அந்த குடும்பத்தில் ஒருவனாகவும் இஸ்லாம் நெறியுகுந்து இறந்த அம்மைக்காக பிரார்த்தனை செய்பவனாக !மரணம் அவர்களுக்கு இன்று நெருங்கிவிட்டது நாளை பின்னே தொடர்ந்து செல்ல இருப்பதை நினைவுக்கூறி டவே .....!-மரணக்க்கூற்றாகும் .!வாழ்வில் நிலையில்லை !உலகம் வெளிச்சம் இருப்பிடமில்லை !இறுதியின் நிலையான வாழ்வு மண்ணறையே .!

என்னின் நீண்ட நாள் கனவு, ஆசை நிறைவேறுமா?

பலவருடமாய் உள்ளத்தில் இருந்த நெருடல் !ஆதங்கம் !வலி !போன்றவற்றால் அணு அணுவாய் உள்ளத்திலும் சித்திரவாதையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உள்ளத்தையும் உணர்வையும் மருந்தாக ஆறுதல் வார்த்தைகளால் அலங்கரித்து ,சுமந்துக்கொண்டிருந்த ஏக்கம் !KMJK அமைப்பின் மூலமாவது நிறைவேறுமா ?என்பதினை ஆவலூட்டியுள்ளது .

தனிமையிலே யோசித்து ,எழுத்தால் வாசித்து கிடைக்காத பலன் இவர்களினாளது எட்டுமா ?என்கின்ற மிகுந்த எதிர்ப்பார்ப்பினை எழுப்பியுள்ளது .இவர்களின் எழுச்சி உரை !ஊர் நலம் பெற ,கல்வியிலும்  மற்ற பிற வழிகளிலும் முன்னேற தடையாகிருக்கும் குருட்டு விழியை இருட்டிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் மறுப் பார்வையளிக்க முன்வந்த இந்த அமைப்புக்கு கோடான கோடி நன்றியினை  மனமுவந்து உரித்தாக்குகிறது .

மேலும் ஊர் வளர்ச்சியிலும் மக்கள் மறு மலர்ச்சியிலும் பங்குக் கொண்டு செயலாற்றும் எந்த அமைப்பாகிருந்தாலும் அவர்களுக்கு உடந்தையாகிருந்து ,அதனுள் பங்கு வகிக்கவே இந்த மக்கள் குரல் விரும்புகிறது .அகந்தைக்கொள்ளவும் ,பொறாமைக்கொள்ளவும் இதுப்போன்ற நல்ல விசயத்தில் தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து ஊர் வளர்ச்சிக்காக பாடு பட வேண்டும் எனவும் அனைத்து இயக்கத்திற்கும் இந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது .

கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாகம் கையில் கொண்டு வர புதிய திட்டம் .

அண்மைக்காலமாக கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாகத்தில் நிலவியிருந்த குழப்பம் அரசியலால் ஊரே தலைக்கீழாக மாறிவருவதை கருத்தில்  கொண்ட குவைத் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தினர் அதனை தடப்பு நோக்கமாகவும் ,புதிய செயல்முறைத்திட்டமாகவும் செயல்படுத்திட புதிய திட்டத்தை யுக்திகலாக்க புதிய ஆலோசனையை சபையினர் முன்பாக  முன்வைத்து அனைவர் ஒப்புதளால் நிறைவேற்றியுள்ளனர் .

தற்போது அங்குள்ள நிலையும் ,தடுக்க வேண்டிய நடவடிக்கைப்பற்றியும் விவரமாக கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளனர் .

கூனிமேடில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் !

சில மாதங்காலமாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருப்பிறிவாய் பிளவுப்பட்டு எதிரும் புதிருமாக நடைப்பெற்று வரும்  பிரச்சனையால் நீதிமன்றம்,காவல்நிலை யமென படியேறி தோய்ந்து களைப்பில் நின்ற நேரத்தில் நீதிமன்றம் இப்பிரச்சனையை கையாண்டு தீர்ப்பாக வக்பு வாரியத்திற்கு பரிந்துரை வழங்கியது .நீதிமன்றப்படியேறி அலுப்பில் இருக்கும் இருத்தரப்பினர்  அந்த வக்பு வாரியத்திற்கு செல்லாமல் மெத்தனப்போக்கு காட்டிவருகின்றனர் .

இந்த நிலையில் எவர் பள்ளிவாசல் நிர்வாகியென அறியாமல் தவிப்போடு இருந்த ஊருக்கு நான்தான் நாட்டாமை என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய அதிகாரத்தை மக்களின் ஆலோசனையின்றி ,ஆதரவின்றி செயல்படுவதால் 
அதனை உணர்ந்த இந்த அமைப்பு ஊருக்கு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக புதிய யுக்திகளை கையாள நிர்வாகக் கூட்டத்தை வியாழன் 12.07.2012 இரவு பத்து மணி அளவில் குவைத் ஷர்க் பூங்காவில் நிர்வாகக் கூட்டத்தை கூட்டினர் . 

கிராத்தை ஓது முடித்து நிர்வாகம் கூட்டப்பட்டதையும் ,அதன் அவசியத்தையும் விளக்கமளித்து தொடர்ந்த இந்த ஜமாஅத் பித்ரா வசூல் பற்றியும் அதனை வழங்கும் முறைகள்  பற்றியும் விளக்கங்களாக விவரித்தனர் .மேலும் இதனை வசூல் செய்ய நிர்வாக அமைப்புகள் கிளைகளை அமைத்து வசூல் செய்ய முடிவெடுத்ததோடு!சமீப காலமாக சந்தா வசூலில் தொய்வும் ஏற்பட்டதை விளக்கமளிக்க....! அதனை தவிர்க்கும் விஷயத்தை ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் ஆலோசனையும்  மேற்கொண்டு சபைக்குள் முன் வைக்க ,,நல்ல முடிவினை விவாதித்து தீர்வினை எட்டப்பட்டது .

அதற்கு பின்பாக (வட்டியில்லா கடன் திட்டம் }அவசரக்கால உதவித்திட்டமாக செயல்படுத்திட முடிவு எடுக்கப்பட்டது .இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் ஊருடைய நிலையும் , கூனிமேடு ஜமாத்தின் போக்கும் முன் வைக்கப்பட்டது .ஊரில் இருப்பிரிவாக பிளவுப்பட்டு இமாம் ஒரு சாராருக்கு ஆதரவாகவும் ,இமாம் நெறிப்படி அறியாத ஒருவராக இருப்பதாலும் ,இஸ்லாத்திற்கு முன்னுக்கு முரணாக போக்கும் தான் இஸ்லாமிய  சட்டம் அறியாதவறென தானே ஒப்புக்கொண்டதால் ..  அவரை நீக்க வேண்டும் எனவும் சபையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் நீக்க்கவும்திட்டம் தீட்டப்பட்டது .

அதற்கு முன்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்த பலரின் குரல் எழுச்சியோடு ஒலித்ததால் இந்த அமைப்பை நிர்வாகத்தை நிர்வகிக்க முடிவினை  கையில் எடுக்கவும் முடிவினை தொடக்கவும் திட்டமிட்டனர் .

அதனின் பலனாக விரைவில் ஊரார்களுக்கு கடிதம் வாயிலாகவும் ,குவைத்  வாழ் மக்களுக்கு சுவரொட்டி வாயிலாகவும் ஆதரவை திரட்டி எவரை பள்ளிவாசல் நிர்வாக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதையும் ஆலோசனை நடத்தி அதன் பிறகு நல்ல  முடிவினை எடுக்கப்படும் எனவும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது .

மேலும் மக்கள் ஆதரவின்றி ஒப்புதலின்றி குடியேறி இருக்கும் சகோதரர் ஒருவரை நிபந்தனை மூலியமாக குடியமர்த்தவும் ,கூனிமேட்டில் நடக்கும் எவ்வித பிரச்சனையாகிருந்தாலும் அப்பிரச்சனை  குவைத் வாழ் மக்களின் ஆதரவின்றி ஒப்புதலளிக்க முன்வரக்கூடாதெனவும் கோரிக்கை மனுவும் விரைந்து அனுப்ப திட்டமிட்டுள்ளது .

மேலும் குவைத் வாழ் மக்களின் நிதியிலிருந்து உதவிப்பெரும் கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாகம் குவைத் வாழ் கூனிமேடு மக்களின் கோரிக்கையை ஏற்று நடக்க வேண்டும் .ஊர் நலம் பெற இஸ்லாமிய சமுதாயம் முன் மாதரியாக வாழ ,இருக்க வேண்டுமெனில் இதற்கு அனைத்து அமைப்புகளும் எதிராக குரல் எழுப்ப வேண்டும் .

பள்ளிவாசல் மேம்பாடுப்பணித் தீவிரம் !

கூனிமேடு ஜாமியா பள்ளிவாசல் .
கூனிமேடு பள்ளிவாசல் கடந்த பதினைந்து வருடத்திற்கு முன்பாக கட்டிமுடித்தாலும் அதனை மேலும் மெருகேற்றிட அவ்வப்போது மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொண்டு நடத்திமுடிப்பதுவழக்கமாகிருந்தாலும் இம்முறை இந்தப்பள்ளி நிர்வாகப் பொறுப்பில் எவரும் இல்லாத காரணத்தால் ஊரைச் சார்ந்த இருவர் எழுச்சிக்கொண்டு சகோ.ஜானி அவர்களும் ,சகோ .ஜமீல் அவர்களின் மேற்பார்வையால் பள்ளியை மேம்படுத்தும் பணி மிகவும் மும்மரமாக ,தீவிரமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது .

ஆகவே , இப்பணியை மேலும் முடிக்க குவைத் வாழ்  ஊர் மக்களின் உதவித் தேவைப்படுவதால் நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்கள் இதனை தயவு கூர்ந்து உடனடியாக பள்ளி மேம்பாட்டினை இதன்பணிகளை செய்து முடிக்க உதவவும் .
இப்பணி பாதி வேலைப்பாடுகள் முடிந்த நிலையில் மீதமுள்ளப் பணியை வெற்றிகரமாக செய்திட சிறியக் கொடைத் தேவைப்படுவதால் இதனை அறிபவர்கள் விரைந்து உடனடித்தர வேண்டுகிறது கூனிமேடு குரல்.

காயிதே மில்லத்திற்கு எதிர்ப்பிற்கான தகுந்த விளக்க பதில்கள் !- தொகுப்பு :எம். அப்துல் ரஹ்மான் .{m.p}

ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை. இதனால் நம்முடைய சிந்தனை ஓட்டம் பாதிப்படைவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகில் வாழ்கிற குறுகிய இக்காலக்கட்டத்தில் செலவு செய்கிற செல்வத்திற்கு மாத்திரமல்ல; செலவு செய்கிற நேரம், உழைப்பு, உதவிகள் என்று எல்லாவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே என்கிற கவலை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தே ஆக வேண்டுமல்லவா!

குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்ற த.மு.மு.க/ம.ம.க. வின் விழிப்புணர்வு எழுச்சிக்கூட்டம்


ஜனாப் .ஜவாஹிருல்லாஹ் மற்றும் அசலம் பாஷா .
நன்றி படம் உதவி:-தமுமுக இணையதளம் .

குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  நடைப்பெற்ற த.மு.மு.க/ம.ம.க. வின் விழிப்புணர்வு எழுச்சிக்கூட்டம் நடைப்பெற்றது .இக்கூட்டத்திற்காக தாய்மண்ணிலிருந்து குவைத் மண்ணிற்கு வருகைப்புரிந்த பேராசிரியர் ஜனாப் .ஜவாஹிருல்லாஹ் அவர்களும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோ.ஜனாப் .அசலம் பாஷா அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினர் .அதற்கு முன்பாக நூல் வெளியிட்டு விழாவாக காட்சியளித்த இந்த கூட்டம் .சகோ .ஜனாப் தாஜ்தீன் அவர்களால் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட இறைத் தூதரின் தலைமைத்துவ முன்மாதரி  நூலை அரபு நூலான சுலைமான் இபுனு அவாத் கைமான்  அவர்களின் தொகுப்பை தனது  ஆக்கமாக பிரசிவித்தார் .

பெண்கள் பாதைத்தவரிட ஆண்களும் உடந்தையே ...!



சமீபத்தில் அனைத்து ஊர்களில் செவியில் நுழையும் செய்திகளாக இருப்பது இவள் அவனுடன் ஓடி போயிட்டாள்  அவன் இவனுடன் கள்ளத்தொடர்பு ,திருமணமாகியும் அவள் இவனை வைத்திருக்கிறாள் .இவன் அவளைவைத்திருந்தான் .கல்லூரிக்கு சென்றால் திரும்பி வரவில்லை ,இவன் கல்லூரிக்கே செல்ல மறுக்கிறான் .இன்னார் வீட்டு முன்னிலையில் அமர்ந்துக்கொண்டு நோட்டமிடுகிறான் .

இவைகளெல்லாம்  முக்கிய காரணமாக திகழ்வது ஊடகமும் நாடகமும் ,கைப்பேசியுமே !நாம் ஒருவேளை பணம் கொடுத்து கெடுப்பது பழக்கம் இல்லையெனில் ஆசைப்படும் பொருளை வாங்கித் தந்து கெடுக்க இருப்பது வழக்கம் அவ்வாரே ..செய்வதால் நாம் கேட் பதையும்அவளுக்கும்,அவனுக்கும்  பிடிப்பதையும் வாங்கித் தரும் பெற்றோர்கள்.அவர்களை பிடித்த அத்துனையும் வாங்கித்தர மறுக்க மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையும் அவர்களின் உள்ளத்தில் ஆசையை தூணாக கிளப்பிவிடுகிறோம்.


இன்று பெண்கள் பெரும்பாலும் வழித்தவிர முக்கிய காரணம் தொலைகாட்சி !குடும்பத்துடன் பார்க்கும் தொலைகாட்சி  அவர்களின் எண்ணங்களையும் ,சிந்தனைகளையும் சிதற வைத்து தீய வழிகேட்டின்பால் கொண்டு சேர்த்துவிடுகிறது .முக்கிய காரணம் இதமான பாடல்கள் இதயத்தை துளைத்து தொலைக்க ஊன்றுகோலும் ,தீண்டுதலும் தேடலாக உருவாகிறது .

குவைத்தில் இருக்கும் அமைப்புகளுக்கு த.மு.மு .க /ம.ம .க அமைப்பினர் அழைப்பு !

இந்திய மண்ணிலிருந்து ,அந்நிய மண்ணிற்கு வருகைப்புரிந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பேண ஒருக் கருத்தரங்கத்தில் சொற்பொழிவையாற்ற வருகைத்தந்திருக்கும் அமைச்சர்களின் வருகையால் குவைத்தில் அமைந்து, செயல்பட்டுக்கொண்டிருக்கும் அத்துனை  அமைப்புகளையும் இந்த அமைப்பின் மண்டல பொதுச் செயலர்  சகோ..முஜிபுர் ரஹமான் அழைப்பு விடுத்துள்ளார் .

மேலும் புதன்கிழமை வந்திறங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா .ஜவாஹிருல்லாஹ் மற்றும் அசுலம் பாஷா இன்று மதியம் மிர்காப் ஜும்மா பள்ளியில்  குத்பா பிறகு நடக்கவிருக்கும் பயானிலும் அதன் பிறகு அல் -ராவ்தா பள்ளியில் 4.00 மணி அளவில் சொற்பொழிவையாற்ற உள்ளதால் .

இங்கு பெருவாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அயம்பேட்டை ஜமாத்தாரையும் ,கூனிமேடு ஜமாத்தாரையும் அழைப்பு விடுத்தது மட்டுமின்றி இதர அமைப்புகள் ,ஜமாத்களை ஒன்றிணைக்க வேண்டி முயற்சித்து அழைப்பு விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

கூடுதல் தகவல் தொடர்புக்கு :+ 965 99851036

இன்று நடக்கவிருந்த தமிழோசையின் பவள விழா இரத்து !

குவைத்தில் பல அமைப்புகள் இருந்தாலும் தமிழனுக்கென்றே தனித்து சொல்லிடும் தமிழோசை கவிஞர் மன்றம்போற்றுதலுக்குரியது . இங்கு வாழும் மக்கள் மத்தியில் தனித்து  விளங்கி மக்கள் மனதில் அங்கம் வகிக்கும் ,இந்த அமைப்பை குவைத் வாழ் தமிழர்களின் குடும்பம் என அழைப்பது வழக்கம் .

இந்த அமைப்பில் பல்லாண்டு காலமாக செயற்குழு உறுப்பினராகவும் ,அண்மை காலமாக ஆலோசகராகவும் அங்கம் வகித்து வந்த திரு .அட்லஸ் அன்சாரி அவர்களின் மறைவின் காரணத்தால் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடக்கவிருந்த பவள விழா இரத்து செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர். பிரான்சிஸ்   தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவிக்கையில் சகோதரரின் இழப்பு எங்களுக்கு ஈடு  செய்திட  முடியா பேரிழப்பாகும் .எங்கள் குடும்பத்தில்{கவிஞர் } உறுப்பினராக இருந்து செயல்வீரராகிருந்து செயல்பட்டு இன்று நம்மைவிட்டு பிரிந்திருக்கும் இவரின் செயல் எல்லையற்றது  கூறி அடக்கிக் கொண்டேப்போனாலும் நல்ல உள்ளம் படைத்தவர் ,பழகுவதிலே நல்ல பண்பாளர் . இவரை பிரிந்து தவிக்கும் இவர்களுடைய குடும்பத்திற்குஇத்தருணத்திலே ஆறுதலை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 

மேலும் இவர் மறைவை ஓட்டி இன்று நடக்கவிருக்கும் பவள விழா கூட்டமும் இரத்து செய்கிறென் எனவும் கூறினார் .

பிரபல எழுத்தாளரும் ,கவிஞருமாகிய அட்லஸ் அன்சாரி இன்று காலமானார் !


குவைத்தில் அட்லஸ் எனும் காகித,எழுதுப்பொருள் நிறுவனத்தில் முக்கிய பதவியாலராக பதவி வகுத்து வரும் இவர் !குவைத் வாழ் மக்களிடேயே தமிழின் தன்னார்வத்  தொண்டினால் ,மக்களால் மிகவும் பிரபலமானார். மேலும்,தமிழோசை கவிஞர் குடும்பத்தில் ஒருவராக அங்கம் வகித்து வந்த அவர் !சமீபத்தில் அந்த குடும்பத்திற்கு ஆலோசகராகவும் பொறுப்பேற்றார் .

இவருடையப் பணிகளை குறிப்பிட்டு கூறுமேயானால் தமிழ் வளர உரமாக இருந்து ,சிறுக் கொடிகளை வழங்கி வளர்த்து வந்தார் மேலும் இவருக்கு தெரியாத அமைப்புகளே அல்லர் !அந்த அளவில் பிரபலமான அவர் பழகுவதிலும் ,குணத்திலும் ,ஒழுக்கத்திலும் நல்ல பண்பாளராக இருப்பார் ..

எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இவரின்  பாவனை சிறுக் குழந்தை உள்ளத்தால் அனைத்து உள்ளத்தையும் வெல்லும் அன்பாளர் .தான் விலகி நின்றாலும் ,நெருங்கி வந்து பேசும் குணம் படைத்தவர் .ஆகவே நல்லோரை போற்ற வேண்டும் ,பொல்லாரை வீழ்த்தப் படவேண்டும் .

நல்லவராகவே ,வாழ்ந்து ,நல்லவாரகவே இயற்கை ஏய்திருக்கும் இவருக்கு இறைவனின் சொர்க்கத்தையடைய நாம் பிரார்த்திப்போம் .

தனியார் நிறுவனத்தில் பணிப்புரிய ஆதரவாளர்களைக் கொண்டு விசாவை புதிப்பிக்கலாம் !



அண்மையில் வெளிவந்த தொழிலார் சட்டம் !தனியார் தொழிலாளராக மாற்றம் செய்ய வேண்டுமானால் தங்களின் ஆதரவாளர்களின் விசாவிற்கு மாற்றம் செய்து பிறகு மாற்றம் செய்யலாம் ..!இதனால் தனியார் நிறுவனத்தில் அடிமை விசாக்களில் பணிப்புரியும் லட்சோப லட்சம் நபர்களுக்கு உதவியாக இருக்கும் .


மேலும் இதை சரியான முறையில் அரசு வழங்கி இருக்கும் சலுகை அதன் சட்ட விதிகளைப்படி பின்பற்ற  வேண்டும் .அதனால் எவர் வேண்டுமானாலும் மாற்ற முடியாது மாற்றுவதற்கு முன்னதாக தான் தேர்ந்தெடுத்து இருக்கும் ஆதரவாளருக்கு சொந்த நிறுவனம் ,அலுவலகம் போன்ற இதர பணிக்கு தேவையான சான்றுகளை சரிப்பார்த்து விண்ணப்பிக்கவும் .


விசாவை துண்டித்து அதன் பிறகு மாற்ற முடியாத பட்சத்தில் கை சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது .!

அதற்காக கவனமாக செயல்படுவது ஒவ்வொருவரின் அவசியம் .

ம.ம.க கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் குவைத்திற்கு வருகை !!

குவைத் மிர்காப் பகுதியில் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொள்ள வருகைத்தரும் ம.ம.க ,தா.மு.மு.க ,கட்சி பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர்கள்பேராசிரியர்,  ஜனாப்  .ஜவாஹிருல்லாஹ் அவர்களும் சகோ அசலம் பாஷா அவர்களும் வருகைப்புரிந்து சமூக மேம்பாடு விழிப்புணர்வுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேருரையை வழங்க உள்ளார்கள்  .

இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 06.07.2012 மிர்காப் ஜும்மா பள்ளிவாசலில் ஜூம்மா குத்பாவுக்கு பின்னால் பேரா .சகோ .ஜவாஹிருல்லாஹ் அவர்கள்  பேருரை வழங்க இருப்பதும் அதற்கு பின் பொது நிகழ்ச்சியாக மாலை 4.00 மணிக்கு தொடங்க இருக்கும் நிகழ்சியில் கலந்துக்கொள்ள இருப்பதாக ஹவள்ளிப் பகுதி பொறுப்பாளராக நியமனம் செய்திருக்கும் சகோ.ஜகரியா தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் மறுநாள் 07.07 2012 சனியன்று மங்காப் பகுதியில் உதயம் உணவகம் கீழ் தளத்தில் சிறப்புரை வழங்க உள்ளதாகவும் தகவலை தெரிவித்திருக்கிறார் .மேலும் குவைத்தில் அனைத்துப்பகுதிகளுக்கும் வாகன வசதிகளை தயார் செய்து கொடுக்க தயாராக இருப்பதாகவும் ,தேவை எனும் பட்சத்தில் அலைப்பேசியில் அழைப்பு விடுத்தால் வீட்டில் வந்து அழைத்து செல்ல காத்திருப்பதாகவும் .

நிகழ்வு நடைப்பெறும் அரங்கில் பெண்களுக்கென்றே தனி இட வசதி ஏற்படுத்தி இருப்பதாகவும் கூடுதல் தகவலை தெரிவித்துள்ளனர் .

மேலும் கூடுதல் ஆலோசனைகள் பெற ...!

சகோ.சர்புதீன்  :+965 99861359
சகோ.ஜகரியா :+965 55816590

குவைத்தில் டுவீ ட்டார் சமூக தளத்தை முடக்க வாய்ப்பு !

உலக நாடுகளில் தற்போது மிக பிரபலாமான சமூக இணையதளமாக உருவாகி செல்வாக்கை பெற்று இருப்பது டுவீட்டார் இணையதளமாகும் .தற்போது குவைத்தி நாட்டவரால் மிகவும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த இணையதளத்தை பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது .

புனைப்பெயருடன் கூடிய அடையாளம் தெரியாத பல்வேறு நபர்கள் அந்த சமூக தளத்தை முறைகேடாக உபயோகம் செய்வதாக எழுந்த சர்ச்சையில்,. இந்த இணையதளத்திற்கு தோலை தொடர்புத்துறை சில விளக்கங்களை கேட்டு ஆவணத்தை அனுப்பி இருந்தது .அதைப் பெற்றுக்கொண்டு எந்த விளக்கத்தையும் அளிக்க முன் வராததால் .அந்த இணையதளத்தை முடக்க குவைத் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது .

ஆள் மாறாட்டம்,ஏமாற்றம் ,போன்றவற்றிற்கு தடுக்கும் தடுப்பு நடவடிக்கையை கோரிக்கையாக கேட்டுக்கொண்ட குவைத் அரசுக்கு விளக்கம் அளிக்காததால் 
முடக்கப்போவதாக மீண்டும் தகவலை அந்த இணையதள நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் அண்மையில் இதேப்போன்ற செயலினால் பாகிஸ்தானில் இந்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

சாலை சோதனையின்போது முறைகேடாக இயங்கிய 494 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது .

குவைத் :அனைத்துப்பகுதியில் மாத இறுதி கணக்கெடுப்பிற்காக காவல் துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 8672 வாகனங்கள் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அதற்கு இயங்கி கொண்டிருப்பதும்  ,அதில் 492வாகனம் எந்த ஆவணங்களின்றி முரணாக செயல்பட்டதால் அதை கையொகப்படுத்தி அதன் உரிமையை ரத்து செய்து இருப்பதும் தெரிவித்திருக்கிறது .

இப்படி விஞ்ஞானி அப்துல் கலாமா எழதியது ஆச்சரியமளிக்கிறது ?

முன்னாள் குடியரசுத்தல்லைவரும் ,விஞ்ஞானியுமான A.P.J அப்துல் கலாம்   புதிய நூலை எழுதி பிரசிவிக்க தயாராக இருக்கின்ற நிலையில் அந்த புத்தகத்தில் ஓர் ஏட்டில் சோனியா பிரதமராக ஆக விருப்பம் இருந்தால் ஆகட்டும் எழுதி இருப்பதோடு ,மேலும் அண்மையில் நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய முற்போக்கு கூட்டணியின் துணையோடு தனித்து பெரும்பான்மை பெற்றது அப்போது திருமதி சோனியா காந்தி பிரதமராவார் என காங்கிரஸ் வட்டாரம் மிகுந்த எதிர்ப்பார்ப்பினை பார்த்துக்கொண்டுள்ள நிலையில் அப்போது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் சோனியா காந்தி அந்தப்பதிவியை விரும்பி கேட்டிருந்தால் ,

அந்தப்பதவியை அளிக்க தயாராக இருந்ததாகவும் அதுவும் அரசியல் சாசன,சட்டத்திற்கு உகந்ததற்று அப்பதவியை அளிக்க முன் வந்ததாகவும் அதற்கான கடிதத்தை தான் மனமுவந்து தன்னுடைய அலுவலகத்தில் தயார் செய்ததாகவும் ,பல்வேறு தரப்பினரின் குற்றசாட்டிற்கும் ,அனுமதி வழங்கக் கூடாதென்று பல்வேறு தரப்பினர் வாதங்களாகவும் ,எதிர்ப்பாகவும் ,எதிர்குரலும் ,முழக்கங்களும் எழுந்த நிலையில் ,அப்போது அம்மையார் சோனியா தானாக முன்வந்து அந்தப்பதவியை  திரு .மன்மோகன் அவர்களுக்கு விட்டுகொடுத்ததாக பதிவு செய்துள்ளார் .

இருப்பினும் எல்லாம் தெரிந்த ஆற்றலுடைய விஞ்ஞானிக்கு இந்திய அரசியல் சட்டம்  தெரியாமல் போனது ஏனோ ?என்பதை கேள்விகள் எழுப்புகிறது .
இந்திய சட்டத்தின் படி வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த எவருக்கும் அரசுப் பதவியில் அமரவோ ,ஆட்சி அதிகாரத்தை கையாளவோ சட்டத்தில் இடமில்லை என்பது தெரியாதா?.

மேலும் அம்மையார் சோனியாவுக்கு மக்கள் எதிர்ப்பு அலை வந்தும் கூட அவருக்கு பதவி அளிக்க முன்வந்தேன் அவரேதான் ஏற்க வரவில்லை கூறி இருப்பது எந்த விதத்தில் நியாயம் ?நேர்மை ,பொதுவுடைமை எங்கே சென்றது !
இந்த தகவலின் பின்னணி என்ன ?எதற்காக இதுப்போன்று எழுதி சர்ச்சையில் சிக்க வேண்டும் என்ன நோக்கத்தோடு எழுதப்பட்டது ?

கேள்விக்குறியாக இருக்கின்ற தருணத்தில் ஒன்றும் புரியாத புதிராக உள்ளது .
அண்மையில் அவருக்கு  காங்கிரஸ் மற்றும் சில கூட்டணி கட்சிகளால் குடியரசுத்தலைவர் பதிவுக்கு புறக்கணிக்கப்பட்டது  ஏன்?  இவரை எதனால் ஒதுக்கப்பட வேண்டும் என்கின்ற உண்மை பின்னனி ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் .

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு சேவை வரி அளித்து நற்சேவை பரிசை வழங்க காத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு !

சமீபத்தில் ஆளும் காங்கிரசின் (தே .மு .கூ ) பதவியில்  அமர்ந்ததிலிருந்து பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் செய்து பொதுமக்களுக்கு இன்னல்கள் அளித்து வருகின்ற  நிலையில் தற்போது புதிய ஏற்பாடாக சேவை வரி என புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது .இந்த சேவை வரி மொத்தம் முப்பத்தி எட்டு நிறுவன ,வியபாரிகளுக்கென பட்டியலிட்டு வெளிப்படுத்தியுள்ளது ,ஆண்டுக்கு 23.50 சேவை வரியாக வசூலிக்கவும்  திட்டமிட்டுள்ளது .

இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்கள் ,தொழில்கூடங்கள் ,அலுவலங்கள் ,போக்குவரத்துத்து துறை ,திரைத்துறை ,பந்தயம் ,போன்ற மொத்தம் முப்பதுக்கும் கூடுதலாக துறைகளில்  சேவை வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது .இதன் கூடுதல் விபரம் நாளைத் தெரியவரும் .

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு சேவை வரியா?

ஏற்கனவே உள்நாடுகளிலும் சரியான முறையில் பிழைக்க வழியில்லாமலும் ,கல்வித்துறையில் பின்தங்கியுள்ள சமுதாயமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஏழை அடித்தட்டு மக்கள் தற்போது கணிசமாக வெளிநாடுகளில் வாழ்ந்துக்கொண்டு தங்கள் குடம்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டி வருகின்ற நிலையில் ,ஏழை எளியோர் மக்கள் என்பதும் கூட பாகுபாடின்றி வெளிநாட்டில் வாழக்கூடியவர்களுக்கு சேவைவரியாக  ஒவ்வொரு லட்சத்திற்கும் ,சேமித்து வருகின்ற லட்சத்திற்கும் சேவை வரிகளை வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்பாட்டினை கொண்டு வர இருக்கிறது .

இதன் முடிவினை ஓரிரு நாட்களில் முடிவு வெளியாகும் நிலையில் தற்போது வெளிநாட்டு வாழ் பரிவர்த்தனை பணம் (ஹவால்லா ) NRI'O transaction எவ்வளவு வசூல் செய்யலாம் என்பது உறுதியாகப்படவில்லை இருப்பினும் மற்ற சேவை வரி வசூலிக்க முடிவாகி தேதியினை அறிவிக்க தயாராக உள்ளது .

இந்த மத்தியில் ஆளும் அரசு நாம் ஓட்டு போட்டு உயர் பதிவியில் அமரவைத்தாள் ,பணத்தையெல்லாம் ஆட்டையை போட்டு நாட்டை கூடாக்கி ,பொருளாதார சரிவினை கூறி இதுப்போன்ற வரிகள் வசூலிக்க நினைப்பது அன்றைய வெள்ளையரின் அதிகாரத்தினால் உருவான சொந்த நிலத்திற்கு கப்பம் கட்டும் சூழல் தற்போது காங்கிரஸ் அதிகாரத்தை கையிலெடுத்து மக்களுக்கு துருஷ்ப்பிரியோகம் செய்வது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது .

இப்படியேப் போனால் நாட்டின் நிலை என்னவாகும் நினைத்தால் ஆட்சியதிகாரத்திளிருக்கும் நபர்களைத் தவிர மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாலர்களாக வாழ வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிகிறது .சுரண்டி அதில் உருண்டிப்பிரண்டு வறண்ட நாடாக்கி வேடிக்கப்பார்க்க தயாராக உள்ளதை இதுப்போன்ற செயல்களில் தென்படுகிறது .




கொக்கோ கோலா ,பெப்சி ஆகிய குளிர் பானங்களில் மது கலக்கப்பட்டுள்ளது புதிய தகவல் !


இன்று உலகில் மிகவும் பிரசத்தி பெற்ற குளிர் பானங்களில் கொக்கோ கோலாவும் ,பெப்சியும் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று அங்கம் வகித்து வருகிறது .மேலும் இதன் விற்ப்பனையில் சிகரம் வானுயர எட்டிருக்கும் சாதனை எந்த குளிர்பானத்தினாளையும் எட்டமுடியாத நிலையம் நெருங்கிட முடியாத நிலையும் அதிக வருமானமும்  இந்த நிறுவனங்கள் பெற்று பெரும் அந்தஸ்துடன் நிலைத்து நின்றுக்கொண்டிருக்கின்றன !

இந்த நிலையில் உலக நாடுகளில் வல்லரசு நாடான பிரான்ஸ் அண்மையில் இந்த குளிர் பானத்தை ஆய்வை மேற்கொண்டது.மேற்கொண்ட ஆய்வில் அதில் மது(அல்கஹோல் )கலவை சேகரித்திருப்பதை கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தி தகவலை வெளிப்படுத்தியது .ஒவ்வொரு லிட்டர் அளவு கோளுக்கும் 0௦.001 கிராம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

இந்திய நாட்டில் இதன் குளிர்பான குடிப்பழக்கம் சற்றுக்குறைந்தாலும் அரபு நாடுகளிலே தினசரி வாழ்க்கையில் அங்கம் வகித்து நிலைப்பெற்று வரும் இந்தக் குளிர்பானகள் மனிதனை நோயை உருவாக்கி உயிரை மைக்க வந்த பேராயுதமாக காட்சியளித்தாலும் அறிந்தும் பருகாதவர்களே இல்லை!பெரும்பாலும் இதனின் தாக்கம் அதிகரித்திருப்பது வேதனை அளிக்கிறது .

மேலும் சில நாட்கள் முன்பு இந்த குளிர் பானத்தினால் ஏற்ப்படும் தீமையினை சித்தரிக்கும் நோக்கமாக ஆராச்சியை மேற்கொண்டு மக்களை உணர வைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்  இந்த குளிர்பானத்தினால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்  என்பதற்காக எடுத்த ஆய்வில் குரப்பட்டது ,ஒரு பெப்சி, கோலா கூடிய கண்ணாடி அல்லது சில்வர் தம்ப்ளரில் சிறுத் துண்டு இரும்பை அதில் போட்டு இரண்டு நாட்கள் கழித்துப்பார்த்தால் நாம் பருகும் இந்த குளிர்பானம் அந்த இரும்பு துண்டை எந்த அளவுக்கு அரிப்பு செய்திருக்கிறது,அறிப்புத்தன்மையுடைய சக்தி எந்த அளவுக்கு உள்ளது என்பதை  நமக்கு தெளிவாகும் உணர்த்தினார்கள் .

சகோதர ,சகோதரிகளே ,வெளிநாட்டவரால் ,அன்னியரால் உருவாக்கப்படும் குளிர்பானம் உடலுக்கு ஊட்ட சத்தோ .புரோத்த சத்த,அளிக்காது மாறாக உடலை கெடுத்து மண்ணறைக்குதான் அது கொண்டு செல்லும் ,இயற்கையாக பூமியில் விளையும் தர்பூசணி ,இளநீர் ,நுங்கு ,போன்ற காய்கனிகலாலான இயற்கை மரத்தின் குளிர்பானம் நமக்கு நீண்ட ஆயுளைத் தந்து வாழ வைக்கும் .  

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்