குவைத் அம்கரா பகுதியில் சட்ட விரோதமாக நடந்ததினால் ஏழு நூறுக்கும் மேற்ப்பட்டோர் கைது .

குவைத்தில் அமங்கரா பகுதியெனில் நிறுவனங்கள் ,பழுதடைந்த உதிரிபாகங்கள் ,மற்றும் இதர பொருட்களின் கழிவு விலை மற்றும் மலிவுப்பொருட்களின் சங்கமிக்கும்மிடமாகும் . அங்கு பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவலின் பேரில் இன்று காவலர்கள் அந்தப் பகுதியில் பரிசோதனை செய்ய திட்டமிட்டு சுற்றிவளைத்து பரிசோதனையில் இறங்கினர் . அங்கு வசிக்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு வகையில் குவைத் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு எதிராக  நடந்ததால் அவர்களை கைதுள்ளனர் .

பெரும்பாலும் ஆசியர்கள் {இக்காமா}அதாவது இருக்கும் அவகாசம் புதிப்பிக்காமல் கால அவகாசம் முடிந்த நிலையில் அகப்பட்டுள்ளனர் .சிலர் முறைகேடாக இண்டர்னட் மூலமாக வெளிநாட்டுக்கு பேச தொடர்பினை ஏற்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் சிலர் சான்றிதழற்ற திருமணம் {கள்ள தொடர்பு }செய்துக்கொண்டவர்கள் அனைவரையும் காவலர்கள் கைது செய்து அமங்கரா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் .விரைவில் இதில் சிலர் நாடு கடத்தக்கூடும் என தெரிய வந்துள்ளது . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்