இரண்டாவது முறை அமெரிக்க அதிபரானார் ஒபாமா

   அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றார். 290 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று மீண்டும் அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 2வதுமுறையாகஅமெரிக்கஅதிபர்தேர்தலில்வெற்றிபெற்றுள்ளார்ஒபாமா.



ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னிக்கு 203 வாக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 538 வாக்குகளில் அமெரிக்க அதிபராக 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறவேண்டும்.



அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, அமெரிக்க நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு துவங்கி, இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்திய நேரப்படி, இன்று அதிகாலை 5 மணிக்கு கென்டக்கி, இண்டியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதிபர் பதவிக்கான முடிவை தீர்மானிக்கும் புளோரிடா, ஒஹயோ, வர்ஜீனியா மாகாணங்களில் காலை 5.30 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அந்தந்த மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

ஒபாமா நன்றி… மீண்டும் தன்னை அமெரிக்க அதிபராக தேர்வு செய்துள்ள மக்களுக்கு ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டர் இணையதளம் மூலம் அதிபர் ஒபாமா தனது நன்றிகளை பதிவு செய்துள்ளார்.


தற்போதைய செய்தி

புதிய தலைமுறை


ஷர்புதீன்

பதிவு செய்த நாள் - November 7, 2012 8:51 am













டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்