தரை தட்டிய கப்பலை


இழுக்க இழுவை கப்பல் வந்தது

துநீலம் புயலில் சிக்கி சென்னை கடற்கரையில் தரை தட்டி இருக்கும் பிரதிபா காவிரி கப்பலை இழுப்பதற்காக மாளவிகா எனும் இழுவை கப்பல் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து இந்த கப்பல் வந்திருக்கிறது.

மற்றொரு இழுவை கப்பல் மகாராஷட்ரத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கப்பலை இழுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கப்பலை இழுக்கும் பணி நாளை தொடங்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆழமாக புதைந்திருப்பதால் கப்பலை இழுப்பது சவாலான பணியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். ஒருவேலை கப்பல் கவிழுமானால் அதில் இருக்கும் எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், முன்னதாக அதில் இருக்கும் எண்ணையை வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தரை தட்டிய கப்பல் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் : சென்னையில் தரை தட்டி நிற்கும் எண்ணெக்கப்பல் பிரதீபா காவேரி குறித்து பல்வேறு அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, கப்பல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அந்தகப்பல் பலவீனமான இருப்பது கடந்த ஜீலை மாதமே தெரியவந்திருக்கிறது.

அந்த கப்பலின் எஞ்சின் அறைகள் சேதமடைந்துள்ளதாகவும், சிக்னல் கட்டுப்பாட்டு அறை வேலை செய்யவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. என்ஜினை சுற்றிலும் எரிபொருள் கசிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கப்பலின் மோசமான பராமரிப்பே இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதீபா காவேரி விபத்து குறித்து விசாரித்துவரும் சென்னை போலீசாருக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

நீலம் புயலின் போது பிரதீபா காவேரிக்கும், சென்னை துறைமுகத்திற்கும், கடலோர காவல் படைக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தரை தட்டி நிற்கும் பிரதீபா காவேரி கப்பலை மீட்கும் பணி நாளை தொடங்கவிருக்கிறது.





தற்போதைய செய்தி

pithiya thalamurai news
sharfudeen
பதிவு செய்த நாள் - November 6, 2012 10:45am



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்