உண்மை கசக்கும் கசப்பானாலும் சொல்லிவிடுவதே சிறந்தது - நபிமொழி !

இணையம் கைமாற்றம் தோழர் ஷர்புதீன் அவர்களால் தொடர்ந்து தோய்வின்றி நடக்கும் .


அன்பிற்கினிய கூனிமேடு வாழ்  தோழமை ,தோழிகளே ஏகவனின் சாந்தியும் சமாதானம் நம்மீது பொழிய பிரார்த்திப்பவனாய் .

ஓர் ஆண்டு காலம் 27.0000  ஆயிரம் பார்வையாளர்களைக்  இயங்கி வந்த கூனிமேடு இணையதளம்  ஆசிரியரின் சில சிக்கல் காரணமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டது .அதே சமயம் மற்றொரு இணையத்தை நடத்தி வருவதால் இரண்டிலும் கவனத்தை கொணர முடியவில்லை .விழுது என்கின்ற பத்திரிக்கையில் இணைந்து செயல்படுவதால் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இனியாவது நம்மூர் சகோதரர்கள் ஆர்வங்கொண்டு செயல்படுத்த முன்வருவார்கள் .மேலும் இந்த இணையதளத்திற்கு போதிய வசதிகளை செய்துத் தர துணையாக இருப்பதுமட்டுமின்றி இந்த இணையத்திற்கு சட்ட ஆலோசகராக இருப்பவர் தொடர்ந்து பணியாற்றுவார் சொல்லிக் கொள்கிறேன் .

மேலும் இந்த இணையத்தை நடத்துபவர் அற நெறிக்கு  உட்பட்டு துணிவுடன் நடத்துவார் நம்பிக்கையுடன் அவரிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது .தோயவாகும் பட்சத்தில் மாற்று நபரை ஏற்பாடு செய்யவும் இணைய உரிமையாளருக்கு முழு உரிமையும் உண்டு .மேலும் சகோ ஷர்புதீன் அவர்களுடன் இந்த இணையத்தை உருவாக்க முழு ஒத்துழைத்த சகோ .ஷேக்அஹமத் அவர்கள் உடன் பணிபுரிவார் .இதன் இணையத்தின் கணக்கு முடிவில் முழு அங்கீகாரம் அவர்களின் பெயருக்கு மாற்றித் தரவும் முயற்சிகளை மேற்கொள்ளப்படும் .

இணையம் தோய்வுக்கான உண்மைகள் !

ஆரம்ப முதல் மிகுந்த எழுச்சியோடு பிரசிவிக்கப்பட்ட செய்திகள் 

மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது நடு நிலையான செய்திகள் 

மக்களின் அங்கீகாரம் உடனடியாக பெற்றெடுத்ததால் மிகுந்த ஆவலோடு 

செயல்பட வேண்டிய நிலையும் ஊரை வளர்சியின்பால் கொண்டு 

சேர்க்க வேண்டும் எண்ணத்தோடு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இணையம் 

விரைவாக வெற்றிக் கண்டது .சில தருணத்தில் சிலரின் தவறை 

நேரடியாகவும் பலரின் தவறை இலை மறைவாகவும் சுட்டிக் காண்பிக்க 

தவறியதில்லை ஆனால் அமைப்பு வாதிகளோ நல்லது 

மட்டுமேபிரசிவியுங்கள் தவறை களைக்க முயற்சிக்காதீர்கள் .நல்லத்தை 

மட்டும் பகிங்கிரப்படுத்துங்கள் .தவறை சுட்டிக் காட்டவோ 

பகிங்கிரப்படுத்தவோ கூடாது இதனால் ஊருக்கு அவப்பெயர் ஏற்படுகிறது 

கூறும் இவர்கள் அந்த தவறை களைக்க முன்வரவில்லை !சுட்டிக் 

காண்பிப்பதற்கு தங்களுக்கு உரிமை இல்லை சொல்கிறார்கள் .


அப்படியானால் அவர்களின் எண்ணத்தில் ஊரை வளர்ச்சியை கொண்டு 

செல்ல வேண்டும் எண்ணமில்லை குற்றம் களைக்க எவரும் முன் 

வருவதில்லை அதை சுட்டிக் காண்பித்தாலும் தவறென்று ஏளனம் செய்யும் 

அமைப்புகள் ஊரின் வளர்ச்சிக்கு பங்கு வகிக்க வில்லை என்பதுதான்உண்மை 

அப்படி பங்கு வகித்து வருகிறோம் கூறுவோருக்கு என்னத்தான் செய்தீர்கள் 

கேட்டால் பித்ரா வசூல் சகாத் வசூல் மற்றும் திருமண சந்தா உதவிகள் 

அவ்வப்போது வழங்கி உள்ளதை சான்று பகிரும் இவர்கள் விழிகளில் 

உதவிதான் வளர்ச்சியாக தெரிகிறது .ஆனால் ஒரு வருட காலத்தில் இந்த 

இணையம் பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கு குறிப்பாக தி.மு.க,அ.தி.மு.க  

,ம.ம.க,கட்சிகளுக்கு ஊருக்கான வளர்ச்சிக்கு கடிதங்கள் வாயிலாக கேட்டுக் 

கொண்டுள்ளது .அப்படி இருக்க நடு நிலையுடன் ஊர் வளர்ச்சிக்கு 

பெருதுவக்க பாடுபட்டுக் கொண்டிருந்த இணையத்தை அவ்வப்போது 

கைப்பேசி வாயிலாக பல இன்னல்கள் வந்த நிலையில் உள்ளதால் .


வேலை பளு காரணமாக ஒத்துழைத்து பதில் வழங்கவும் எதிர்க்கவும் முடியாத சூழல் 

ஏற்பட்டுள்ளது கண்டிப்பாக விரைவில் பத்திரிகை வெளி வரும் அதில் 

மக்களின் குறைகளை தீர்க்க முன் வருவோம் .அதற்கான யுக்திகளை 

கையாண்டு வருகிறோம்.ஆகவே இன்று நடு நிலையாக அமைப்புகள் 

செயல்படுவது எது என்கின்ற கேள்விக்கு பதில் தங்களிடத்தில் உள்ளது 

.இல்லை நீங்கள் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் .எதிர்ப்புகள் 

வந்தாலும் நாங்கள் துனையாகிருக்கிறோம் கூறும் நபர்களை இந்த இணைய 

தளத்திற்கு உடன் பணிப்புரிய அழைக்கிறோம் .உண்மையை சொல்ல 

ஒருப்போது தயங்கக் கூடாது .தீயதை மறைக்க உடந்தையாக நாம் செல்லக் 

கூடாது .உண்மைக்கு புறம்பாகவும் எழுதக்கூடாது .பொய்மைக்கு ஆதரவாக 

செயல்படக் கூடாது இறைவனை எவர் அஞ்சுகிறார்களோ அவரே நல்ல 

மனிதர் .இறையான்மையை புதைக்க நினைக்கும் சர்வாதிகார குடும்ப 

அரசியலை ஆதரிக்க முன் வரவும் கூடாது .


இவர்கள் தான் சமூக சேவகர் சொல்லும் பட்சத்தில் ஆர்வத்தோடு 

செயல்படுகிறார்கள் கூறினால் .மற்றவர்கள் யார் ? .அவர்கள் கூனிமேடிற்கு 

வளர்ச்சி நோக்கத்தில் செயல் பட வில்லையா ?அப்படிஎன்றால் இவர்கள் 

வசூல் செய்து அனுப்பும் பணம் எவருடையது ?தெளிவாக புரிந்துக் கொள்ளும் 

பட்சத்தில் எல்லாம் தெளிவாகும் .ஆகவே இதுவெல்லாம் சூழ்நிலை மாறும் 

விழிப்புணர்வு மக்களிடத்தில் வர வேண்டும் ஊர் வளர்சிக் காண வேண்டும் 

நனோக்கில் துவக்கப்பட்ட இணையத்தை சகோ .ஷர்புதீன் சிறப்பாநடத்துவார் .

என்னைவிட விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவார் எண்ணத்தோடு 

""ஜிசக்கல்லாஹ் கைரன்"" கூறி ஒத்துழைப்பு நல்கிய அத்துணை நல் 

உள்ளங்களுக்கும் மனமார நன்றியை சமர்பித்து விடைப்பெருபவனாய்.

அல்ஹம்துலில்லாஹ் !எண்ணங்களின் படி நற்கூலி வழங்கி இருப்பான் 

நம்புகிறேன் .நற் காரியத்தை செய்ய தடுத்த பகிரத்தை தடுத்தவருக்கே 

வழங்குவான்.நிறையோடு உள்ளம் குறையோடு விடைப்பெறுகிறேன்.

   

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்