நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் கூனிமேடு குரல் வேண்டுகோள் .

தற்போதைய சூழ்நிலையில் கூனிமேடு கூறாகி கடுக்கிற  தருணத்தில்   ஊருக்கு நலம் விரும்பி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .இன்றைய கணக்கெடுப்பில் குவைத்தில் மட்டும் தமிழ்நாட்டினுடைய இரண்டாம் ஜமாத்தாக திகழும் கூனிமேடு ஜமாஅத் பிளவுப்பட்டு கிளைகளாக மாறிவருவதை வேதனையளிக்கிறது .ஒவ்வொருவர் மீதும் மற்றொருவர் மாறி மாறி குற்றங்களை பொழிந்த வண்ணமாய் திகழ்வதால் ஊருடைய வளர்ச்சியிலும் ,ஒற்றுமையிலும் பாதிப்பு ஏற்படுகிறது .

கூறாய்ப்போன கிளைகள் தாய் மரம் ஒன்றுள்ளதாக நினைத்தால் வேதனைப்படத்தேவை   இல்லை .நாராக கிழிந்து வேரின்றிப்போவதால் நாதியின்றி தலை எது ?வால்  எது தெரியாமல் தவிக்க வேண்டிய நிலை தற்போது நிலவுக்கொண்டிருக்கிறது .இந்த நிலை மாற வேண்டும் கூனிமேடு ,மற்றும் குவைத் வாழ் மக்கள் ஊருடைய வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .இன்று குவைத்தில் செயல்படும் அமைப்புகள் .
  • K.M.J.K{KOONIMEDU MUSLIM JAMAATH KUWAITH }
  • K.E.W.A {KOONIMEDU EXPETRIATE WELFARE ASSOCIATION}
  • K.I.S.K {KOONIMEDU ISLAAMIYA SOCIALSERVICE (AT) KUWAIT
  • AL-NAAS {AL-NAAS HELPLINE OF INDIA}
  • T.N.T.J{TAMIL NADU THWHEETH JAMAATH''KOONIMEDU }
  • I.N.T.J{INDIAN NATION THAWHEET JAMAATH ''KOONIMEDU}
  • K.M.C.M.G{KOONIMEDU MOTOR CITY MICHINE GUN}
  • AL-FAIZ FRIENDS OF KOONIMEDU/KUWAIT
இத்துனை அமைப்புகள் இருந்தாலும் ஊர் கண்ட வளர்சிகள் என்ன ?இத்துனை நாட்களாக பாமரராகவே இருக்கிறோம் ,கல்வியிலும் ,முன்னேற்றத்திலும் பின்தங்கியவாரே இருக்கிறோம் .சாதித்தவர்களாக எவரும் இல்லை !சாதிக்கவும் முயற்சிகளும் மேற்கொள்ள முயன்றதில்லை .பள்ளிவாசலுக்கு வலது ஒருப்பகுதியாகவும் இடது ஒருப்பகுதியாகவும் நாமே நாம் பிரித்துக்கொண்டு செயல்படுவதுதான் வேதனை அளிக்கிறது .காலம் காலமாக தலைவர் மாறுகிறார் ,பள்ளி ஆசிரியர்கள் மாறுகிறார்கள் ,நிலம் வீடாகிறது ,தோப்பு வறண்ட பூமியாகிறது இதுப்போன்ற எத்தனையோ அடக்கிட்டு போனாலும் அடங்காத தொடரும் மாற்றங்கள் இருந்தும் மக்கள் மற்றும் அவர்கள் நிலையிலிருந்து மாறவில்லை .

ஆகவே இதை கருத்தில் கொண்டு ஒரு குடையில் சாய நினைத்தால் கண்டிப்பாக நம்முடைய சமுதாயத்தை வளர்ச்சியடையவும் ,முன்னேற்றத்தை உயர்த்திடவும் முடியும் அதற்காக நாம் முதலில் ஒன்று படவேண்டும் .ஊர் நலனில் அக்கறை சேர்க்க வேண்டும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்