கவிஞர் .முபாரக்கின் கவிதை முதல் இடம் பிடித்தது .

 தமிழ்நாடு தமிழ் சங்கம் நடத்திய கவிதைப்போட்டியில் கவிஞர் .முபாரக்கின் கவிதை முதல் இடம் பிடித்தது .

மாதந்தோறும் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் கவிதைப்போட்டி இம்முறை தாய்மை என்கிற தலைப்போடு கவிதை எழுத  முன் வைக்கப்பட்டது .இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகள் வரவேற்கப்பட்டன சேகரிக்கப்பட்ட கவிதையை கருத்து ,பொருள் ,நுனக்கமாய் ஆராய்ந்து வெற்றியாலரென முடிவு செய்யப்பட்டது .

இதில் கூனிமேடுவை சார்ந்தவரான கவிஞர் முபாரக் முதல் பரிசை வென்றுள்ளார் .


"தாய்மை"!(பரிசைவென்றக்கவிதை )

அன்பும் ஆதரவும் பெருக்கெடுத்து
அரவணைப்பாய் உள்ளங்களிரு உறவாடுகையில்
புடைத்தெடுத்த பரிமாணம் உருகுகையில்
இன்ப ஆனந்தத்தில் விழும் சிருத்துளிநீர் !

ஓடையில் விழுந்திடுகையில் கற்பநிலத்திற்காகும்
பாசனை ! - அந்நீரில் உருவெடுக்கும் விதையாய்
முளைத்து கருவாகி கனியாக முளைக்கையிலே
தந்திடும் "தாய்மை"யின் முகவரி !

வாசமாய் மணக்கும் உறவுகளில்
வசந்தமாகும் பெருமை அருமையே !-அகம்
நிறைத்திடுமின்புறுவள் பெருகிடும் வலிமை
எளிமையோடு பெற்றெடுக்க தாங்கிடுவாள் வலியை!

இனிமையோடு பெருத்தாலும் பைக்கோனிக்கு
வருத்தமில்லை ஊசியால் தைத்தாலும்
இரணக்காது கனத்தே சுமந்துடுவாள்
தாய்மையென்ற நினைப்போடு சுமை !

நாட்கள் முடிகையில் சிசுவாய்
பெற்றதால் பாசத்தின் வெளிபாடு
வெளியேறிவிடும் சிசுவாய் நாக்கூறும்
அவள்கொண்ட உறவுக்காகுமது ஆதாரமே "தாய்மை


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்