நம்மிடத்தில் ஒற்றுமையின்மையை எடுத்துக்காட்டிய கார் விபத்து !


நேற்று காலை சுமார் ஏழு மணி அளவில் சுபுஹு தொழுகைக்கு பின்னால் ஏற்பட்ட கார் விபத்தால் பள்ளிவாசல் தடுப்புச் சுவர் பலத்த சேதாரமடைந்து நொறுங்கியதால் அவ்வப்போது கூடிய மக்கள் அந்த வாகனத்தை கையகப்படுத்தி இருபத்தைந்து ரூபாயை கோரியுள்ளனர் .போதையில் தடுமாறி கவனக் குறைவால் விபத்து நேர்ந்தாலும் பாதிக்கப்பட்ட சுவரை அமைக்க கோரிய பணம் போதிய அளவில் கையில் இல்லாததால் ஐந்தாயிரம் ரூபாயை தர ஒப்புக்கொண்ட வாக ஓட்டி...!

இதையறிந்து வந்த முன்னாள் முத்தவல்லியின் முப்பதாயிரம் ரூபாய் கோரிக்கையின் காரணமாக நம்மிடத்தில் இல்லை மறுத்த வாகன உரிமையாளர்களை காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன் கூறி காவல் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு பேசியதால் மரக்காணம் காவல் நிலையத்திலிருந்து கூனிமேடு மக்களால் கையகப்படுத்தப்பட்ட வாகனத்தை காவலர்கள் கையகப்படுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் .

கைக்கு எட்டியதுக்கூட சேதாரமாய் போச்சே ...என்கின்ற உதடுகள் விரிந்து பிசையும் வார்த்திகள் வந்தாலும் ,கிடைத்தவரைக்கும் வாங்கிக்கொண்டு இருக்கலாம் தற்போது காவல் நிலையத்திற்கு சென்றதால் இலாபம் இல்லாமல் போச்சே ..என்கின்ற முன்முனுப்புகளும் உணர முடிகிறது .

மேலும் சிலர் யார் இடத்தை சேதப்படுத்தி வாகனத்தை கொண்டு செல்ல அனுமதிக்கலாம் .ஊர் மக்களை விட காவலர்களுக்கு எந்த உரிமை !மக்களால் சாதிக்க முடியாது நினைப்பது வருந்தத்தக்க செயலாகும் நாம் ஒன்றுப்பட்டு முற்றுகைஇட்டிருந்தால் கண்டிப்பாக நல்ல தீர்வை எட்டி இருக்கலாம் .நம்மிடத்திலே ஒற்றுமையின்மை காரணத்தினால் எல்லாமே கை நழுவி செல்கிறது .

இதை எப்போது நம்முடைய ஊர் மக்கள் உணர்வார்களோ?

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்