கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் குவைத் தோழமைகளின் செயற்குழுக்கூட்டம் .




K.M.J.K தொழமைகளின் செயற்குழுக்கூட்டம் செவ்வாய் அதிகாலை 12 .30  மணிக்கு ஆரம்பமாகியது .கூட்டத்தை வரவேற்று பேசிய ஜனாப் .அப்துல்லாஹ் அவர்கள் தலைமைப்பொருப்பேற்று கூட்டத்தை வழிநடத்திட தோழர் ஹலீம் லியாகத் (துணைத் தலைவர்)அவர்களை முன்மொழிக்க இனிதே ஆரம்பமாகிய செயற்குழுக்கூட்டம் பித்ரா வசூலைப்பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது .

மேலும் ,பித்ரா வசூல் மொத்தம் 500 தினாரை தாண்டக்கூடும் என்பதாகும் இதுவரை அந்த தொகையை நெருங்கிவிட்டதாகவும்  விளக்கமளித்ததுமின்றி அப்பணத்தை ஆய்வு செய்யப்பட்டு  கணிக்கப்பட்டுள்ள  175 வீடுகளுக்கும் தலா 700 ரூபாய்க்கும் மேலாக தர்மம் செய்ய கருத்தை முன்னிறுத்தியதால் அனைவரும் ஏகமனதோடு ஏற்றுக்கொண்டனர் .

மேலும் சிலர் அருகில் உள்ள நம் அண்டை கிராமத்திற்கு உதவிட கோரிக்கை வைத்தனர் அதை பரிசீலனை செய்த நிர்வாகம் அப்போதே குறிப்பிட்ட வீடிருந்தால் அவர்களுக்கு நிதியை வழங்கிடலாம் .அதை எடுத்து செய்வதற்கு ஆட்களின் பற்றா குறையால் தகுந்த ஏழைகளின் கணக்கீடு தேவைப்படுவதால் மஞ்சக்குப்பத்தை தவிர வேறு கிராமத்தை தர ஒப்புதலை மறுக்கப்பட்டு வர இருக்கும் ஆண்டுகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது .

இக்கூட்டத்தில் மொத்தம் 80 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரையை தலைவர் ஜனாப்.பாசுளுல்லாஹ் வழங்க இந்த ஏழை வரி (தர்மம்)வசூல் செய்த நிர்வாகிகளுக்கும் ,தந்த தர இருக்கின்ற ஆதரவுத்தந்த அத்துணை கூனிமேடு மற்றும் அல்லாத ஊர்களுக்கும் "ஜிசக்கல்லாஹ் கைரன்" கூறி பாராட்டி நிறைவு செய்தார் அதற்கு பிறகு உணவு சஹார் தயார் செய்து உபசரிக்கப்பட்டது .அதன் பிறகு கூடம் நிறைவேறி கலைந்தது . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்