அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு சேவை வரி அளித்து நற்சேவை பரிசை வழங்க காத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு !

சமீபத்தில் ஆளும் காங்கிரசின் (தே .மு .கூ ) பதவியில்  அமர்ந்ததிலிருந்து பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் செய்து பொதுமக்களுக்கு இன்னல்கள் அளித்து வருகின்ற  நிலையில் தற்போது புதிய ஏற்பாடாக சேவை வரி என புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது .இந்த சேவை வரி மொத்தம் முப்பத்தி எட்டு நிறுவன ,வியபாரிகளுக்கென பட்டியலிட்டு வெளிப்படுத்தியுள்ளது ,ஆண்டுக்கு 23.50 சேவை வரியாக வசூலிக்கவும்  திட்டமிட்டுள்ளது .

இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்கள் ,தொழில்கூடங்கள் ,அலுவலங்கள் ,போக்குவரத்துத்து துறை ,திரைத்துறை ,பந்தயம் ,போன்ற மொத்தம் முப்பதுக்கும் கூடுதலாக துறைகளில்  சேவை வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது .இதன் கூடுதல் விபரம் நாளைத் தெரியவரும் .

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு சேவை வரியா?

ஏற்கனவே உள்நாடுகளிலும் சரியான முறையில் பிழைக்க வழியில்லாமலும் ,கல்வித்துறையில் பின்தங்கியுள்ள சமுதாயமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஏழை அடித்தட்டு மக்கள் தற்போது கணிசமாக வெளிநாடுகளில் வாழ்ந்துக்கொண்டு தங்கள் குடம்பத்திற்கு தேவையான வருமானத்தை ஈட்டி வருகின்ற நிலையில் ,ஏழை எளியோர் மக்கள் என்பதும் கூட பாகுபாடின்றி வெளிநாட்டில் வாழக்கூடியவர்களுக்கு சேவைவரியாக  ஒவ்வொரு லட்சத்திற்கும் ,சேமித்து வருகின்ற லட்சத்திற்கும் சேவை வரிகளை வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்பாட்டினை கொண்டு வர இருக்கிறது .

இதன் முடிவினை ஓரிரு நாட்களில் முடிவு வெளியாகும் நிலையில் தற்போது வெளிநாட்டு வாழ் பரிவர்த்தனை பணம் (ஹவால்லா ) NRI'O transaction எவ்வளவு வசூல் செய்யலாம் என்பது உறுதியாகப்படவில்லை இருப்பினும் மற்ற சேவை வரி வசூலிக்க முடிவாகி தேதியினை அறிவிக்க தயாராக உள்ளது .

இந்த மத்தியில் ஆளும் அரசு நாம் ஓட்டு போட்டு உயர் பதிவியில் அமரவைத்தாள் ,பணத்தையெல்லாம் ஆட்டையை போட்டு நாட்டை கூடாக்கி ,பொருளாதார சரிவினை கூறி இதுப்போன்ற வரிகள் வசூலிக்க நினைப்பது அன்றைய வெள்ளையரின் அதிகாரத்தினால் உருவான சொந்த நிலத்திற்கு கப்பம் கட்டும் சூழல் தற்போது காங்கிரஸ் அதிகாரத்தை கையிலெடுத்து மக்களுக்கு துருஷ்ப்பிரியோகம் செய்வது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது .

இப்படியேப் போனால் நாட்டின் நிலை என்னவாகும் நினைத்தால் ஆட்சியதிகாரத்திளிருக்கும் நபர்களைத் தவிர மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாலர்களாக வாழ வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிகிறது .சுரண்டி அதில் உருண்டிப்பிரண்டு வறண்ட நாடாக்கி வேடிக்கப்பார்க்க தயாராக உள்ளதை இதுப்போன்ற செயல்களில் தென்படுகிறது .




டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்