இப்படி விஞ்ஞானி அப்துல் கலாமா எழதியது ஆச்சரியமளிக்கிறது ?

முன்னாள் குடியரசுத்தல்லைவரும் ,விஞ்ஞானியுமான A.P.J அப்துல் கலாம்   புதிய நூலை எழுதி பிரசிவிக்க தயாராக இருக்கின்ற நிலையில் அந்த புத்தகத்தில் ஓர் ஏட்டில் சோனியா பிரதமராக ஆக விருப்பம் இருந்தால் ஆகட்டும் எழுதி இருப்பதோடு ,மேலும் அண்மையில் நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய முற்போக்கு கூட்டணியின் துணையோடு தனித்து பெரும்பான்மை பெற்றது அப்போது திருமதி சோனியா காந்தி பிரதமராவார் என காங்கிரஸ் வட்டாரம் மிகுந்த எதிர்ப்பார்ப்பினை பார்த்துக்கொண்டுள்ள நிலையில் அப்போது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் சோனியா காந்தி அந்தப்பதிவியை விரும்பி கேட்டிருந்தால் ,

அந்தப்பதவியை அளிக்க தயாராக இருந்ததாகவும் அதுவும் அரசியல் சாசன,சட்டத்திற்கு உகந்ததற்று அப்பதவியை அளிக்க முன் வந்ததாகவும் அதற்கான கடிதத்தை தான் மனமுவந்து தன்னுடைய அலுவலகத்தில் தயார் செய்ததாகவும் ,பல்வேறு தரப்பினரின் குற்றசாட்டிற்கும் ,அனுமதி வழங்கக் கூடாதென்று பல்வேறு தரப்பினர் வாதங்களாகவும் ,எதிர்ப்பாகவும் ,எதிர்குரலும் ,முழக்கங்களும் எழுந்த நிலையில் ,அப்போது அம்மையார் சோனியா தானாக முன்வந்து அந்தப்பதவியை  திரு .மன்மோகன் அவர்களுக்கு விட்டுகொடுத்ததாக பதிவு செய்துள்ளார் .

இருப்பினும் எல்லாம் தெரிந்த ஆற்றலுடைய விஞ்ஞானிக்கு இந்திய அரசியல் சட்டம்  தெரியாமல் போனது ஏனோ ?என்பதை கேள்விகள் எழுப்புகிறது .
இந்திய சட்டத்தின் படி வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த எவருக்கும் அரசுப் பதவியில் அமரவோ ,ஆட்சி அதிகாரத்தை கையாளவோ சட்டத்தில் இடமில்லை என்பது தெரியாதா?.

மேலும் அம்மையார் சோனியாவுக்கு மக்கள் எதிர்ப்பு அலை வந்தும் கூட அவருக்கு பதவி அளிக்க முன்வந்தேன் அவரேதான் ஏற்க வரவில்லை கூறி இருப்பது எந்த விதத்தில் நியாயம் ?நேர்மை ,பொதுவுடைமை எங்கே சென்றது !
இந்த தகவலின் பின்னணி என்ன ?எதற்காக இதுப்போன்று எழுதி சர்ச்சையில் சிக்க வேண்டும் என்ன நோக்கத்தோடு எழுதப்பட்டது ?

கேள்விக்குறியாக இருக்கின்ற தருணத்தில் ஒன்றும் புரியாத புதிராக உள்ளது .
அண்மையில் அவருக்கு  காங்கிரஸ் மற்றும் சில கூட்டணி கட்சிகளால் குடியரசுத்தலைவர் பதிவுக்கு புறக்கணிக்கப்பட்டது  ஏன்?  இவரை எதனால் ஒதுக்கப்பட வேண்டும் என்கின்ற உண்மை பின்னனி ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்