கூனிமேடு A.L.M. உயர்நிலைப்பள்ளி சாதனை !



படம் :கூனிமேடு இன் "நன்றி !

விழுப்புரம் மாவட்டத்திலையே 2011 ஆம் ஆண்டு சிறந்த பள்ளி கணக்கெடுப்பில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் இப்பள்ளி உண்மையிலையே கல்விதரம் தற்போது மேலும் உயர்ந்து இருக்கிறது வியக்கத்தக்கதுள்ளது .கூனிமேட்டில் வாழ்ந்துக்கொண்டு படிக்க வைக்க வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் நாம் எண்ணத்தில் இதுவெல்லாம் பள்ளியாக கருதுவதில்லை காரணம் நம்மிடத்தில் தேவைக்கு அளவு பணம் அதிகமாக இருப்பதை காண்பிக்கவே வெளி ஊர்பள்ளியை தேர்வு செய்து படிக்க வைத்து வருகின்றநிலையில் .

நம்முடைய ஊரில் இருந்தே நல்ல தரத்துடன் கல்வி பயிற்சியை தந்துக்கொண்டிருக்கும் A.L.M உயர்நிலைப்பள்ளி தற்போது 2012 ஆம் ஆண்டிலும் கல்வி தரத்தை மக்கள் மத்தியிலும் மாநிலம் மத்தியிலும் நிரூபித்துள்ளது.இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் தேர்ச்சி பெற்று இருக்கும் எண்ணிக்கையோ தற்போது அதிகரித்துள்ளதை செய்தி நாளிதழ் ,அதாவது பனிரெண்டாம் வகுப்பு மற்றும் ,பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்பள்ளியினால்  தேர்வு எழுதி வெற்றிப்பெற்று சாதனை புரிந்திருப்பதை பதிவாகியுள்ளது .

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் இப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 94 % சதவிகிதமாகும் .இருப்பினும் இப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பில் 100% க்கு 100% விகிதம் தேர்ச்சிபெற்று  இருப்பது பாராட்டக்குரியது  .

இந்தப்பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தை சார்ந்த இரு மாணவிகள் அந்த பள்ளியிளையே வகுப்பில்  முதன்மை பள்ளி மாணவிகளாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது  ,பனிரெண்டாம் வகுப்பில் சைமா பேகம் மற்றும் அவளுடைய சகோதரி பத்தாம் வகுப்பில் ஷாகிரா பேகம் ,இவர்களுடைய தந்தைப்பெயர் சையத் மாலிக் ஆகும் .இவர்களின் குடும்பம் கூனிமேடு பஞ்சாயத்போர்டு ஈ .சி ஆர் .பிரதான சாலையில் அமைந்துள்ளது .

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதன்மை பெற்ற மாணவி ஷாகிரா பேகம் அவள் எடுத்த மொத்த மதிப்பெண் 396 ஆகும் ,அவளை அடுத்ததாக ரஞ்சிதா என்ற மாணவி தந்தைப் பெயர் ராஜேந்திரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளாள் அவள் எடுத்த மதிப்பெண் 323   ஆகும் .


பனிரெண்டாம் வகுப்பில் முதன்மை இடத்தை பிடித்த அப்பள்ளி மாணவி சைமா பேகம் எடுத்த மொஹ்த  மதிப்பெண் 780 ஆகும் அவள் அதிக பட்சமாக தமிழில் 171 மதிப்பெண்களை பெற்றுள்ளாள் அதேபோல அவளை பின்தொடர்ந்து கூனிமேடு பிர்தவுஸ் நகரில் வசிக்கும் திரு/ஜனாப் -சையத் அகமதின் புதல்வி ஷாகிலா பானு இரண்டாம் இடத்தில் பிடித்துல்லால் .அவள் எடுத்துள்ள மொத்த மதிப்பெண் 768 ஆகும் .அதிக பட்சமாக ஆங்கிலத்தில் 161 மதிப்பெண்களை பெற்றுள்ளாள் .


இப்பள்ளியில் படித்து இப்பள்ளிக்கு மட்டுமல்லாமல் கூனிமேடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த அத்தனை மாணவ மாணவிகளுக்கு கூனிமேடு குரல் சார்பாக இந்த பதிவின் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறது .

இப்பள்ளியில் படித்து இப்பள்ளிக்கு மட்டுமல்லாமல் கூனிமேடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த அத்தனை மாணவ மாணவிகளுக்கு கூனிமேடு குரல் சார்பாக இந்த பதிவின் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறது .


கூனிமேடு கோமட்டிக்குலம் பகுதியில் வசிக்கும் சகோதரர் ஜனாப் .அப்துல் சலீம் சகோதரி ஜனாபா.ஹசீனா பேகம் (சிலார் குடும்பம் )அவர்களுடைய மகனான சகோதரர் தாரிப் அலி ,காமேஸ்வரன்  என்கின்ற கூனிமேடுவை சார்ந்த மற்றொரு மாணவன் புதுவை லாஸ்பேட்டையில் விவேகானந்தா பள்ளியில் படித்துவந்தார்  கூனிமேட்டிலையே பனிரெண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண்கள் பெற்று இருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் .


மேலும் இப்பள்ளி மட்டுமில்லாமல் பிற பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்சிப்பெற்று  வெற்றியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுதலை இந்த இணைய தளம் தெரிவித்துக்கொள்கிறது .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்