எஸ் .எஸ் எல் .சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின !


தேர்வு எழுதிவிட்டு தேரிடோவோமா ? தேரமாட்டோமா ? நினைத்து அக சோகத்தில் மூழ்கியிருக்கும் மாணவ மாணவி பட்டாரங்கள் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகி ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது .
சில ஆண்டுகளில் ௧௦ ஆம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து முதலாவதாக வரும் மாணவிகள் மத்தியில் இம்முறை ஆண்கள் அவ்விடத்தை பிடித்துள்ளது ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது . சமீப கால பெண்கள் மத்தியில் ஆண்கள் படிக்காததற்கு காரணம் கேட்டால் அவர்கள் கூறிய சொற்கள் பெண்கள் பாட புத்தகத்தை பார்க்கிறார்கள் ஆண்களோ பெண்களை பார்க்கிறார்கள் .இப்படி சொல்லிக்கொண்டு ஆண்கள் சமுதாயத்தை விழிக்க வித்தை பெண்கள் சமுதாயத்தை வாழ்த்த வேண்டும் பாராட்டவும் வேண்டும் .ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பேன் உள்ளதை தமிழ் கூறும் பழமொழி நாம் அறிவோம் அந்த
பழமொழி திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கையில் செய்திட்ட சாதனைகளாக அதை கருதுவோம் இல்லையெனில் திருமணம் முடிந்து வெற்றிக்கொண்ட தனி நபரின் பாராட்டாக அதை காண்கிறோம் அப்படி இருக்கையில் !இன்று (ஆண்கள் )மாணவ சமுதாயம் புத்தகத்தை சுமக்காமல் தன்னைப்பற்றி அறியாமல் வாழ்க்கையை விரையம் செய்துக்கொண்டு இருந்த நிலையில் ,பெற்றோர் பேச்சைக்கூட சில மாணவர்கள் கேட்காமல் சீர்கெட்டு அழிந்து வருகின்ற நிலையில் தற்போது மாறி முன்னேற்றத்தை கண்டிருப்பது பெரும் சாதனையே .இவர்கள் எல்லாம் எங்கே தேறுவார்கள் ஏளனம் செய்யும் மாணவிகள் மத்தியில் புத்தகத்தை மனனம் செய்து முதலாம் இடத்தை பிடித்து சாதனை செய்திருப்பது வியக்க வைத்துள்ளது .

தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த பி .ஆர் பள்ளி மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதனையடுத்து, 6  மாணவர்கள் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 2வது இடமும், 11 மாணவர்கள் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 3வது இடமும் பெற்றுள்ளனர்.

கடந்த கால சாதனைகளை விட இவ்வாண்டு மாணவர்கள் சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளனர் .இருப்பினும் மாணவிகளை விட சற்று சதவிகிதத்தில் குறைந்தாலும் இவ்வளவு வரை முன்னேற்றம் கண்டது மிகையே !

கீழே இடம் பெற்றிருக்கும் தகவலை தந்த  தினகரன் நாளிதழுக்கு" நன்றி "!

மாநிலத்தில் 2வது இடம் பிடித்த மாணவ-மாணவிகளின் விவரம் பின்வருமாறு



*நாகர்கோவில் பள்ளியின் ஜென்கின்காட்பிரே, 

*நெல்லை மாணவி நந்னி, 
*ஈரோடு வித்யா பள்ளி மாணவி ஸ்வாதி
*கரூர் மெட்ரிக் பள்ளி மாணவர் கவின், 
*செங்கல்பட்டு மாணவி அகிலா, 
*நெல்லை மாணவி மகாலட்சுமி. 

ஆகியோர் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 2வது இடம் பிடித்துள்ளனர்.

மாநிலத்தில் 3வது இடம் பிடித்த மாணவ-மாணவிகளின் விவரம் பின்வருமாறு

ஸ்மிதா (நெல்லை) ,
சூர்யா (சிவகாசி), 
அபி‌ஷேக் (சிவகாசி), 
தரணி (பொள்ளாச்சி), 
வி்ண்மிதா (ஈரோடு), 
ஷர்மிளா (ஈரோடு), 
ஜஸ்டின் சேவியர் (பொன்னேரி),
ராஜேஸ்வரி (காஞ்சிபுரம்)
அம்ரிதா (திருப்பத்தூர்), 
ஸ்ரீதரா (நாமக்கல்), 
பூஜாஸ்ரீ (புரசைவாக்கம்) 

ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர்.

தேர்ச்சி சதவீதம் :

*இந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில், 83.4%(மொத்தம்) மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

*இதில் மாணவர்கள் 86.2% தேர்ச்சியும்,மாணவிகள் 89% தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.

*கடந்த ஆண்டு தேர்வு முடிவு போல, இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

100க்கு 100

கணிதம் பாடத்தில் 1141 மாணவ மாணவியர்100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

அறிவியல் பாடத்தில் 9237 மாணவ மாணவியர்100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

சமூக அறிவியல் பாடத்தில் 5305 மாணவ மாணவியர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

தமிழ் பாடம்:

தமிழ் பாடத்தில் இந்த வருடம் 3 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் இ.எச்.கே.என் பள்ளி மாணவர் சிபி சக்ரவர்த்தி, ரூக்மணி வித்யாலா மாணவி நிவேதிதா, திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி ஆகியோர் தமிழ்பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆங்கிலம்:

ஆங்கிலத்தில் பாடத்தில் இந்த வருடம் 3 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் ஸ்ரீநாத்(மாநிலத்தில் முதல் இடம்பிடித்த மாணவன்), ஈரோடு மாவட்டம் பழனியம்மாள் பள்ளியைச் சேர்ந்த தமன்னா சரோயா, சென்னை வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ஜனனி ஆகியார் ஆங்கிலத்தில் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்