இலங்கைக்கு எதிரான கண்டனக் கூட்டம் குவைத் T.N.T.J அமைப்பு நடத்தியது .

இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் களம் இறங்கி அப்பள்ளியை சேதப்படுத்தியது .

அதை கண்டிக்கும் விதமாகவும் இக்கண்டனத்தை உலக அளவில்  இலங்கை அரசுக்கு எதிர்ப்பினை எடுத்து செல்லும் ஒரு விழிப்புணர்வு கூட்டத்திற்கு குவைத் மண்டலம்      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கடந்த 27-4-2012 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முர்காப் பகுதியில் உள்ள மண் ஒ சல்வா உணவகத்தில் ஏற்ப்பாடு செய்திருந்தது.

மண்டல செயலாளர் சகோ கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  ஆரம்பமாக சகோதரர் இலங்கை ஒட்டுமாவடி ஃபாஹிர் அவர்களின் துவக்க உரையை துவக்கி  நிகழ்த்த.அதை தொடர்ந்து மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா உணர்ச்சிமிகு சிறப்புரையாற்றினார்.




காவி உடையணிந்த புத்த பிக்குகளின் அட்டகாசங்களை பட்டியலிட்டு இலங்கை முஸ்லீம்களின் இன்றைய நிலையை விளக்கியதுடன் உணர்ச்சி ஊட்டக் கூடிய அவர்களின் உரையால் வந்திருந்த மக்களை நெகிழ்ப்பில் ஆழ்த்த வைத்தது .

பின்னர் சகோதரர் இலங்கை பைரோஸ் அவர்கள் "காக்க வேண்டிய பள்ளிகளும் கற்க வேண்டிய பாடமும்" என்ற தலைப்பில் எழுச்சி உரை பின் தொடர்ந்தார் .சகோதரர் தனது உரையில் தம்புள பள்ளிவாசலின் வரலாறை எடுத்து விளக்கியோதோடு இதுவரை இலங்கையில் முஸ்லீம்கள் பட்ட அவலங்களையும்,பறிகொடுத்த பள்ளிகளையும் பற்றி விவரித்து இனிமேலாவது நாம் பாடம் படிக்க வேண்டும் இல்லையெனில் இலங்கையில் ஒரு காலத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலை வந்துவிடும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதை தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கையை சார்ந்த முஸ்லீம்கள்,பவுத்தர்கள்  ,கிருஸ்துவர்கள்,மற்றும் இந்து மக்கள் அனைவரிடமும் அதாவது குறைந்த பட்சம் இரண்டாயிரம் பேரிடம்  இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக வாசகம் அடங்கிய வெள்ளி ஓலையில்  கையெழுத்து பெறப்பட்டு அதை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் வாயிலாக இலங்கை அரசுக்கு குவைத் தமிழர்களின் கண்டனத்தை பதிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இலங்கையில் SLTJ இந்த விசயத்தில் வீரியமாக இறங்கி போராடி வருகிறது.அதன் முதல் கட்டமாக 27-4-2012 அன்று ஒரு கண்டன பேரணியை நடத்தியிருக்கிறது.இதில் இலங்கை அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் .இனி வரும் காலங்களில் SLTJ நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தாயகத்தில் உள்ள நமது சொந்தங்களை அனுப்பி அங்கு கலந்து கொள்ள செய்து  அநீதிக்கு ,எதிரான இது போன்ற கலப்போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பதென முடிவு செய்யப்பட்டது.

மேலும் குவைத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இலங்கையில் சகோதரர்களாக வாழ்ந்து வரும் முஸ்லீம் மற்றும் பவத்த மத மக்களுக்கிடையில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் ஒருசில மத வெறி பிடித்த புத்த பிக்குகளை அடையாளம் காட்டும் விதமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பிரசுரம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.

இரண்டு நாளில் முடிவு செய்யப்பட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.வந்திருந்த  சகோதரர்களுக்கு T.N.T.J மண்டலம் சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டை சகோதரர் நாசர்,ரியாஸ்,அப்துல் வாஹித் மற்றும் சித்திக் ஆகியோர் குறுகிய நாட்களில் சிறப்பாக செய்திருந்தனர்.
                      தகவல் அஹமது ராஜா ஷரிப் குவைத் .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்