"வான்கடே" மைதானத்தில் நடந்த சர்ச்சையை குறித்து ஆசிரியரின் கருத்து .


பிரபலங்கள்பெண்கள் கிசு கிசுவில்  அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்வதுண்டு.அது சில நாட்கள் ஊடகங்களில் அந்த நபருடைய பெயர் வெளுத்து கட்டுவார்கள் .அதன் பிறகு அது இயல்பாகிவிடும் .

ஒரு நடிகராக இருக்கட்டும் தனிப்பட்ட அரசியல் வாதியாக இருந்தாலும் இதுப்போன்ற செயல்களில் சிக்கிக் கொண்டு நான் தவறு செய்யவில்லை எனக் கூறி மறுப்பார்கள் .மானபங்கம் ஏற்படுத்திவிட்டதாக கூறி காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வார்கள் அப்படித்தான் வாடிக்கையாக இருக்கிறது .

ஆனால் கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணியின் இஸ்போன்சரும், இந்தி உலகின் ஜாம்பவான் கதாநாயகனாகிய ஷாரு கான் அவ்வப்போது தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார் .சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள அமெரிக்கா திரைப்பட குழு அவரை அழைப்பு விடுத்ததால் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஷாரு அமெரிக்கா விமான நிலைய காவலர்களால் தனியறையில் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு பெரும் நடிகர் அந்தஸ்தினை தாராமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காலத்தை தாழ்த்தி பிறகு அனுப்பி வைத்தனர் .இதற்கு ஊடகத்துறை விளக்கம் கேட்டதற்கு நடிகர் ஷாரு அப்படி ஒன்றுமில்லை அவர்களுடைய கடமை அவர்கள் செய்தார்கள் அதற்கு நான் ஒத்துழைப்பு தந்தேன் பிறகு அனுப்பினர் .

ஆனால் அமெரிக்கா காவல் துறை சாருவை புறக்கணித்தது உண்மையென தெரிய வந்தது .அதற்கு பிறகு சில மாதங்களுக்கு முன்பு அவருடைய நண்பரை கன்னத்தில் அறைந்ததாகவும் அதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததினால் காவலர்களிடம் விளையாட்டிற்கு கன்னத்தில் தடுவியதாகவும் கூற ... அந்த நண்பரும் அவரை புறக்கநித்துள்ளதையும் அப்போது தெளிவானது .

மீண்டும் புதிய ஒரு சர்ச்சை கிளம்பி இருப்பதும் அவரை வஞ்சித்து இருப்பதும்தான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது .கொல்கத்தா நைட் ரைதேர்சுக்கும் மற்றும் மும்பை இந்தியன்சுக்கும் போட்டி ஆரம்பித்து சில மணி நேரத்தில் வான்கடே மைதானத்தினுல்லே நுழைந்த ஷாரு மிகவும் சந்தோசத்துடன் உள்ளே நுழைந்துள்ளார் . 

அப்போது அவருடைய ரசிகர்களை பார்த்து கை உயர்த்தி கரங்கள் அசைத்துள்ளார் .போட்டி நேரம் முடியும் வரை எந்த பிரச்சனையும் சந்திக்காத ஷாரு போட்டி முடிந்தப்பிறகு நடந்தது என்ன ? வான்கடே மைதானம் இவர் குடி போதையில் இருந்தார் போதையுடந்தான் பிரச்சனை ஏற்படுத்தினார் .தகாத வாதத்தில் ஈடுபட்டார் சொல்வது உண்மையா? அங்கு நடந்தது என்ன ? 

வான்கடே மைதானம் ஊழியரும் அவரும் கைகலப்பில் ஈடுப்பட்டனரா? மும்பை மட்டைப்பந்து வாரியம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐந்தாண்டு காலம் வரக்கூடாது என்று சொல்வது சாத்தியமா? 

உண்மைக்கு உண்மையாகவும் அறநெறிக்கும் சிந்தனைக்கும் உட்பட்டு என்னுடைய சுய கருத்தினை பதிவு செய்கிறேன் ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய கருத்தினை வழங்க அதிகாரம் இருக்கிறது அதைப் பொருட்டு நீதி ,நியாயம்,நேர்மை ,உயர் நோக்கமாய் கருதும் எண்ணின் சிறிய கருத்து .!

போட்டி துன்வாங்கி சில மணி நேரத்தில் ஷாரு அவர்கள் வான்கடே மைதானத்தின் உள்ளே நுழைந்தார் . அவரை அங்குள்ள மைதான ஊழியர் வரவேற்றுள்ளார் நன்றியை கூறி உள்ளே நுழைந்த ஷாரு மைதானத்தின் உயர் ஆசனத்தில் அமர்ந்து ஒலிபரப்பு செய்துக்கொண்டிருக்கும் சோனி செட் மக்ஸ் தொலைகாட்சியை பார்த்து கரம் உயர்த்தி சந்தோசத்துடன் கையசத்தியுள்ளார் . இது அந்த தொலைக்காட்சியில் பதிவாகி உள்ளது .ஆட்டம் நேர முடியும் வரை மௌனம் காத்தது உண்மை அதற்கும் சாட்சி அதே தொலைக் காட்சி .

அப்படியிருக்க போதையில் இருந்தது உண்மையா ? போதையில் ரகளை செய்தார் சொல்வது எந்த அளவுக்கு உண்மை மது எங்கே அருந்தினார் போதை அருந்தி இருந்தார் சொல்வதற்கு என்ன ஆதாரம் குற்றம் சுமத்தி தண்டனை அறிவித்திருப்பது ஏற்றக்குடியதா?

நடிகர் ஷாரு மது அருந்தி இருந்தால் அவர் எப்போது மைதானத்திற்குள்ளே நுழைந்தாரோ அப்போதே ரகளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் அதற்கு மாறாக அவ்வப்போது சோனி அலைவரிசை அவரை காண்பித்தது அவர் அச்சமயம் இன்முகத்தோடு உடனிருந்தவரிடம் உரையாடி கொண்டிருப்பது அந்த அலைவரிசை  தொலைக்கட்சியில் பதிவாகி உள்ளது . மைதானம் ஊழியர் மது அருந்தியே மைதானம் உள்ளே நுழைந்தார் சொல்கிறார் அப்படிஎன்றால் மதி மயக்கத்தில் உள்ளதாக குற்றம் சுமத்துகிறார் அப்படியிருந்தால் ஏன் நுழைந்துடன் அவர் ரகளையில் ஈடுபடவில்லை .
சோனி தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பின் போது எந்த சைகையும் மது அருந்தியதாக தென்படவில்லை அப்படியிருக்க ஏன் அவர் மீது குற்றம் சுமத்த வேண்டும் . நடிகர் ஷாரு வுக்கும் மும்பை வாரியத்திற்கிடையே என்ன மோதல் என்ன முன் விரோதமா?
இல்லை வேறு ஏதாவது அரசியல் பிரச்சனையா அலது நடிகர் என்ற அந்தஸ்து இருப்பதால் அவருக்கும் அந்த மைதான ஊழியருக்கும் முன் விரோதமா என்பது ஆய்வு செய்து பார்க்கையில் .

அங்கு நடந்த சில விஷயத்தை தங்களுக்கு பகிர்கிறோம் .நடிகர் ஷாரு குறிப்பிட்ட நேரத்தில் மைதானம் உள்ளே நுழைந்தார் அவர் அப்போது குடிபோதையில் இல்லை அப்படி இருந்திருந்தாலும் அவர் மீது குற்றமில்லை . அவர் மைதானத்தில் மது அருந்தவில்லை .ஆகவே ஆட்டம் நேர முடிவு வரை எப்பிரச்சனியும் இல்லாதப்போது வெற்றி விளம்பில் இருந்த மும்பை அணி திடீர் தோர்க்க நேரிட்டதால் ஆனந்தத்தில் மூழ்கி உள்ளார் என்பது உண்மை .

அப்போது எதிர்பாராத விதமாக மைதானம் ஊழியர் அவரிடம் வந்து தான் அவருடிய ரசிகறேன்ரும் அறிமுகப்படுத்திக்கொண்டு கையொப்பத்தை கேட்டுள்ளார் .கையெழுத்திட மறுத்த ஷாரு நீ என்னுடைய ரசிகரில்லை பொய் சொல்வதாக கூறி கையொப்பமிட மறுத்துள்ளார் .நீ உண்மையான என்னுடைய ரசிகர் என்றால் எதிர் அணி உடையை அணிந்திருக்க மாட்டாய் அதனால் நான் உனக்கு கையெழுத்துப்போட முடியாது என்று திட்டவட்டமாக மறுக்க கோபத்துடன் திரும்பினார் அந்த ஊழியர் .

மேலும் சிறிது நேரம் கழித்து ஷாரு அதரவாக சிறுக்குழந்தைகள் ஆரவாரம் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த அதை ஏற்காத மைதான ஊழியர் அவரை அடக்க முயற்சித்துள்ளார் .அதை கண்ட ஷாரு அவருக்கு எதிராக பேச சிறுப் பிரச்சனை கலவரமாக மாறியது . இதையறிந்த மும்பை மட்டைப்பந்து வாரியம் நடிகர் ஷாரு மீது கோபத்தை காட்ட சாருவும் விடாப்படியாக எதிர்வாதமிட சிறிது நேரம் மைதானம் வன்முறைக் காலமாக மாறியது .
திடீர் என்று மும்பை மட்டைப்பந்து வாரியத் தலைவரும் ,மத்திய அமைச்சருமான திரு .விஸ்வரூப தேஷ்முக் அவர் மீது தண்டனை விடுத்தார் அதுவும் ஐந்தாண்டு காலம் வான்கடே மைதானத்தில் உள்ளே நுழையக்கூடாது என்பதாகும்.

இது ஒரு சிரியப் பிரச்சனை அவர் மது அருந்தி உள்ளே வந்திருந்தால் அது தனிப்பட்ட நபரின் பிரச்சனையாகும் ஒரு பிரபலமில்லாமல் தனி நபராக இருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் .அடாவடி ,ரகளை செய்யும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள் அப்படி இருக்க கொல்கத்தாவின் ரசிகராக ஷாரு இருந்ததினால் அவர் மீது குற்றம் சுமத்தி இருப்பது நியாயமில்லை அவர் செய்தது தவறு என்று சொல்லப்போனால் வந்த ரசிகர்களின் ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் ,விசில் அரட்டை,ஆகியவை அதுவும் தவறாகும் இவர் மீது நடவடிக்கை எடுத்தது பிரபலமானவர் என்பதே நோக்கம் அதுவே வேறு ஒருவர் குடிபோதையில் வந்திருந்தால் அனுமதி மறுக்கப்பட்டு இருக்குமா ?

இல்லை பிரச்சனை ஏற்படுத்தி தண்டனை விதிக்கமுடியுமா ? தக்வரு செய்தார் என்றே வைத்துக்கொள்வோம் .அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டுமே தவிர அப்படி ஒன்றும் செய்யாமல் தானாக தண்டிப்பது enpathau தவறான செயலாகும் . அவர் ஒரு டி.எல்.எப் . அமைப்பு குழுவில் பங்குதாரர் அவர் தவறு செய்தால் மேல் முறையிடாக பி சி சி இடம் புகார் அல்லது மேல் முறையீடு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர தானாக முன்வந்து எவரிடமும் புகார் அளிக்காமல் நடவடிக்கை எடுப்பது கேலி செய்யலாகவும் ஷாரு மீது திட்டமிட்டு சுமத்திய பழியாக படுகிறது ,

ஒரு வியாபாரி , செல்வாக்கு உள்ள ஜாம்பவான் நடிகருக்கே அரசியல் வாதிகள் தங்களுடைய கைவரிசையை காட்டுகிறார்கள் என்றால் சாதரான நபர்களுக்கு நீதி எங்கே கிடைக்கும் எங்கே எனத் தேடுவது .குற்றவாளிகள்  வெளியில் இருக்க ,குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கும் உலகமாக மாறி இருப்பது தெள்ளத்தெளிவாகிறது.
அரசியல் வாதிகளின்  கையில் அதிகாரம் வந்துவிட்டால் தான் கடுவுள் என்றும் சொல்ல மறுக்கமாட்டான் .

எப்படியோ உண்மை என்றும் தோற்காது வெளிப்படும் வாய்மையே வெல்லும் . அநீதம் அழிந்துதான் போகும் . பொய் சொல்லி குற்றம் சுமத்தினால் உண்மை எப்போதும் மறைந்துப்போகாது என்பதற்கு அத்தாச்சி இக்கட்டுரைப்போன்று ஊடகம் உண்மையை வெளிப்படுத்துவது திண்ணம் . தீயவர்கள் நான்கு பேர் இருக்கையில் நல்லவர் ஒருவராவது இருக்க மாட்டாரா ?



 


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்