கூனிமேடுவை சார்ந்த இரு மாணவர்கள் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் .

கூனிமேடு கோமட்டிக்குலம் பகுதியில் வசிக்கும் சகோதரர் ஜனாப் .அப்துல் சலீம் சகோதரி ஜனாபா.ஹசீனா பேகம் (சிலார் குடும்பம் )அவர்களுடைய மகனான சகோதரர் தாரிப் அலி புதுவை லாஸ்பேட்டையில் விவேகானந்தா பள்ளியில் படித்துவந்தார் அவருடன் காமேஸ்வரன் என்கின்ற கூனிமேடுவை சார்ந்த மற்றொரு மாணவரும் அதேப்பள்ளியில் படித்து வந்தனர் . +2 படிக்கும் கூனிமேடுவை சேர்ந்த  மாணவரான இவர்கள் தேர்வு எழுதி உள்ளனர் . 

சமீப காலமாக கல்வியில் பின்தங்கியுள்ள நம்முடைய ஊர் இந்த வருடமாவது ஓர் அளவுக்காவது முன்னேற்றம் ஏற்படுமா ? நினைத்துக்கொண்டிருக்கையில் நடந்து முடிந்த தேர்வில் சகோதரர் தாரிப் அலி 1200  க்கு 1003 மதிப்பெண் பெற்றுள்ளார் .இவருடன் அதே பள்ளியில் படித்து வரும் காமேஸ்வரன் சக மாணவர் 1003  இவரை விட கூடுதல் ஐந்து மதிப்பெண்களை பெற்றுள்ளார் இருப்பினும் ..!

இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் தற்போது விழித்திருப்பது சான்று தாரிப் அலியாகும் அவரை கைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசுகையில் அவர் நிர்ணயித்த மதிப்பின் தொகை 1000 க்கும் கூடுதல் மதிப்பெண் வரும் நினைத்ததுப்போல வந்துவிட்டது கூறும் இந்த மாணவரின் இலட்சியம் இயந்திர பொறியாளராக(மெகானிகல் இஞ்சினியர்)ஆக வரவேண்டும் என்பதாகும் .

அவரிடம் இந்த வருடம் தேர்வு எப்படி இருந்தது மிகவும் சுலபமாக இருந்ததா ? கேட்டதற்கு அப்படி ஒன்றுமில்லை கடினமான கேள்விகள் வந்ததால்தான் என்னால் 1000 என்ற மதிப்பெண்ணை நிர்ணயிக்க முடிந்தது இல்லையென்றால் மேலும் சிறப்பான கூடுதல் மதிப்பெண் வந்திருக்கும் கூறியதுடன் .படித்து பட்டதாரியானப்பிறகு வளைகுடா நாடை தவிர்த்து வெளி நாடான அமெரிக்கா,லண்டன் ,போன்ற நாடுகளுக்கு சென்று பணிப்புரிய திட்டமிட்டுள்ளதாகவும் .அதுவே நம் தாய் திருநாட்டில் நல்ல வரவேற்பு நான் வாங்கிய பட்டத்திற்கு இருக்குமாயின்முன்னுரிமை என்னுடைய நாட்டிற்கே கூறும் தாரிப் அலியின் இலட்சியங்களை இலட்சோப கனவுகளை கொண்டிருக்கும் அவர்களுடைய பெற்றோருக்கு தங்கள் வயலில் பெற்றோல் ஊற்று கிடைத்ததுப்போல மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் .

இன்றைய மாணவர்கள் கையில் புத்தகம் தூக்குவதற்கு பதிலாக அதை தவிர்த்து காதல் தூக்கில் சிக்கி மூச்சு திணறி இறந்து கொண்டிருக்கின்ற நிலையில் ,பெண்கள் மட்டுமா புத்தகத்தை தூக்க முடியும் அதையும் மாற்றி குடம்ப சுமையும் எங்களால் தூக்க முடியும் அதனுடன் புத்தகத்தை சேர்த்தும் தூக்க முடியும் என நிருபித்துள்ளார்கள் இந்த மாணவர்கள் .

அவர்களுடைய எண்ணம் ஈடேற பிரார்த்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை நம்முடைய தலைவர்களும் ,குவைத்தில் இயங்கி கொண்டிருக்கும் அமைப்புகளும் செய்து தர முன்வந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் செம்மையாக வளரக்கூடிய பயிருக்கு அவர்களின் தேவைக்கு சிறிய சேவை உரமாக நாம் இருந்தால் இவர்களைப்போன்ற பல லட்சியம் கொண்ட மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக உருவாகவும் உருவாக்கவும் முடியும் .

வெளிநாட்டு கனவைக்கொண்டு வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் படிப்பின் அவசியத்தையும் ,சமுதாய உயர்வழிகாட்டுதலின் அவசியத்தை அவர்களுக்கு உணற்றுமேயானால் நிச்சயமாக நம்முடைய ஊர் வளர்ச்சியை காணும் . இதற்கு முதல் வழி காட்டி பெற்றோர்கள் .

பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி படிப்பின் பக்கம் சாய்ப்பது ஒவ்வொரு தாயின் கடமையாகும் தந்தை வெளிநாட்டில் உள்ளார் சிலவுக்கு எவ்வளவு பணம் தேவை கேட்டு அவர்களுடைய வாழ்கையை சீரடிக்காமல் தந்தையுடைய கட்டத்தை அறிய வைத்து அவர் செய்யும் தொழிலை இதுவென்று சொல்லி படிப்பின் உண்ணதத்தை அறிய வைத்தாலேயானால் நிச்சயம் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடம் மீது ஆர்வம் உண்டாகும் .

படிப்பு ஏறவில்லை எப்படியாவது போகட்டும் நினைத்து தண்ணீரை தெளித்து விட்டோமானால் அந்த குழைந்தைகள் வழித்தவறி செல்வது மட்டுமின்றி அவர்கள் தவறுகள் செய்வதற்கும் படிப்பை கோட்டை விடுவதற்கும் முக்கிய காரணமாக நாம் ஆகிவிடுகிறோம் .

ஆகையால் படிப்பின் அவசியத்தையும் ,கல்வியின்  முக்கியத்துவத்தை சொல்வது மட்டுமில்லாமல் ,அன்பு ஆறுதல் ,அரவணைப்போடு சொல்லும் எந்த விசயமானாலும் கண்டிப்பாக அவர்களுடைய மூலையில் எட்டும் கண்டிப்பு என்பது அடுத்தகட்டம் அரவணைப்பு என்பது முதல் கட்டம் கோபத்தால் சொல்லி ஏற்காதது பாசத்தால் சொல்லி புரிய ஏற்க  வைக்க வேண்டும் .

முதலில் வெளிநாடு மோகமும் கொண்டிருப்பதை அவர்களுடைய சிந்தனையிலிருந்து அப்புறப்படுத்திட முயற்சி செய்ய வேண்டும் .இன்று தாரிப் அலி போன்ற எண்ணற்ற மாணவர்கள் பல லட்சியங்கள் கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்  .ஒருவர் நல்ல முறையில் எதிர்கால திட்டத்தோடு வாழ்வதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய பெற்றோர் நெறியான பாதையில் பயணிக்க கற்றுக்கொடுத்து ஒழுக்கம் ,பழக்கம் ஆகியவற்றில் பிள்ளைகள் மீது அக்கறை கொண்டு இயக்கி அவர்களை  செயல்முறை படுத்துவமானால் கண்டிப்பாக நல்லவர்களாக திறமையாளராக உருவாக்க முடியும் .


பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் கவனம் செலுத்தும்  பெற்றோர்களே சிறந்தவர் .அந்த சிறந்தவர்கள் பட்டியலில் இவர்களையும் சேர்க்கலாம் ஆயிரம் என்பது ஆயிரம் காலம் தவம் கொண்டாலும் பலரால் எடுக்க முடியா  பெற்றிட முடியா இலக்கை ஒரு வருட படிப்பில் எட்டிருக்கும் தாரிப் அலிக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். 

மேலும் நல்ல மதிப்பெண்  பெற்று இன்னும் அவருடைய குடும்பத்தை குதூகல சந்தோசத்தில் ஆழ்த்த வேண்டுகிறோம் .பெற்றோருடைய கட்டத்தை அறிபவர்களே பல இன்னல் நட்டத்தையும் ஏற்று நடப்பார் .அதேப்போல பெற்றோருடைய வார்த்தை கேட்டு நடந்து வெற்றிக்கானும் வரிசையில் தாரிப் அலியின் வெற்றிக்கு நாம் எப்போதும் தூணை நிறப்போம் .

1003 மதிப்பெண் பெற்ற காமேஸ்வரனுக்கும் வாழ்த்துக்களை இத்தருணத்தில் உரியதாக்குகிறோம் .

இந்த கட்டுரையானது ஆக்கத்திற்கு ஊக்கமே தவிர எந்த எதிர் தாக்குதலுக்கும் ,பெருமைபடுத்திட நோக்கமுமல்ல மேலும் ஊருடைய பெயரையும் ,கல்வியில் நலிந்த இஸ்லாம் சமுதாயத்தின் ஊக்கமளிக்க பதிவாக்கமாகும் .

சகோ .தாரிப் அலியின் மதிப்பெண்கள் ;
தேர்வு எண் :
605442
பெயர்:
THARIF ALI A S
பாடம்
மதிப்பெண்
Language/தமிழ் 
177 / 200
English/ஆங்கிலம் 
180 / 200

Theory
Practical
Total
PHYSICS/ இயற்பியல்
104
050
154 / 200
CHEMISTRY/வேதியியல்
117
050
167 / 200
BIOLOGY/உயிரியல்
113
050
163 / 200
MATHEMATICS /கணிதம் 
162 / 200

மொத்தம் :
1003 / 1200


இந்த செயலை தாரிப் அலி அல்லாது எந்த வேறு இஸ்லாமிய சகோதரர் எவராக  இருந்தாலும் இந்த கூனிமேடு குரல் அவர்களை வரவேற்று வாழ்த்துகளை பகிர்விப்போம் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்