"குவைத்தமிழோசை"யின் பிரமாண்டமான முறையில் அரங்கேறிய "சங்கத் தமிழ் தங்க விழா" !


இடது புறம் சொல்வல்லார் மையத்தில் வையாபுரி ,அனுமோகன் மற்றும் இவர்களுடம் வலதுபுறம் சகோ .சாதிக் .

வந்த கூட்டத்தின் ஒருப்பகுதி .
T.V.S. நிறுவனத்தாரின் ஒத்துழைப்புடனும் ,அல்-அவுதா தச்சுபட்டறையின் இணைதலோடும் ஏற்பாடு செய்யப்பட தமிழோசையின் சங்கத் தமிழ் தங்க விழா அருமையாகவும் மிகவும் போற்றுதலுக்கு உரியதாக இருந்தது மேலும்T.V.S குடும்பத்தார் உடனிருந்து கலந்துக்கொண்டு தங்கள் குடும்ப விழாவாக ஆதரவு தந்து அரவணைத்து சிறப்பித்தது மேலும் விழா மெருகேறியது .இந்த தமிழோசை கவிஞர் குடும்பம் விழாவாக மட்டுமல்ல! இந்த விழா T.V.S குழுமத்தின் விழாவாக காட்சியளித்தது.



எவரும் இந்த அளவுக்கு எதிர்பாராத விதத்தில் விழா தானாக அமைந்தது தமிழோசையின் வேர்களின் வியர்வைக்கு கிடைத்த வெற்றியாகும் .தயவு என்பது எவ்விதத்திலும் தோய்வின்றி  பொருள் உதவியும் ,சிரமத்துடன் கைகோர்த்து சகோதரத்துடன் நடத்தி முடித்திட நினைத்த சகோ .அலா @ அலாவுதீன் அவரின் சேவை தேவைகளை துறந்து சேவை நன்னோக்கில் கையாண்டு வெற்றி பெற செய்தது குவைத் தமிழ் குடும்பத்தார்கள் இவர்களுக்கு கடமை பட்டிருக்கிறார்கள் .
இவரின்றி தரும் கொடையன்றி ஒருவிழா நடத்துவது அறிது!இவரின் கொடையால் பல அமைப்புகளுக்கு இவர் குடையாக இருப்பதுதான்அந்த குழுமத்திற்கு பெருமையாகிருக்கும் .
தமிழோசையின்  தலைவர் சகோ .பிரான்சிஸ் பேசுகையில் இந்த விழா நடைப்பெருமா ?எண்ணி வருந்துகையில் கரம் கொடுத்து பண உரம்கொடுத்து உதவிய T.V.S குழுமத்திற்கும் ,விழுதாய் உடனிருந்து தாங்கிக்கொண்டிருக்கும் முதன்மை கொடையாளரும் தமிழோசையின் ஆலோசகருமான சகோ .சாதிக் மற்றும் இந்த அமைப்பின் கவி விழுதுகளில் எழும் துளிர்களின் ஒத்துழைப்பால்  இந்த விழா செழிப்பார அமைய ஊன்றுகோலாக இருந்தது அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம் கூறி அனைவரையும் T.V.S குழுமத்தின் பக்கம் கவன ஈர்ப்பை கொண்டு செல்ல வந்த நட்சத்திரம் தமிழ் வீச்சால் முற்போக்கு  பேச்சால் அவர்களுக்கு கவுரவப்படுத்தினார்கள் .

குவைத்தில் எவருமே எதிர்பார்க்காத முறையில் முதன்முறையாக பிரமாண்டமான ,பரதஇசை நடனத்துடன் துவங்கிய விழா தொகுப்பாளராக மூவர் இணைந்து பேசியது கலை கட்டியது .எம். ஜி .ஆர் .தோற்ற வண்ண உடையில் ஆலோசகர் விட்டுகட்டியாரும் ,இவருடன் தமிழோசைசெயலாளராக இருக்கும் சகோ .கார்த்திகேயனும் ,சகோதரி .ராணி மோகன் உரையும் மிகவும் சிறப்பாகவும் வரவேற்கத்தக்க முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் கவி அரங்கத்தை தலைமைபொறுப்பேற்று நடத்தியவர் தாய் மண்ணிலிருந்து வறண்ட வளைகுடா மண்ணிற்கு தமிழ் சேவையை செய்ய வந்த ஐயா-சகோ. கவி -சொல்வல்லார் நந்தலாலா அவரின் உரை வெயிலில் சூட்டை தனிய வைக்கும் குளிர் பானமாக அமைந்தது .

உழைத்து ,கலைத்து ,பொழுதை போக்கிக்கொள்ள வந்த பலரின் என்ணத்திற்கு மகிழ்ச்சி சிறகுகளாய் விண்ணில் பறக்க முத்தாய்ப்பு வாய்ந்த கவி நடைபேச்சு தமிழுக்கும் ,தமிழனுக்கும் சத்தாயிப்பு ஊக்கக்த்தை தெகட்டாது தந்தது அலுப்பை போக்கும் பாணி இது 'அருமருந்து!"தமிழை சுவைக்க வேண்டும் பசியோடு பிணியை போக்க வந்த எறும்புக்கும் கிடைத்தது சுவையான பந்தியில் கிடைத்த நல்லதொரு பலகாரம் கூடிய விருந்தாக அமைந்தது .

வறுமை துடைக்கவும் ஆறுதல் அளிக்கவும் குணப்படுத்துகிற மருத்தவராக மாறிய ஐயா .சொல்வல்லார் குவைத்   தமிழ் உள்ளங்களையும்  வென்றுள்ளார் .நித்த நித்த ஆறுதல்  உரைகள்   தருகின்ற விதத்திலே தந்து துயர்வினை மறந்து கவலைகள் துறந்து சிந்திக்கவும் ,செயல்பட முந்திக்கவும் நெருப்பூட்டும் சிந்தனை பேச்சு சிறிது உள்ளத்தையும் தட்ட வைத்தது ,அமைப்பு சார்ந்த சிலரின் உள்ளத்தையும் சுட்டிட வைத்தது .,தங்க விழா ,தங்கமாகவே சொல்வல்லார் ஜொலிக்க சங்க தமிழ் வல்லராக இருந்தது குவைத் தமிழ் அமைப்பின் வரலாற்றிலே தனித்துவம்பெற்றவராக உள்ளார் .தங்கம் மட்டுமில்லை ,தங்கமிருக்கும் இடம் கவிஞர்கள் அங்கம் வகிக்கும் இடம் புதையலாகும் அதுவே தமிழோசை.!விதைகளாக  சொலிக்கிறது கவி "பாசை" சொல்கிற அளவுக்கு அவருடன் இணைந்து அசத்தியது குவைத் கவிஞர்கள் கவிதைகளை படித்தது பட்டாசுப்போல வெடித்ததுப்போல  இருந்தது .

நகைச்சுவை நாயகர்கள் ,வையாபுரி மற்றும் அனுமோகன் உரை மிக சிறப்பாக இருந்தது மட்டுமின்றி பாராட்டும் விதத்திலும்  அமைந்தது .

இந்த விழாவில் தமிழர்கள் பலர் திரளாக குடம்பத்துடன் வந்து கூடி சிறப்பித்தது தமிழன் தமிழுக்கு, மாலை அணிவித்ததுப்போல எழிலாக காட்சியளித்தது .

மேலும் அயா சொல்வல்லார் நந்தலாலா அவர்களுக்கு தமிழோசை குடும்பத்தின் சார்பாக "நற்றமிழ் நாவரசு பட்டமும் நகைச்சுவை தென்றல் சகோ .வையாபூரி அவர்களுக்கு "விகட வேங்கை" பட்டமுன் இவருடன் வந்த ஐயா அனுமோகன் அவர்களுக்கு "கொங்கு தமிழ் தங்கம்" விருதும் பட்டுக்கோட்டையை சேர்ந்த சகோதரர் சத்தியன் அவர்களுக்கு "பட்டுக்கோட்டை தங்க தமிழன்"பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது .  மேலும் சகோ.சம்சுதீன் அவர்களின் பூக்கள் நெய்த வீடு  கவிதை நூலும் சொல்வல்லார் கரத்தால் வெளியிடப்பட்டது . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்