குவைத் வாழ் கூனிமேடு சகோதரர்கள் சமூக நலப்பேரவையின் அறிமுக விழா

குவைத் வாழ் கூனிமேடு சகோதரர்கள் சமூக நலப்பேரவையின் அறிமுக விழா .கடந்த வியாழன் இரவு (மன் ஓ சால்வா) உணவகத்தில் 9.45 இருந்து 12.15 மணி வரை நடைப்பெற்றது. விழாவின் தொகுப்பாளராக சகோ .ஷாஜஹான் இருக்க..... கிராத்துடன் துவங்கப்பட்ட இந்த பேரவை இஸ்லாம் பார்வையில் சமூக சேவை என்ற தலைப்பில் சொற்பொழிவினையாற்றி துவக்கிவைத்த சகோதரர் .ஷர்புதீன் அவர்கள் .!


அதன்பிறகு சகோ.மௌலான மௌலவி ஆலிம் இஷாக் மன்பயிஈ மார்க்க சிற்றுரையாற்ற அதன் பிறகு சாதிக் மற்றும்,சகோ .முபாரக் அடுத்தடுத்து தங்களுடைய உரையினை பின் தொடர...! இதற்கு பின்னால்  இந்த அமைப்பு எதனால் ,எதற்காக ? தொடங்கப்பட்டது மற்றும் இதன் நோக்கக்ங்களை சகோ.அமானுல்லாஹ் விளக்கங்களை  கூற சகோ. பாரூக் முடிவுரை தந்து விழாவை முடித்துக்கொண்டார் .இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டது வியப்படைய வைத்தது .கூநிமேட்டில்  கிளைகள் பலவாகிருந்தாலும் நிழல் ஏழைகளுக்கென்று கூறுவது வரவேற்க கூடியதாகிருந்தாலும் அந்த கிளைகள் காயிந்து சிலைகளாகாமல் செழித்து வளர்ந்து நிழலை தந்தால் எழில் நம் ஊருக்கு பலன் ஏழைக்காகுவது திண்ணம் .

கடந்த எட்டு மாத காலமாக காப்பாளர் கமிட்டியின் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த அமைப்பில் தலைவர் மட்டும் பொறுப்பாளிகள் எவரென்று சிலர் கேள்விகளை எழுப்பிய போது தற்போது ஐந்து நபர் கொண்ட காப்பாளர் கமிட்டியினரின் நேர்பார்வையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .இந்த அமைப்பில் மிக விரைவில் நிர்வாகத்தை அமைக்கப்படும் அதுவும் இறைவனையும் அவனுடைய தூதராகிய நபிகள் நாயகம் {ஸல் }அவர்களின் வழிகாட்டுதலால் அதுவும் இஸ்லாம் மார்க்க  சட்ட திட்டத்திற்கு உட்பட்டு குர் -ஆன்,ஹதீஸின் படியே உகுந்ததாக இருக்கும் எனவும் சகோ .அமானுல்லாஹ் உறுதி மொழியளித்துள்ளார் .

இதையறிந்த மற்ற அமைப்பினர் பலரிடம் சூசகமாக பதில் அளித்து வருகின்ற நிலையில்.இதுவரை இந்தஅமைப்பில் தலையுமில்லை வால் எவரென்று அறியாது இருப்பின் இரண்டு மாதத்தில் அறிவிக்கப்படும் கூறுவது சாத்தியமா ?மற்ற அமைப்பு போல சஞ்சலங்கள் ஏற்படாது கூறும்சிலரின் பேச்சுக்கு நிதர்சனம் கிடைக்குமா ?குதர்சனமாக பதில் தற்போது கூறினாலும் திண்ணம் அவர்களின் எண்ணம் ஈடேற பொறுத்திருந்து பார்ப்போம் .எவரையும் குறைத்து எடையும் போட முடியாது ,மிகைத்து பார்க்கவும் முடியாது .சற்று பொருமைக்காத்து அவர்களுடைய அருமையை பார்த்தால் அவர்களின் பெருமை ஊர் சொல்லும் எது உண்மை ? .

தூதரின் வழி கடந்து ,இறை வேதத்தை பணிந்து நடக்கும் எவருக்கும் தோல்விகளில்லை "மறுமையில்"! புகழைத்தேடி ,பெருமைப்பாட நினைப்போருக்கு வெற்றி இவ்வுலகில் மட்டும் சொல்லும் !மறுமையில் நரகமே வெல்லும் .!

"நன்மையை ஏவி தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் கூட்டம் உங்களிடம் இருக்கட்டும் அவர்களே நேர்வழி பெற்றோர்" -( அல் -பகரா ).குர் -ஆன்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்