ஜாதி வாரியம் கணக்கெடுப்பின் அவசியம் .


நம் நாட்டில் பல்வேறு சமுதாயத்தினர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் .ஒவ்வொரு சமுதாயத்திலும் பல்வேறு தரப்பட்ட வகையில் எளிமையான மக்கள் வாழவே செய்கிறார்கள்அதன் அடிப்படையிலே அனைத்து தரப்பட்ட மக்களுடைய வாழ்வின்  நிலையை அறிந்துக்கொள்ள தொழில் ,வருமானம் ,ஜாதி,கல்விப் போன்றவற்றை கணக்குகளை  அரசாங்கம் அவ்வப்போது எடுத்து வருகின்றது .அதனால் இந்தியாவில் வசிக்கும் ஜனத்தொகைகளை எந்த சமுதாயம் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதை நிர்ணயிக்கும் இந்த ஜாதி வாரியக் கணக்கெடிப்பின்  வாயிலாக அறியமுடியும் இதனை உணர்ந்து அவர்களுக்கு அரசாங்கம் சலுகையும் முன்னுரிமையும் வழங்கும் என்பதால் இதுப்போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தி கணக்கெடுக்க வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும் .

இதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது ?

சில சமுதாயத்தில் வாழ்வாதாரம் கூட கேள்விக் குறியாகிருக்கின்ற நிலையில் இதுப்போன்ற  சேகரிக்கப்பட்ட அறிய தகவலால் அவர்களுடைய வாழ்வை மறுமலர்ச்சி செய்ய கொடுக்கின்ற  தகவலை வைத்து ஜாதி .- பிற்படுத்தப்பட்டோரா ?மிகவும் பிற்படுத்தப்பட்டோரா?தாழ்த்தப்படோரா?சிறுபான்மையினரா ?என்பதை கணக்கெடுத்து அவருடைய பொருளாதார நிலையை அறிந்துக்கொள்வதற்காக தொழில் அதில் ஈட்டும் வருமானம் குடம்ப உறுப்பினர்கள் போன்ற தகவல்களை அரசாங்க அதிகாரிகளிடம் வழங்கினால் அதை அரசிடம்   கணக்கெடுத்து அங்கு சமர்பிக்க இலகுவாகும் .இதன் மூலம் ஒரு சமுதாய வாழ்வாதாரம் பெற முடியும் அதனால் அரசாங்க  திகாரிகள் கேட்கும் கேள்விகளை அதற்கு தகுந்த பதில்களை பொதுமக்கள் தரும் படி இந்த கூனிமேடுகுரல் கேட்டுக்கொள்கிறது .

இந்த கணக்கெடுப்பு சேகரிக்க வருகிறவர்களை அரசாங்கம் மக்களை எந்த ஜாதி கேட்டு வர்புரத்தக்கூடாது என்று சொல்லுகையில் தாங்கள் எந்த ஜாதி என்பதை சொல்ல விருப்பமில்லை என கருதி விட்டுவிட்டால் அப்போது நாம் தரும் முரணான  தகவலின் பேரில் ஒவ்வொரு சமுதாயத்திர்கும் பின்னடைவே தவிர எந்த சாதிக்கும் அது சாதகமாக அமையாது எந்த சமுதாயத்திற்கும் எந்த சலுகையும்  கிடைக்காது என்பது உறுதி .

ஜாதி தேவையில்லை எனக்கூறும் தி.க-வினரும் இத்தருணத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பது அவர்களுடைய வாழ் நிலையை அறிந்துக்கொள்வதற்காக இன்றியாமையான ஒவ்வொருவருக்கும் அவசியமாகும் இதனால் கசந்து கடக்கின்ற சமுதாயத்தி மீட்டெடுக்க தருணம் இதைவிட அமையாது கூறிவருகின்ற நிலையில் நாம் இதற்கு முழு ஒத்துழைப்பு தர முன் வரவேண்டும் .

ஆகவே அந்த அந்த சமுதாயம் சலுகைகளை பெற அவர்களுடைய வாழ்நிலை அறிந்துக்கொள்ளவும் பொருளாதாரத்தை அறிந்துக்கொள்ளவும் ,கல்வியியலில் எத்துனை விழிக்காடு உள்ளதையும் நிர்ணயிக்கும்  இந்த கணக்கெடுப்பு பட்டியல் ஒவ்வொரு சமுதாய நிலையை மாற்றம் செய்யக் கூடிய அறிய தகவலாகும் .இதனால் மக்களுடைய  நிலையை துள்ளியமாக பட்டியலிட்டு சொல்லவும் இது அவசியம் ஆகவே சரியான தகவலளித்து சிறந்த சமுதாய வளர்ச்சிக்கு நாமும் வழி வகுப்போம் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்