இலங்கை அரசுக்கு கூனிமேடு குரல் கண்டனம் .


குவைத் :-இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 2000  நபர்களிக்கொண்ட பௌத்தர்களால் பள்ளிவாயில்இடித்து தகர்த்ததற்காக கூனிமேடு குரல் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது . மத வாத வெறிப்பிடித்த காவிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கு புனிதஸ்தலம் அயோக்கியர்களால் தகர்க்கப்பட்டிருப்பதை கேள்வியுற்று மனம் வேதனை அடைந்ததுடன் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசு கண்டுக்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி இருக்கிறது.

மதப் பேரணி என்ற இதன் அடிப்படையில் இந்தியாவில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பிற்கும் ,இலங்கை பழமை வாய்ந்த பள்ளியைஇடித்து தகர்த்ததற்கும் ஏதோ இரத்த பந்தம் இருப்பதாக தெரிகிறது .



இலங்கை தம்புள்ளை மாநகரில் கடந்த "அறுபத்தெட்டு " வருடங்களுக்கு மேலாக இஸ்லாமியர்கள் வசித்து வருவதை சுட்டிக்காட்டி இருப்பதை கவனத்தில் கொண்டு வந்த கூனிமேடு குரல் பலக் கேள்விகளை இரு அரசாங்கத்திற்கு பிறப்பித்திருக்கிறது .இத்தனை வருடம் காலமாக அது புண்ணிய பூமி என்பது தெரியாதா ? இந்தியா இனவாத இயக்கமான பி . ஜே .பி அங்கு சென்றப்பிறகுதான் அதுப்புனித பூமியானதா?


தமிழர்களுக்கு நல உதவிகள் செய்ய வேண்டும்நோக்கத்தில் இந்திய அரசாங்கம் சார்பில் சில அமைப்புகள் ,நாடாளுமன்ற அமைச்சர்களும் அங்கு சென்றுள்ளார்களா? இல்லை இதுப்போன்ற அவல செயல்களில் ஈடுபட்டு மனித நேயத்தையும் ,இன வாதத்தையும் தூண்டிவிடும் நோக்கத்தில் இனவாத பயணம் இந்தியா மேற்கொண்டுள்ளதா?

இதை அறிந்தே சில அரசியல் பிரமுகர்கள் செல்ல புறக்கநித்தார்களா ?

ரங்கிரி விகாரை புனித பூமி என பிரகடனம்படுத்தியது எந்த நோக்கம் ?எந்த அடிப்படையில் பிரகடனம்படுத்தப்பட்டது .புத்தர் இனவாதத்தையும் ,வகுப்பு வாதத்தையும் ,செய்ய தூண்டினார ?

அப்படி செய்ய சொல்லிருந்தால் !"போதிமரம் "போதித்த ஞானம் இதுதானா ?புத்தர் கற்பித்த ஒழுக்கம் இதுதானா?

இலங்கைப் பிரதமர் தி.மு.ஜயரத்ன, "நீண்ட கால பௌத்த வரலாற்றினைக் கொண்ட தம்புள்ள புண்ணிய பூமியிலோ அல்லது நாட்டில் அமைந்துள்ள ஏனைய புண்ணிய பூமியிலோ சட்டவிரோத நிர்மாணப் பணிகளுக்கு இடமளிக்க அரசாங்கம் தயாராக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.


அப்படியிருக்க ஏன் அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை .இலங்கை அரசு தூண்டிவிட்டு வன்முறை களமாக்கி இந்து -முஸ்லிம்களுக்கிடையே வன்முறை தூண்டி ஒற்றுமையை குலைத்து  வகுப்புவாத வன்முறையை கண்டு களிக்கத்தானா ?இதனால் பாதிக்கப்பட்ட இலங்கை இஸ்லாமியருக்கு என்ன பதில் அளிக்க உள்ளார்கள் .

மீண்டும் அதே இடத்தில் பள்ளி வாயில் கட்டித்தர முன்வருவார்களா? எனவும் கேள்விகளைஎழுப்பியது .மேலும் இஸ்லாமிய சமுதாயம் சிங்களர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை ,இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தும் அரபியர்கள் ஆதரவளித்து வாக்களித்ததை மறந்து விட்டார்களா ?

இவர்கள் காட்டும் விசுவாசம் இதுதானா? இவர்களுக்கு பதில் சொல்ல என்ன வைத்துள்ளார்கள் ? நாடகம் அரங்கேற்றி வைத்துவிட்டு அறியாமை சொல்லப் போகிறார்களா? இல்லையென்றால் விரைவில் தீர்வு காண விடையம் ஏதாவது வைத்துள்ளார்களா?

அமைதி காணும் இஸ்லாமியர்களை வன்முறையை துண்டித்து இதில் பங்கு வகிக்க தீவிர வாதத்தை உருவாக்க இவர்களுக்கு என்ன நோக்கம் ?

என்பதை பல்வேறு கேள்விகளை இந்த மக்கள் குரல் இலங்கை அரசுக்கும் ,இந்தியா அரசுக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்