கட்டுரை

அன்புள்ள அம்மா , எப்படி இருக்கிறீர்கள் ? நீங்களும்  என்னிரு பிள்ளைகளும்  சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் . நான் தாயகத்தை விட்டி ஐந்து மாதத்திற்குப்பிறகு தபாலை எழுதுகிறேன் , மிகுந்த ஆச்சரியத்தை   உங்களுக்கு ஏற்படுத்தலாம் . ஆனால் அதை விட இன்னொரு ஆச்சரியம் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள் என் எழுத்துக்களால் மனதை துளைத்து தங்களுக்கு இரணத்தை குடுக்கும் என்பது திண்ணம் . நீங்கள் எல்லாம் நினைத்து இருப்பீர்கள் கணவன் அழைத்தான் .. அவனுடன் சந்தோழமும் சகல செல்வ பாக்கியத்துடன் அனுபவித்துக்கொடுள்ளதாய் நான்  கனவுக்கண்டுவந்ததுப்போல நீங்களும் கனவு கண்டுகொண்டு இருப்பீர்கள். அந்த கனவு கனவாகிபோச்சி என்பதை உங்களிடம் எப்படி சொல்வது ? ஒரு பெண்ணை பெற்று வளர்த்து  படிக்கவைத்து திருமணம் செய்துகொடுக்கம் வரை பொறுப்பு பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது .அதற்க்கு பின்னால் தாலி கட்டிய கணவருக்கு எல்லாம் பொறுப்பும் சேருவதுதான் உண்மை இன்றைய உலகில் நடந்துக்கொண்டு இருப்பதவும் இதுவே ..! நீங்கள் திருமணம் செய்து கொடுத்து ஐந்து வருடங்கள் ஆகிறது . இரண்டு     குழந்தைகளையும்  ஆவலோடு  நாங்களிருவரும்  பெற்றெடுத்தோம் சந்தோழமாக சென்றுக்கொண்டிருந்த எங்களுடைய குடும்ப   வாழ்க்கை அனைவரும் செவி சாய்த்து கேட்கும் சங்கீதமாய் ஆகிவிட்டது . இன்முகத்தோடு விமான நிலயத்திர்க்கு வந்து வழி அனுப்பி ச்சென்றீர்கள்  .      

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்