மனதுடைந்த சச்சின்: சேப்பல் தகவல்
First Published : 25 Oct 2011 02:56:40 AM IST
மெல்போர்ன், அக். 24: ஜாம்பவான் சச்சின் கூட ஒருகால கட்டத்தில் மனதுடைந்த நிலையில் காணப்பட்டார் என கிரேக் சேப்பல் தனது புதிய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக 2005 முதல் 2007 வரை கிரேக் சேப்பல் பணியாற்றினார்.
அவர் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து "ஃபியர்ஸ் ஃபோகஸ்' என்ற நூலை எழுதியுள்ளார்.
அதில் அவர் சச்சின் குறித்து குறிப்பிட்டுள்ளதாவது:
இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று சிறிது காலம்தான் ஆகியிருந்தது.
மலேசியாவில் 2006-ல் நடைபெற்ற ஒரு தின போட்டியின்போது அவர் சரியாக விளையாடவில்லை.
இதையடுத்து ஒரு நாள் 2 மணி நேரத்துக்கும் மேல் என்னுடன் உரையாடினார். அவர் தனது அப்போதைய ஆட்டம் குறித்தும், காயங்கள் குறித்தும் மனதுடைந்த நிலையில் இருந்தார். இதிலிருந்து மீள்வதற்காக எனது உதவியை நாடினார்.
ஆனால், அவர் மீது கோடிக்கணக்கானோர் வைத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பார் என நினைக்கிறேன்.
அணியுடன் பயணம் செய்யும்போது தனது ஹெட்போனை கூட வைத்துக் கொள்ளமாட்டார். முழு கவனமும் விளையாட்டு பற்றியே இருக்கும். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மனிடம் கூட மக்கள் இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1989 முதல் மக்களின் எதிர்பார்ப்பை அவர் சுமந்தே வந்துள்ளார். அவருக்கு ஓய்வு என்பதே இல்லை என்று புத்தகத்தில் சேப்பல் விவரித்துள்ளார்.