தமிழோசையின் எழுபத்தி ஐந்தாவது மாத விழா மற்றும் இப்தார் சுதந்திர நிகழ்ச்சி !


குவைத் தமிழர்களின் அங்கமாகவும் ,கவிஞர்களின் குடும்பமாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும்  தமிழோசை கவிஞர் குழாம் ஜாதி,மதம்,பேதமின்றி காணாது குவைத்  மக்களுக்கு பல்வேறு நிகழ்சிகளை  வழங்கி வருகின்ற நிலையில் ...அதில் ஒரு நிகழ்வாக கடந்த வெள்ளியன்று இப்தார் நிகழ்சியுடன் ,சுதந்திர தின நிகழ்ச்சியும் ,எழுபத்தைந்தாவது மாதாந்திர கூட்டமும் நடத்தப்பட்டது .

இந்த நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு துவங்கப்பட்டு ஒன்பது மணி வரையில்  நடந்தது .கூட்டத்தை முதன்முதலாக துவக்கி பேசிய மன்றத்தின் தலைவர் பிரான்சிஸ் அவர்கள் ஆலோசகர் கவிஞர் சிவக்குமார் அவர்களை விழா சிறப்பித்து தருமாறு பணித்திட செயலாளலரின் முன்மொழிதலோடு மேடையேறினார் ஆலோசகர் .அதற்கு முன்பு இப்தார் நிகழ்ச்சியை துவக்கத்தை துவக்கிட்ட விட்டுகட்டி மஸ்தான் கவிதைப்பாட கவிஞர் சத்தியன் அவர்களை அழைத்தனர் ,அவரின் ரமதான் மாதத்தைப் பற்றி சிறப்பு கவிதை முழங்க ,,,பின் தொடர்ந்த துணைத் தலைவர் கவிஞர் சம்சுதீன் முடிவுரையோடு வரவேர்ப்புரையும் வழங்கி முடித்திட்டார் குவைத்தின் வள்ளல் பெருமான் சகோ டிவிஎஸ் .அலாவுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இருந்தார் .

இதனை தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியை முடித்து மக்ரிப் தொழுகைக்கு பிறகு துவங்கிய கவிஞர்களின் அங்கமம் சங்கமமாக கவிதைகள் வழங்க ,,,பட்டிமன்றத்தின் சங்கமம் போன்ற அறிய நிகழ்சிகளை முத்தாய்ப்பாய் வழங்கி இவர்கள் குதூகலப்படுத்தினர் .இதைக் காண  பல்வேறு அமைப்புகளில் இருந்து வருகைத்தந்த அமைப்புகளும் கவிஞர் குழாம் உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்