சென்றுவிட்டதை நினைத்து மகிழ்கிறோம் ..!நம்மைவிட்டு செல்கிறதே நினைத்து கலங்கிக் கொண்டே ..இப்பதிவு .!

குவைத்தில் இனிதே நிறைவேறியது ரமதான் நாளை இந்தியாவில் ,!

சென்றுவிட்டதை நினைத்து மகிழ்கிறோம் ..!நம்மைவிட்டு செல்கிறதே நினைத்து கலங்கிக் கொண்டே ..இப்பதிவு .!


கடந்த முப்பது நாட்களாக நோன்பு நோற்று முதல் பத்தில் ரஹமத் இறைவனின்  அருளும் ,இரண்டாம் பத்தில் மக்பிரத்  இறைவனால் பாவமன்னிப்புதேடுதலும் ,மூன்றாம் பத்தில் இதிகுமுல் நார் -நரக நெருப்பிலிருந்து விடுதலைப்பெருதல் இம்மூன்றும் மனிதனுக்கு இயல்பாக அரிதாக கிடைத்து விடாது !இது அத்தனையும் ரமதான் முப்பது நாட்களில் பல்லாண்டு வருடத்தின் நன்மைகள் ஒரேயடியாக வந்தடைகிறது .


நாம் என்னத்தான் மற்ற பிற தினங்களில் மண்டியிட்டு தொழுது வணங்கி பிரார்த்தித்தாலும் அவ்வளவாக நன்மை எளிதாக கிடைத்து விடுவதில்லை நமக்கு வந்த முப்பது நோன்பும் முத்துக்களாகும் ,இந்த நோன்பை  அடைய வேண்டி நமக்கு கிடைத்த நன்மையை சேமிக்கும்  சொத்துக்களாகும் ஒவ்வொரு ஆண்டும் இறைவனை வணங்கி தொழுது இதனை சேமித்து வைத்தால் மறுமையிலே சொர்க்கத்தையடைய திறவுகோலாகும் !

இன்றுப் பலர் எப்போடா இந்த ரமதான் சென்றடையுமோ நினைக்கிறோம் ஆனால் அதை சரியாக உணர்ந்து உண்மை எதுவென அறிந்து அதுப்படி நடக்க ஆரம்பித்தால் நம்மை விட்டு ஏனோ சென்றடைந்து விட்டது நினைக்கத்தோன்றும்  .அந்த நாட்களை தொலைத்துவிட்டோமே சிந்திக்கத்தோன்றும்.

இன்று பெரும்பாலும் நோன்பு  மற்றவர் கடைப்பிடிக்கிறாரே,,,நாள் முழுதும் பட்டநியாக இருக்கிறாரே  கண்டு அந்த ஆர்வத்தில் நாமும் பின்தொடர்கிறோம். ஆனால் நாம் பெரும்பாலும் இறைவனை உள் அச்சத்தோடு பிரார்த்திப்பதில்லை ,வணங்குவதில்லை !மாறாக அன்றைய நாட்களில்தான் நோன்பு வைத்துவிட்டு நாள் முழுக்க உறங்கிவிடுகிறோம் ,தொழுவதில்லை  ,துதிப்பதில்லை !  

தேவையற்ற விசயங்களுக்கு  பொய் சொல்கிறோம் பிறரை ஏமாற்றுகிறோம் ,வீண் பிரச்சனைகள் செய்துக் கொள்கிறோம் தொலைக் காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் கண்டு கழித்துக் கொண்டு காலத்தை வீணடித்துக் கொள்கிறோம் .இத்தகைய செயல்கள் எத்தனை நாட்களுக்கு தொடரும் பிறரை ஏமாற்றலாம் தங்களை கவனித்து வரும் இறைவனை ஏமாற்றமுடியாது இறுதியில் தாங்கள் ஏமாற்றமடையப்பட்டு நரக நெருப்பில் அடையும்போது தங்களை மீட்க எந்த உறவு பந்தகளும் துணை வராது தாங்கள் செய்த நன்மை மட்டுமே அதனை மீட்க செய்யும் .

ஆகவே வரும் ஆண்டுகளில் இந்த ரமதானை நன் நோக்கத்துடனும் ,இறைவனின் அருளிற்காகவும்.பாவ மன்னிப்பை தேடியும் ,நரக நெருப்பை தவிர்க்கும் விதமாக நோன்பினை நாம் அனைவரும் நோற்று இறைவன் கருணை விழ பிரார்த்திப்போம் ! நாம் அனைவருக்காக பிரார்த்திக்கும் தங்களில் ஒருவனாக !- கவிஞர் முபாரக் . 


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்