கூனிமேடு மக்களுக்கு இந்த ரமதான் அர்ப்பணம் !

அஸ்ஸலாமு அலைக்கும் !
அன்பு சகோதர ,சகோதரிகளே ...!
நம்முடைய குவைத்தில் வாழும் கூனிமேடு சகோதரர்களின் ஒத்துழைப்பாலும் அவர்களின் அரவணைப்பினாலும் இறைவனின் நாட்டத்தினாலும் இனிதே நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் எங்களுடைய ஜமாஅத் வரும் காலங்களில் மென்மேலும் இன்னமும் மிகவும் சிறப்பாக செயல்படவும் இளைய தலைமுறையினரைக்கொண்டு வலுவாக உயர்ந்தடவும் ஊருக்கும் ,நம்முடைய மக்களுக்கும் ,பலனளிக்கும் விதத்திலே செயல்பட இருப்பதை இதன் வாயிலாக ரமதான் நல்வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்து மகிழ்கிறோம் .


ஆகவே சமூகப்பணியில் ஆர்வமிக்க துடிப்பான  இளைஞர்களும் ,வாலிபர்களும் ஒன்றிணைந்து   கூனிமேடு குவைத் ஜமாத்தில் தங்களை இணைத்து  கூனிமேட்டினுடைய  வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் .

எவருடைய தனிப்பட்ட பெருமைக்கோ ,விளம்பரத்திற்கோ ...போட்டியினாலையோ ,பொறாமையினாலையோ ...எதிரியாகவோ ,பகைவர்கள் கருதியோ நாங்கள் எங்களுடைய ஜமாத்தை வழி நடத்தி செல்லவில்லை அனைவரும்  ஊரை உயர்த்திட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும் .தேவை நோக்கம் தவிர்த்து மக்கள் சேவை நோக்கம் பிரதானப்  பணியென நினைப்போருக்கு நிச்சயமாக சொர்க்கத்திலடைய ஏக இறைவன்  அருள் புறிவான் .

ஆகவே புதிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த ரமதான் இறைவன் கருணையும் அருளும் இங்கி இருப்பதாகவே கருதுகிறோம் .நாம் சிந்திக்கவும் , செயல்படவும் வித்தாக இருக்கும் இந்நன்னாளை தாங்கள் குடும்பத்துடன் மகிழ்வோடு கொண்டாட வேண்டுகிறோம் .குவைத் வாழ் மக்களுக்கும் ,கூனிமேடு வாழ் மக்களுக்கும் எங்களுடைய ரமதான் வாழ்த்துக்களை அர்ப்பணம் செய்கிறோம் .மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் எங்களுக்கு ஊக்கமளியுங்கள் ,உற்சாகமூட்டுங்கள் ,ஒத்துழைப்பை நல்குங்கள் ...இதுவே நாடுகிறோம் .

ரமதான் வாழ்த்து !
'''இறைவனின் கட்டளையாக 
வந்துதிர்த்த நோன்பு உணர்த்திட 
வைத்தது பசியின்  மாண்பு !

தர்மத்தை கொடையளித்து 
வறுமையை விடையளித்தது .....
சகோதரத்துவத்தை  பேணிட...
சமுத்துவத்தை காத்திட 

நன்மையை ஏவிட ...
தீமையை அழித்திட ....

சாந்தியும் ,சமாதானம் மண்ணில் நிலைத்திட 

ஒற்றுமை  நாளும் மனிதனுக்குள்  மலர்ந்திட ....  


அறிய வைக்கவே அடைந்திட்ட மாதம் ரமதான் ..!

புனிதமாகும் ஏகவனை தொழுதால் ..!

பாவங்கள் பதராய் '"நன்மைகள் கதிராய்
செழித்திடும் நாளும் நேர்மை நிலைத்திடும் !

நாம் அனைவரும் ஒருக்குடையில் சாய்வோம் 
கிளைகள் பலவாகிருந்தாலும் இஸ்லாமென்ற ...

நிலையில் நம்மை மாய்வோம் ..!ஒற்றுமையோடு 
வாழ இனிய ரமலான் நல்வாழ்த்துக்களுடன் ,


இங்கனம் ,கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் குவைத் /கூனிமேடு .
இவர்கள் சார்பாக இணைச்  செயலர் {KMJK}.- J.K.R சித்திக் குவைத் .




டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்