கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாகம் கையில் கொண்டு வர புதிய திட்டம் .

அண்மைக்காலமாக கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாகத்தில் நிலவியிருந்த குழப்பம் அரசியலால் ஊரே தலைக்கீழாக மாறிவருவதை கருத்தில்  கொண்ட குவைத் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தினர் அதனை தடப்பு நோக்கமாகவும் ,புதிய செயல்முறைத்திட்டமாகவும் செயல்படுத்திட புதிய திட்டத்தை யுக்திகலாக்க புதிய ஆலோசனையை சபையினர் முன்பாக  முன்வைத்து அனைவர் ஒப்புதளால் நிறைவேற்றியுள்ளனர் .

தற்போது அங்குள்ள நிலையும் ,தடுக்க வேண்டிய நடவடிக்கைப்பற்றியும் விவரமாக கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளனர் .

கூனிமேடில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் !

சில மாதங்காலமாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருப்பிறிவாய் பிளவுப்பட்டு எதிரும் புதிருமாக நடைப்பெற்று வரும்  பிரச்சனையால் நீதிமன்றம்,காவல்நிலை யமென படியேறி தோய்ந்து களைப்பில் நின்ற நேரத்தில் நீதிமன்றம் இப்பிரச்சனையை கையாண்டு தீர்ப்பாக வக்பு வாரியத்திற்கு பரிந்துரை வழங்கியது .நீதிமன்றப்படியேறி அலுப்பில் இருக்கும் இருத்தரப்பினர்  அந்த வக்பு வாரியத்திற்கு செல்லாமல் மெத்தனப்போக்கு காட்டிவருகின்றனர் .

இந்த நிலையில் எவர் பள்ளிவாசல் நிர்வாகியென அறியாமல் தவிப்போடு இருந்த ஊருக்கு நான்தான் நாட்டாமை என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய அதிகாரத்தை மக்களின் ஆலோசனையின்றி ,ஆதரவின்றி செயல்படுவதால் 
அதனை உணர்ந்த இந்த அமைப்பு ஊருக்கு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக புதிய யுக்திகளை கையாள நிர்வாகக் கூட்டத்தை வியாழன் 12.07.2012 இரவு பத்து மணி அளவில் குவைத் ஷர்க் பூங்காவில் நிர்வாகக் கூட்டத்தை கூட்டினர் . 

கிராத்தை ஓது முடித்து நிர்வாகம் கூட்டப்பட்டதையும் ,அதன் அவசியத்தையும் விளக்கமளித்து தொடர்ந்த இந்த ஜமாஅத் பித்ரா வசூல் பற்றியும் அதனை வழங்கும் முறைகள்  பற்றியும் விளக்கங்களாக விவரித்தனர் .மேலும் இதனை வசூல் செய்ய நிர்வாக அமைப்புகள் கிளைகளை அமைத்து வசூல் செய்ய முடிவெடுத்ததோடு!சமீப காலமாக சந்தா வசூலில் தொய்வும் ஏற்பட்டதை விளக்கமளிக்க....! அதனை தவிர்க்கும் விஷயத்தை ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் ஆலோசனையும்  மேற்கொண்டு சபைக்குள் முன் வைக்க ,,நல்ல முடிவினை விவாதித்து தீர்வினை எட்டப்பட்டது .

அதற்கு பின்பாக (வட்டியில்லா கடன் திட்டம் }அவசரக்கால உதவித்திட்டமாக செயல்படுத்திட முடிவு எடுக்கப்பட்டது .இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் ஊருடைய நிலையும் , கூனிமேடு ஜமாத்தின் போக்கும் முன் வைக்கப்பட்டது .ஊரில் இருப்பிரிவாக பிளவுப்பட்டு இமாம் ஒரு சாராருக்கு ஆதரவாகவும் ,இமாம் நெறிப்படி அறியாத ஒருவராக இருப்பதாலும் ,இஸ்லாத்திற்கு முன்னுக்கு முரணாக போக்கும் தான் இஸ்லாமிய  சட்டம் அறியாதவறென தானே ஒப்புக்கொண்டதால் ..  அவரை நீக்க வேண்டும் எனவும் சபையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் நீக்க்கவும்திட்டம் தீட்டப்பட்டது .

அதற்கு முன்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்த பலரின் குரல் எழுச்சியோடு ஒலித்ததால் இந்த அமைப்பை நிர்வாகத்தை நிர்வகிக்க முடிவினை  கையில் எடுக்கவும் முடிவினை தொடக்கவும் திட்டமிட்டனர் .

அதனின் பலனாக விரைவில் ஊரார்களுக்கு கடிதம் வாயிலாகவும் ,குவைத்  வாழ் மக்களுக்கு சுவரொட்டி வாயிலாகவும் ஆதரவை திரட்டி எவரை பள்ளிவாசல் நிர்வாக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதையும் ஆலோசனை நடத்தி அதன் பிறகு நல்ல  முடிவினை எடுக்கப்படும் எனவும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது .

மேலும் மக்கள் ஆதரவின்றி ஒப்புதலின்றி குடியேறி இருக்கும் சகோதரர் ஒருவரை நிபந்தனை மூலியமாக குடியமர்த்தவும் ,கூனிமேட்டில் நடக்கும் எவ்வித பிரச்சனையாகிருந்தாலும் அப்பிரச்சனை  குவைத் வாழ் மக்களின் ஆதரவின்றி ஒப்புதலளிக்க முன்வரக்கூடாதெனவும் கோரிக்கை மனுவும் விரைந்து அனுப்ப திட்டமிட்டுள்ளது .

மேலும் குவைத் வாழ் மக்களின் நிதியிலிருந்து உதவிப்பெரும் கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாகம் குவைத் வாழ் கூனிமேடு மக்களின் கோரிக்கையை ஏற்று நடக்க வேண்டும் .ஊர் நலம் பெற இஸ்லாமிய சமுதாயம் முன் மாதரியாக வாழ ,இருக்க வேண்டுமெனில் இதற்கு அனைத்து அமைப்புகளும் எதிராக குரல் எழுப்ப வேண்டும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்