பித்ரா பணம் யாரிடம் வழங்குவது கூனிமேடு மக்களின் குமுறல் .!

அண்மைக்காலமாக ஜமாத்தே இல்லை என்று சொல்லிக்கொண்டு வேதனைப்பட்டுக்கொண்டிருந்தோம் .அனால் தற்போதோ வீதிதோறும்  ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு நாங்கள்தான் சிறந்தவர்கள் எங்களிடம் தங்களின் நன்கொடை பித்ரா வசூல் வழங்கினால் இசுலாத்தின் முறைக்கும் நெறிக்கும் உகுந்ததாக வழங்கப்படும் என்பதாக ஒரு அமைப்பும்.,!அதற்கு மாறாக  மற்றொரு அமைப்போ நாங்கள் மக்கள் செல்வாக்கிலும் ஆதரவிலும் செயல்படும் ஊர் ஜமாத்தாகும் அதனால் தனி நபர் வசூலில் நாங்கள் குறைக்கூற விரும்பவில்லை !

நேர்மைக்கும் ,பணிவுக்கும் ,இசுலாத்தின் வழிமுறைகளை  இன்றைய கால கட்டத்தின் அவசியத்திற்கும்  உணர்ந்தவாறு அதனை கருத்தில் கொண்டு இன்றைய அத்தியாவசிய நிலைப்பாடுகளை முன்னிறுத்தி எது சிறந்தது ? பணமாக தருவதா?பொருளாக பங்கிடுவதா? தங்களின் சிந்தனைக்கே எங்களின் கருத்து  வைக்க கடமைப்பட்டோம் அப்போது ஊர் மக்களின் நிலைப்பாடும் ஆதரவும் பணத்திற்கே  ஆதரவளித்ததினால்  ஏகோபித்த முடிவினை மக்கள் ஆதரவினால் எடுக்க முடிந்தது .எனறுக் கூறுகின்றனர் .

ஆனால் இன்றைய நிலையில் அத்தியாவசியப்பொருட்கள் அவர்களுடைய விருப்பத்திற்கும் ,அவர்களின் நிலைக்கு வாங்கிக்கொள்வதுதான் இன்றியாமையாகிருக்கும் ,ஆகவே புத்தாடை  அணிவதும் ,உணவு பண்டங்கள் வாங்கிக்கொள்வதும் பொருட்கள் வாங்கிக்கொள்வதும் அவர்களைப்பொருட்டேஅவர்களின் நிலை  என்பதால் .!

அதை மையமாக வைத்து பணமாக அளித்து அவர்களின் பூர்த்தியை நிறைவேற்றும் விதமாக இருக்கும் என்பதின் நோக்கத்தால் முடிவு செய்யப்பட்டது .மேலும் பொருள் தேவையானது அனைத்துமே நம்மால் வழங்க முடியாது சிலர் குடும்பத்தில் சிலப் பொருட்கள் இருக்கலாம் ,மேலும் சில வீட்டில் ஏதாவது குறையலாம் .ஆகவே சிறந்ததும் தேவையானதும் மக்களுக்கு பணமே !அன்றைய காலத்தில் நபி பெருமானார் {ஸல் } அவர்கள் எப்படி தந்தார்கள் அதேப்போன்று தர வேண்டும் கூறிக்கொண்டு வருகிறார்கள். அதன் நிலையை முன்னிறுத்தி பித்ரா வசூல் செய்யும் அமைப்புகள் சிலர் அந்த கோட்பாட்டில்தான் வழங்க வேண்டும் உறுதியோடிருந்தாலும்.

இப்படி வழங்க  வேண்டும்?எத்தன அடிப்படையிலே அப்படி வழங்குவது காலத்தின் கட்டாயமும் அவசியமும் தற்போது என்ன என்பதினை ஆராய்ந்து சொல்வது இன்றியாமையாகும் .ஆகவே சில அமைப்புகள் பேச்சு முழங்க சுவரொட்டி மூலமும் அறிக்கையின் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் எப்படி தருவது ? நம்மிடம் பணம் வாங்கி இவர்கள் பொருளாக தருவார்களா?
இல்லை பணமாக தருவார்களா? எவருடைய யோசனை நன்றாக இருக்கிறது எது சரி ?எது முரண் ? ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு முறையும் பித்ரா வசூல் செய்ய வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது என்ன?யாரிடம் வழங்குவது எவரிடம் வழங்கினால் முறையாக சென்றடையும் இதுவெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கும் மக்கள் அனைவரும் கூறுவதைப்போல யார் முறையாக நபி வழியாக தருகிறாரோ அவரிடம் கொடுக்கலாம் ஆனால் ?சொல்லி இழுக்கும் நபர்களே   எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் .

இதனால் யாருக்கும் தர மனம் இடம் தரவில்லை !சில அமைப்புகள் இன்னொரு அமைப்புகள் விசயத்தில் தலையிடமாட்டோம் ,அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது .அவர்கள் பணமாக தருகிறார்கள் நாங்கள் பொருளாகத் தருகிறோம் கூறுவதால் ஸ்தம்பித்துப்போன மக்கள் நாங்கள் யாரிடமும் வழங்கமாட்டோம் .எங்களின் விருப்பத்திற்கேற்ப தர எண்ணமிட்டுள்ளோம் அதன்படியே தர இருக்கிறோம் கூறி வருவதையும் செவியேற்க முடிகிறது .இருந்தாலும் இந்த கூனிமேடு குரலின் விருப்பமோ தங்களின் எண்ணத்தைதைப்பொறுத்தே தாருங்கள் .

பொருளாக தர விரும்புவோருக்கு பொருளாகத்தாருங்கள்.பணமாக தர விருப்பமிருந்தால் பணத்தை தருவர்களிடம் தங்களுடைய பித்ரா பணத்தை தாருங்கள் .ஆனால் இஸ்லாம் சட்டம் கூறும் நபர்கள் அவர்கள் அவர்களுடைய தற்பெருமைக்கு மட்டும் இடம் தாராமல் உண்மையான நெறிக்கு தருபவர்களை தங்களின் ஆதரவை தாருங்கள் .சில அமைப்புகளில் முறையற்ற வரைமுறையில் அமைப்பை அமைத்துக்கொண்டு தலையும் வாலில்லாமல் இயங்கிக்கொண்டிருகின்றன.இசுலாம் சட்டம் கூறும் இவர்கள் அடிப்படை  சட்டமும் அதன் நோக்கமும் அறியப்படாமல் தானாக ஓர் அமைப்பை உருவாக்கி இசுலாம் சட்டம் இது சொல்லி இருக்கிறது கூறும் இவர்களுக்கு அதே இசுலாம் சட்டம் நிர்வாகத்தைப்பற்றியும் அதன் அடிப்படை விஷயம் பற்றியும் விளக்குகின்றன .

அதை துறந்துவிட்டு இந்த பித்ரா வசூல் விசயத்தில் அரசியல் நாடகம் நடிப்பது சரியில்லை கவுரவம் பெற்றுத்தருவதற்கு கூடுதலாக பல விஷயங்கள் இருந்தாலும் சேவை நோக்கம் கூறிக்கொண்டு இசுலாத்திற்கு முரணாக செயல்படும் இவர்களுக்கு மட்டும் பணத்தை தந்துவிடாதீர்கள் .இசுலாம் சட்டம் கூறும் இவர்களுக்கு எந்த தகுதியில்லை எனக்கருதுகிறோம் காரணம் அந்த அமைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் தலைமையை அமைக்காமல் தனி நபரோடு அந்த அமைப்பு நடந்துக்கொண்டுள்ளதால் அதற்கும் ,அந்த அமைப்புக்கும் அவர்கள் நிர்வாக அமைப்பு அமைக்காத வரையில் தலைவர் மற்றும் பொறுப்பாளிகள் நியமனம் செய்யாத வரையில் இந்த கூனிமேடு குரல் அவர்களுக்கு ஆதரவு அளிக்காது ,

மேலும் தவறான நோக்கம் ,ஆரம்பத்தில் அமைப்பு துவங்கும் முன்பு பெரிய அமைப்பு ஈடுபடும் எந்த ஆக்கத்திலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் கூறிய இவர்கள் அந்த அமைப்புக்கு எதிராக வசூல் செய்து வருவதுசெயல்படுவதும்,எதை செய்தாலும் முன்னுக்கு முரணாக நடந்துக்கொல்வதும் கண்டனத்துக்குரியதே ...!.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்