சென்னை வண்ணார பேட்டை லாலா குண்டாவில் நடந்தது என்ன! SDPI கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள் !

சென்னை வன்னரபெட்டை லாலா குண்டா பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்களான இவர்கள் கறிக்கடை மற்றும் சிறிய தொழில்களை செய்து வருபவர்கள்.ரத்ததானம்,கல்வி உதவி என்று தமுமுக இங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதால் வட சென்னை மாவட்டத்தில் தமுமுகவின் ஆதரவாளர்கள் அதிகமுள்ள பகுதி இது.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக SDPI,PFI அமைப்பு இங்கு வேரூன்ற முயற்சி செய்து வருகிறது.குடிகாரர்கள்,பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்று இவர்கள் யாரை சந்தேகப்பட்டு கின்றனரோ அத்தகைய நபர்களை தங்கள் அடையாளங்களை மறைத்து கொண்டு தாக்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 16 வயதுள்ள ஒரு முஸ்லிம் இளைஞர் அவரது வீடு அருகில் SDPI,PFI அமைப்பை சேர்ந்த இளைஞர்களால் தாக்கபடுகிறார்.இந்த தாக்குதலில் அவரது கையில் முறிவு ஏற்படுகிறது.இதையடுத்து அந்த இளைஞரின் குடும்பத்தினர் தமுமுக பகுதி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சொன்ன தமுமுகவினர் அந்த குடும்பத்தினர் கேட்டு கொண்டதால் SDPI அமைப்பின் நிர்வாகிகளிடம் நேற்று இரவு நியமத் மற்றும் மற்றொரு தமுமுக சகோதரர் இருவரும் இது குறித்து விளக்கம் கேட்க அவர்களும் விளக்கம் அளித்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் திடீரென அங்கு இருந்த அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் நீங்க எண்டா இந்த பிரச்னையல தல்யிடுறீங்க என்றவாறே தமுமுக நிர்வாகி நியமத் என்பவரை தாக்க உடனே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் அடிக்க ஆரம்பித்தனர்.தமுமுக நிர்வாகிகள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் தமுமுக சகோதரர்கள் திரள ஆரம்பித்தனர்.இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் நன்கு பயிற்சி பெற்ற SDPI,PFI தொண்டர்கள் தாக்கு பிடிக்க முடியாமல்  ஓட்டம் பிடித்தனர்.காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால் பெரும் கலவரம் தவிர்கபட்டது.மேலும் ஒரு கடையில் SDPI அமைப்பினரால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களும் போலிசால் கைப்பற்ற பட்டன.

தமுமுகவை சேர்ந்த 6 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் SDPI அமைப்பினர் சென்னை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்க பட்டுள்ளனர்.இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தமுமுகவினர் குடிபோதையில் பெண்களை கிண்டல் செய்ததை தட்டி கேட்டதால் தங்கள் மீது  தாக்குதல் நடத்தியதாகவும்,ஜவாஹிருல்லா எம் எல் ஏ தூண்டுதலில் தாக்குதல் நடைபெற்றதாகவும் செய்திகளை பரப்பி வருகின்றனர்.குடிபழக்கம் இருந்ததால் தமுமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிலரை(பெயர் குறிப்பிட விரும்பவில்லை) தங்கள் அமைப்பில் சேர்த்து கொண்ட இவர்கள் இது போன்ற பொய் செய்திகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.

மேலும் வட சென்னை மாவட்டம் முழுவதும் திரண்டு தமுமுகவினரை தாக்க SDPI கட்சி தொண்டர்கள் விரும்பியதாகவும் இவர்கள் தடுத்து விட்டதாகவும் பெருமை பட்டு கொள்கின்றனர்.தமுமுகவினர் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து இவர்களின் தலைமை தடுத்து வைத்துள்ளது என்பதே உண்மை.சங்பரிவார்  கூட்டத்தை சமாளிப்பதற்காக பயிற்சி எடுத்து வருவதாக சொல்லும் இவர்கள் சொந்த சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்துவதுதான் அதிகம்.அதிரமபட்டினத்தில் தமுமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இவர்கள் முன்பு திண்டுக்கல் இப்போது சென்னை  என பலத்த அடி பட்டதால் கதி கலங்கி போயுள்ளனர்.

தங்கள் திறமைகளை சங்பரிவார் கும்பலிடம் மட்டும் காட்டினால் இவர்களது அமைப்புக்கும் நல்லது சமுதாயத்துக்கும் நல்லது.அமைப்பு வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு.பொய் செய்திகளை பரப்பி குறுக்கு வழியில் அதை செய்ய வேண்டாமே. சகோதர  சண்டையை விரும்பாத நல்லெண்ணத்தில் இதை சொல்கிறோம்.புரிந்து கொண்டால் சரி.

தகவல் காஞ்சி இனிவன் .சென்னைஉயர் நீதி மன்ற வழக்கறிஞர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்