தமிழகத்தில் பொறியியற் பி .இ , பி .டெக் படிப்பிற்கான கவுன்சலிங்

தமிழகத்தில் பொறியியற் படிப்பிற்கான பி .இ , பி .டெக் படிப்பிற்கான கவுன்சலிங் வரும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி சென்னையில்  துவங்குகிறது . ஆனால் இதற்கு முன்பு இந்த கவுன்சலிங் ஒன்பதாம் தேதி நடக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை மாற்றம் செய்து புதிய தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இதனை அறிவித்திருக்கிறது .


ஆண்டு தோறும் கவுன்சலிங் நடத்தி இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசமாக பொறியியற் படிப்பை படிக்க ஊக்கவிக்கும் அந்த பல்கலைக்கழகம், சென்ற ஆண்டைப்போல இவ்வாண்டும் கவுன்சலிங் நடத்த திட்டமிட்டுள்ளது .இதன் அறிக்கையை அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் இன்று வெளியிட்டுள்ளார் .

மாற்றியமைக்கப்பட்டு  கீழ் வரும் தேதிகளில் நடக்க இருக்கும் கவுன்சலிங் :
ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 25ம் தேதியும் ,ரேங்க் பட்டியல் வெளியீடு ஜூன் 30 ம் தேதியும் , விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவக்கம் ஜூலை 5ம் தேதியும் ,தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7 முதல் 11ம் தேதிவரை நடைப்பெறும்  எனவும் ,மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 12ம் தேதியும் ,பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 13ம் தேதி முதல் துவங்க இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் .

மேலும் இந்த தகவல் மூலம் பொறியியல் பட்ட படிப்பை பயில ஆர்வமுள்ளோர் இந்த கவுன்சலிங்கில் கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்