குவைத் தமிழோசை நடத்திய மாதாந்திரக் கூட்டம் !


குவைத் ஜிலீப் சுவைக்  பகுதியில் அமைந்துள்ள அல் -ருசி உணவகத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 .30 மணி வரை மாதாந்திரக்கூட்டம் நடைப்பெற்றது .ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்களை நினைவுப்படுத்தும் சிறப்பு அம்சம் இந்த குவைத் தமிழோசை குழுமம் செய்து வருகின்றது  .அவ்வகையிலே இம்மாதம் கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் ,மா  .போ சா - அவர்களையும் நினைவுக் கூறும் வன்னமாகவும் ,நடைபெற்று முடிந்த சங்கத்தமிழ் தங்க விழா கூட்டத்தில் வருகைத் தந்து முழு ஈடுபாட்டுடன் பங்களிப்பை வழங்கி வெற்றியை தேடித்தந்த களப்பணியாளர்களை  கவுரவிக்கும் விதமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .இந்த விழா தொகுப்பாளராக பொருளாளர் கார்த்திகேயனும் ,தலைவர் பிராசிஸ் மற்றும் செயலாளர் பேச்சுரையோடு துவக்கப்பட்ட இந்த கூட்டம் முதலில் தமிழ் அறிந்ஞர்களை நினைவுப்படுத்தும் வரிசையில் கவிஞர் கண்ணதாசனின் மனதை கொள்ளைக்கொண்டு குடியிருக்கும் பாடல்களை பாடகர்கள் யோகேஸ்வரன் ,கணேஷ் மற்றும் பாடகி ராணி மோகன் வரிசையாக பாடி அசத்த..!

 கவிதை தொகுப்புகளை கவிஞர்கள் தொடர்ந்து வழங்க அதன் பின் கலந்துக்கொண்ட அத்துணை தமிழ் உறவுகளுக்கும் ,கலந்துக்கொண்டு பாடுப்பட்ட தமிழோசை குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவிக்கப்பட்டது .அதன் [பிறகு மதியம் உணவு முடிந்து தொடரப்பட்ட கூட்டம் தங்கத்தமிழ் தங்க விழா களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக முதலில் நன்கொடை அளித்து இறுதிவரை உடனிருந்து வெற்றியுனும் கனியை பறிக்க உதவிய டி -வி எஸ் நிறுவனத்திற்கும் ,உடன் சலிக்காமல் கைகோர்த்த 
அல் அவதா தச்சுப்பட்டரை நிறுவனத்தின் நிருவனரையும் பொன்னாடை போர்த்தி கவுரிவித்தார் மன்றத்தின் உயர் ஆலோசகரான முனைவர் குமார் .!மேலும் பாடகர்களுக்கும் ,நடந்து முடிந்த விழா தலைப்பை பெயரை உருவாக்கி தந்த கவிஞர் பட்டுக்கோட்டை சத்தியனுக்கு நினைவு பேழையும் ,தன்னார்வத் தொண்டாற்றிய அன்பர்களுக்கு நினைவு சான்றுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது . 

இந்த விழாவில் அறுபதுக்கும் மேலான கவிஞர்கள் கலந்துக்கொண்டு கவிதை முழங்கினார்கள் . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்