வெள்ளியன்று (KEWA) அமைப்பினர் கூனிமேடு ,குவைத் பகுதிகளில் சுவரொட்டி விநியோகம் !


கூனிமேடு இளைய சமுதாயத்தினர்களால் குவைத்வாழ் கூனிமேடு சாகோதரர்கள் சமூகநல பேரவை (KEWA - Koonimedu Expatriate Welfare Association ,)என்கின்ற அமைப்பை அதன்  ஆக்கப்பூர்வத்தை கடந்த மாதம் குவைத் மக்கள் மத்தியில் அமைக்கப்பட்டது .அதன் செயல் திட்டங்களை குறித்து அறிவிக்கப்படும் என்பதாக அறிவித்த அந்த அமைப்பை சார்ந்தவர்கள் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர்களுடைய செயல் திட்டங்களை குறித்து அண்மையில் (வெள்ளிக்கிழமை )கூனிமேடு பள்ளிவாசலிலும் ,குவைத் மிர்காப் பகுதியிலும் விநியோகம் செய்யப்பட்டது .மேலும் குவைத்தில் பகுதியில் பகுதிவாரியாக சென்று தங்கிருக்கும் அறைகளில் கூனிமேடு குவைத் வாழ் மக்களுக்கு இந்த அமைப்பின் நோக்கத்தையும் ,செயல் திட்டத்தின் விழிப்புனர்வையுன் ,ஆலோசனைகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் வீடு வீடாக சென்றும் ,சகோதரர்களை சந்தித்து இந்த சுவரொட்டியை வழங்கி அவர்களின் ஆலோசனையை பெற இருப்பதாக அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார் .மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் ஏழை எளியோர் பயன் பெரும் நோக்கத்தில் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள் .

சாத்தியமா ,கருத்தும் பலர் மத்தியல் நிறைவேற்றிடும் முன் சுவரொட்டியை வழங்கி அசாத்தியத்தை வெளிப்படுத்தும் இந்த அமைப்பின் திறமை வாழ்த்துதலுக்குரியது .

குவைத் மக்கள் பயன் பெற ,உதவ நினைக்கும் கரங்கள் திறந்திருப்பது கொடையின் அருமையையும் ,மறுமையின் நினைவையும் உணர்ந்து ,ஒற்றுமை எனும் மகிமையோடு உளமார கொடுக்க நினைக்கும் மனிதர்களை ,அமைப்புகளை பாராட்ட செய்ய வேண்டும். இதுப்போன்ற அமைப்புகள் மேலும் முன்னேறி அறியப்பல சாதனைகளை செயல் திட்டங்களாக மக்களுக்கு தந்து அவர்களின் துயர் துடைக்கும் பணிகளை மேற்கொள்ள முயல வேண்டும் .

பெருமைக்கு ஒரு அமைப்பு இல்லாமல் ஒருமைக்கு அதாவது ஒற்றுமைக்கு ஒரு ஜமாஅத் என்ற நல்ல பெயரை வென்றெடுக்க வேண்டும் .அவதூறு சொல்லி திரியும் பல அமைப்புகள் மத்தியில் வேறு விதத்தில் சென்று ,அறுக்கப்பட்ட வேரில் புதிய ஈறாய் முளைத்து மக்களுக்கு விழுதாய் தாங்க வேண்டும் ,என்பதே குரலின் ஆர்வக் குரலாகும்!

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்