மறுமை / கியாமத் நாள் குறித்த (K-T-I -C)சங்கம் நடத்திய சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி



குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-T-I -C), குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக வாரந்தோறும் தமிழ் மொழியில் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பேருரையுடன் மாதந்தோறும் பல பகுதிகளிலும் பல்வேறு தலைப்புகளில் மார்க்க, சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இம்மாத (மே) நிகழ்ச்சியாக மறுமை / கியாமத் நாள் குறித்த சிந்தனை மக்களிடம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 17.05.2012 வியாழக்கிழமை இரவு 8:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல், மிஜ்யத் அல் ஹிலால் உதைபீ (உருதூ ஃகுத்பா) பள்ளிவாசலில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, இளைஞர் அணி செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா எம்.எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ மற்றும் ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர் குழுவின் மூத்த உறுப்பினர் மவ்லவீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் மண்ணறை வாழ்க்கை, மறுமை நாளின் நிகழ்வுகள், சுவனம், நரகம் போன்ற தலைப்புகளில் அவையோர் உள்ளங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தலைவரின் துஆ/பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேநீரும், இறுதியில் இரவு உணவும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்