ஹவல்லியில் நடந்து முடிந்த மார்க்க விழிப்புணர்வு பயான்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த வுடன் வாரம்தோறும் நடத்தப்படும் மார்க்க சிற்றுரையை இம்முறை சகோதரர் மௌலான மௌலவி ஜலில் ரப்பானி வழங்க ஏராள மானோர்   கலந்துக்கொண்டனர்.

 சகோதரர் எடுத்துக்கொண்ட தலைப்பு மறுமையின் வெற்றி ?நினைவை ஏற்படுத்தும் வகையில் செய்த சொற்ப்பொழிவு குறிப்பிடத்தக்கது .அதன்பின்
ஜனாஹிஸ் அரபு நூலில் இருந்து சான்றாக அதில் இடம்பெயர்ந்த அத்துணை கருத்துக்களும் நம்முடைய சகோதரர் விரிவாக விளக்கினார் .

ஒரு சடலத்தை எப்படி குளிப்பாட்ட வேண்டும் .அனுசரிக்க வேண்டும் போன்ற பல வகையான செய்திகளை அந்த  நூலில் இடம்பெயர்ந்த கருத்துக்களை மொழிப்பெயர்ந்து நம்முடன் பகிர்ந்துக்கொண்டார் .இப்புத்தகம் சில தினங்களுக்கு முன்புதான் குவைத்தில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்  இம்முறை ஒன்றரை மணிநேரம் நீண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.இவருடன் கூனிமேடு சகோதரர் மௌலான மௌலவி இஷாக் மற்றும் இவருடன் நெல்லிக்குப்பம் நகைப்பை அசரத் ஜுல்பிகர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .

இதன் பின் மக்களிடையே எழுந்த சந்தேகத்தை சகோதரர் விளக்கம் அளித்தார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்