கூனிமேடு குரல் அனுப்பிய ஏழை வரி {பித்ரா }குறித்த கருத்துக்கு ஆலோசனை.



அண்மையில் கூனிமேடு குரல் இணையத்தால் கோரிக்கை ஓலையை கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் குவைத்திற்கு அனுப்பப்பட்டது .அதில் குறிப்பிட்டிருப்பது இன்றைய சூழ்நிலைக்கு பணம் தருவதை விட பொருளாக தருவதே மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பணமாக தந்தால்  இசுலாமிய சட்டத்திற்கு முரண்பாடாக சென்றடையும் என்கின்ற மைய கருத்தை பதிவு செய்திருந்தது .அதை அந்த நிர்வாகம் செயற்குழு கூட்டத்தில் படித்து ஆலோசனை நடத்தப்பட்டது .

மேலும் ஆலோசனை செய்ததில் தற்போது குறுகிய கால அடிப்படையிலும் .மக்களின் பற்றாக்குறை நிலையாலும் தற்போது வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வர இருக்கும் காலங்களில் மக்களிடம் பரிசீலனை செய்து முறையாக நிறைவேற்றப்படும் என்பதாக கருத்தை முன்னிறுத்தப்பட்டது . இந்த விவாதத்தில் பொருளாகத் தர தோய்வு ஏற்படும் வீண் செலவுகள் நிர்வாகத்திற்கு ஏற்படும் கருத்துகள் முன்னிறுத்தியதால் அந்த செலவினங்களை பெரும் செலவாக ,பாரமாக நினைக்கும் பட்சத்தில் அப்பொறுப்பை கூனிமேடு குரல் இணையம் பொறுப்பேற்கும் தெரிவித்தது .அடுத்த ஆண்டு முடிவு எட்டப்படும் கூறியதால் .இந்த இணையத்தால் வசூல் செய்யப்பட்டு தோழர் சித்திக் பொறுப்பில் 77  குவைத்தி தினாரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்