மாணவர்களுக்கு ஊக்கமளிக்க முன் வராத அமைப்புகள் இருந்து என்னப் பயன் ?


நம்முடைய கூனிமேட்டிற்கும் அதில் அங்கம் வகிக்கும் மக்களுக்கும் உதவ வேண்டும் நோக்கத்தோடு அமைக்கப்பட்ட பல அமைப்புகள் கிளைகிளிருந்தும் நிலைகள் இல்லாமல் இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது .அண்மையில் கூனிமேட்டை சார்ந்த மாணவ ,மாணவிகள் இவ்வருடம் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது வரவேற்க விதத்திலும் ,அவர்களையும் ,

மேலும் படித்து வருகின்ற மாணவர்களையும் மேன்மைபடுத்தி ஊக்கவிக்கும்  நோக்கத்தோடு கூனிமேடு குரல் இணையதளத்துடன் இணைந்து அவர்களுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்கி ஊக்கப்படுத்திட அறைகூவல் விடுத்தது .அதை படித்து விட்டு பட்டு படாமல் எந்த ஒரு ஆலோசனையும் வழங்காமல் மவுனம் காத்து வரும் சில அமைப்புகள் .தனிச்சையாகவோ .ஒன்றுப்பட்டோ  ,இணைந்தோ எந்த சேவையும் புரியாமல் தாங்கள் போகும் நிலைப்பாட்டில் செயல்பட்டுக்கொண்டிருப்பது அமைப்பினுடைய சட்ட திட்டத்திற்கு முரணாகவே தெரிகிறது .

ஊர் மேல் பற்று ,ஊர் வளர்ச்சிக்கு விந்தையாக   செயல் பட வேண்டிய அமைப்புகள் அதைப்பற்றி கருதாது இருப்பது அவரின் நோக்கங்கள் எந்த விதத்தில் நியாயப்படுத்தி சொல்வதென்று புரியாத புதிராக உள்ளது .
அண்மையில் தவறை சுட்டி காண்பித்து தொடக்கப்பட்ட செய்தியினால்  ஊர் மானம் உலகம் அரங்கேற வைப்பதாக விமர்சனம் செய்தவர்கள் .!

நம்முடைய எதிர்கால சாதனையாளர்களை உறுவாக்க தயக்கம் காண்பிப்பது ஏன் என்பது தெரியவில்லை !கடன் உதவி ,சந்தா வசூல் போன்றவற்றில் ஈடுபாடுடன் செயல்படும் அமைப்புகள் ,கல்விக்கு என்று நல உதவிகளை புரிந்து அவர்களை உற்சாகப்படுத்தினாள் ,அறியாமை அவிழ்ந்துப்போகும் ,கள்ளாமை இல்லாமையாகும் !திறன் வள்ளமைப்பெரும் .

விழுப்புரம் மாவட்டத்திளையே முதன்மை கிராமமக்க திகழும் என்பது திண்ணம் !அதற்கு அமைப்புகளாகிய நாம் அவர்களின் வளர்ச்சிக்கு எந்த அளவில் ஈடுபாட்டை கொண்டுள்ளோம் .பயிர் செழித்து வளர நீர் பாசனை மட்டும் போதாது ,உரங்களும் தேவை அதுமட்டுமின்றி எந்த இடையூரின்றி செழிப்பாக வளர பூச்சிக்கொல்லி மருந்தும் அதில் காட்டும் அக்கறையும் பயிர் வளர்ந்து ,அறுவடை ஆகும் வரை அக்கறை செலுத்தினால் மட்டுமே நல்ல விதைகளை கொண்டு வளரும் பயிர் .!

ஊர் வளர்ச்சி பெற நினைக்கும் நல்ல மனமுடையோர் இதுப்போன்ற நல்ல சேவைகளை உடனிருந்து கைகோர்த்து செயல்படுவர் ,தன்னலம் கருதாது ,சுயநலமற்று பிறர்நலம் நாடி முன்வருவர் .
ஊர் வளர்ச்சியில் விழுதாகவும் தாங்குவர் .!

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்