கூனிமேடு :தலைவரின் முயற்சியால் உற்சாகத்தில் இருக்கும் திடீர் நகர் வாசிகள் !


அண்மையில் ஒரு வீட்டிற்கு ஒரு விளக்கு என்கின்ற மின்சாரப்போக்கை மறைந்து விளக்கு நிறைந்த வீடுகளை மாற புதிய யுக்திகள் கூனிமேடு தலைவர் சாபுதீன் கையாண்டுள்ளார் .அவர் எடுத்துக்கொண்ட முயற்சியில் நேற்று அரசாங்க மின்சார அதிகாரிகளால் சோதனையிடப்பட்டு மேலும் இரண்டு மாதங்களில் புதிய இயந்திரம் ட்ரான்ஸ்பார்மர் இயந்திரத்தை அமைக்கும் பணி நடைப்பெறும் எனவும் இதனால் திடீர் நகர் பகுதிக்கு மட்டுமின்றி ,கூனிமேடு குப்பம் வாசிகளுக்கும்இதன் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிகிறது .

நம்முடைய தலைவரின் முயற்சியால் ஊர்  காணும் வளர்ச்சியில் அவரின் பங்கு மிகைத்து தெரிகிறது . இது வரையில் நம்முடைய ஊருக்குஎத்தனையோ தலைவர்கள் வந்து சென்றுள்ள நிலையில் மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் தேர்வு செய்யப்பட தலைவர் சாபுதீன் ஆவார் .எவரும் ஊர் நலனில் அக்கறையற்று தங்கள் நலனில் அக்கறைககொண்டு நடந்துக்கொண்டவர்கள் மத்தியில் ...

ஏனோ தன்னுடைய சுயனலனாக எதுவும் கருதாமல் ,பொது நலத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது வியப்பாக உள்ளது .இந்த கூனிமேடு மக்கள் இதுவரை எவர் மீதும் இவர் இதை செய்தார்கள் என ஒப்புக்கொள்ளாமல் குறை கூறி வந்திருந்த நிலையில் தற்போது ...ஏதோ அவரால் முடிந்த அளவில் முயற்சிக்கிறார் என கூறும் அளவில் அவருடைய முன்னேற்றம் உயர்ந்திருக்கிறது .

அவர் செய்த சமீப கால சாதனைகளில் ,தானே புயலால் பாதிக்கப்பட்டு துண்டித்த மின் கம்பங்களை இரவு பகலின்றி பாராமல் தொய்வின்றி மின்சார ஊழியர்களுடன் உடனிருந்து சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்தார் .இதற்கு முன்பாக திடீர் நகர் வாசிகளுக்கு வீட்டுக்கு ஒரு விளக்கு முறை ஏற்படுத்தி தந்தார் .தெருவில் இருக்கும் அனைத்து கம்பங்களையும் மின் விளக்கு மாற்றி சீர் செய்து புதிய விளக்குகளை பொருத்தினார் .தெருத்தோறும் சிமன்ட்டு  சாலைப்பணியை அமைத்தார் .அங்காங்கே குடி தண்ணீர் பிரச்சனைக்கு முற்று வைக்கும் விதத்தில் குழாய் அமைத்ததுடன் ,சில இடங்களில் இருந்து சீராக தண்ணீர் செல்ல தண்ணீர் தேக்கு தொட்டிகளும் ,குழாய் களும் அமைத்தார் .

மேலும் , திடீர் நகரில் ஒரு விளக்கு என்பதை மாற்றி அவர் கொண்ட தீவிர முயற்சியின் காரணத்தினால் தற்போது மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமடையும் நிலையில் உள்ளது .

இருப்பினும் ,மேலும் கூனிமேட்டில் ஒரே ஒரு குறை இருந்துக்கொண்டே உள்ளது .பட்ட வாசிகளுக்கு பசுமை வீடு திட்டம் அம்மா அறிவித்திருப்பது ,அந்த திட்டம் ஏழை எளியோருக்கும் எந்த பலனும் அடைய முடியாது என்பது உறுதி .அதற்காக நம்முடைய தலைவர் ஊர் வளர்ச்சியில் பெருதுவக்க பாடு படும் இவர் இந்த விசயத்திலும் தன்னுடைய முழு பங்களித்து ஏழை எளியோரின் வாழ்வில் துயர் துடைக்க முன் வரவேண்டும் .பட்டா அவசியம் என்பதை மாற்றி அவர்கள் இருக்கும் பொறம்போக்கு நிலத்தில் பட்டா வசிதியையும் ,பசுமை வீடு திட்டத்தால் வீடு வாங்கி தர முயற்சிகளை கையாள வேண்டும் .

தற்போது நடக்கும் விதமும் செயல் பாடும் அருமையாக இருக்கிறது சொல்லும் அளவில் இருக்கும் தலைவர் ஊர் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறார் மேலும் சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வளித்து வரும் நிலையில் ,நிலவில் இருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்து தந்தால் இன்னும் அருமையாக இருக்கும் . 

 

  

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்