மனிதன் கொள்ளும் பேராசை மார்க்க சிற்றுரை !

மனிதன் பிறப்பில் இருந்து இறக்கும் வரை அனைத்து வற்றிலும் ஆசைக் கொள்கிறான் ,அளவுக்கு அதிகமாக தேவைக்கு மிஞ்சிய அளவில் விரும்புகிறான் . அவனுடைய ஆசைக்கு முடிவில்லை ,எல்லையில்லை
அது அளவு கடந்து சென்றுக்கொண்டுள்ளது .ஆசைக்கு அதிகமாக விரும்ப விரும்ப பேராசையாகி தவறான வழிகேட்டிபால் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான் .அறிந்தும் தவறு செய்கிறான் அறியாமலும் தவறு செய்பவனாக இருக்கிறான் .



எது சரி ? எது தவறு என்று அவன் உணருவதில்லை .பெற்ற தாயை .மறுக்கிறான் ,உறவை தவிர்த்து விடுகறான் ,பணம் என்ற கொடிய வியாதியில் சிக்கி குணமற்று ,எதையும் அனுபவிக்காமல் ,தனிப்பட்ட மனிதனாக மரணித்துஉவிடுகிறான்..அவன் பேராசைகொள்ளும் அப்பணம் மரணத்தை வெல்லமுடியவில்லை .அவன் பேராசைக்கொண்ட பொருட்களை முழுமையாக அனுபவிக்க முடியாதவனாய் இவ்வுலகத்தைவிட்டு பிரிந்து விடுகிறான் .ஆகவே சகோதரர்களே !மனிதன் உணர வேண்டு இஸ்லாம் என்ற கூட்டில் இணைத்து தன்னை முழுமைபடுத்தி அபிவிருப்தியை பெற வேண்டும்.


அவ்வாறு பெருபவர்கள் கொடிய நரகத்தை விலகி சொர்கத்தின் பால் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்,அதனால் முதலில் நாம் இஸ்லாத்தின் பார்வையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டோமேயானால் தீய வழி கேட்டிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் .


நமக்குள் நிலவி கொண்டிருக்கும் ஆசை என்ற பேராசை கொடிய நோயிலிருந்து தப்பித்து விடலாம்.சொந்தம் ,பந்தம் ,பாசம் ,உறவு ,ஏழை ,தர்மம் ,உதவிப்போன்றவற்றை உணர நம்மை நல்ல ஈமான் கொண்டவர்களாக நம்மை மாற்றிகொள்வோமே ஆனால் நிச்சயம் வழிகேட்டிலிருந்து விலகி நன்மையை தேட அது வழி வகுக்கும்.பேராசை என்பது இப்லீசேயாகும் நல் வழியை கெடுத்து தீய வழிகேட்டிற்கு மாற்றிவிடும் .அதில் தள்ளும் பிசாசும் ,மிருகமும் அதுவே ஆகும் .




பேராசை ஏன்றால் என்ன?
நம்மீது உள்ள அனைத்துக் கடமைகளையும் பின் தள்ளிவிட்டு, செல்வம் ஒன்று மட்டும் தான் நோக்கம் என்று சென்றால் அது தான் போராசை.

எதிர் காலத்தைக் கவனிக்காமல், இறைவனை வணங்காமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பிறர் நலம் நாடாமல், ஏழைக்கு தர்மம் செய்யாமல் கடமைகளை விட்டு செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அப்போது நம் அளவுகடந்த போராசையை கொள்கிறோம்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதியவரின் மனம்கூட இரண்டு விடயத்திற்குபேராசைக் கொள்வார்கள் . இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

இவ்விரண்டை மனிதனாகிய முதியோருக்கும் அளவுக்கடந்த விருபத்தை அவன்மனதிலே ஊடுருவிக் கொண்டிருக்கும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)

நூல்: புகாரி 6420, 6421

சுலைமான் நபிக்கு அதிகமாக அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். ஆனால் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் அவர் விலகவில்லை.

பணத்தை அதிகமாக வைத்துக் கொள்ளலாம். இஸ்லாம் எதைச் சொல்கிறதோ அதைச் செய்யாமல் செல்வத்தைத் தேடக் கூடாது.

பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல், குழந்தையை நமது பார்வையில் வளர்க்காமல் வெளிநாட்டுக்குச் செல்வது கூடப் பேராசை தான்.

பொருளாதாரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தேடலாம். ஆனால்  வணக்கத்தை விட, மனைவியை விட, குழந்தையை விட மேலானது என்று நினைக்கக் கூடாது.

உள்ளத்தைப் பக்குவப்படுத்துதல்

மனிதனின் உள்ளம் எப்படிப்பட்டது என்றால் எந்த பொருளாகயிருந்தாலும் இது என்னுடையது, இது என்னுடையது என்று சொல்கிறான். ஆனால் உலகத்தில் பல இடங்களில் அவனுக்குச் சொத்து இருக்கும். அதனை அவன் பயன்படுத்தியிருக்க மாட்டான். இந்தச் சொத்தை வாங்குவதற்கு இரவும் பகலும் கக்டப்பட்டிருப்பான். இவன் இரவு பகலும் கக்டப்பட்டிருந்தாலும் இந்தச் செல்வம் இவனுக்குச் சொந்தம் கிடையாது. இவன் எதனை பயன்படுத்தினானோ அந்த பொருள்தான் இவனுக்கு சொந்ததம். மற்றவை கிடையாது.

ஒரு மனிதனிடத்தில் கோடிக்கணக்கில் பணமும் பெரிய வீடும் காரும்  இருக்கிறது என்றால் இவை அனைத்தும் இவனுக்கு உரியதா? என்று பார்த்தால் கிடையாது. இவன் எதை உண்டானோ, இன்னும் எதை உடுத்தினானோ, இன்னும் எதை தர்மம் செய்தானோ அவை தான் ஒரு மனிதனின் செல்வம். வேறு எதுவும் இவனுக்கு சொந்தம் கிடையாது.
(தொடரும் )....
உரை :சகோதரர் . சார்புதீன் கூனிமேடு, உரையாற்றிய இடம் : இஸ்திக்ளால்.



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்