அயல் நாடுகளில் அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்படுமானால் அதை எப்படி மேற்கொள்வது சிறியக்குறிப்பு .

அயல் நாடுகளில்[குவைத்தில் }அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்படுமானால் அதை (எதிர் )மேற்கொள்வதுஎப்படி?.சிறியக்குறிப்பு .

இதில் இரண்டு வகைப்படும் விபத்து மற்றும் வழக்கு நிறைந்த இதர சம்பவம்ஒன்று. ''இரண்டு"நோய்வாய்ப்பட்டு இறப்பு .

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்து தகவல் கிடைத்த உறவினர்கள் செய்ய வேண்டியது .பின்பற்றவேண்டியது கீழேபுள்ளிகளிட்டு குறிப்பிட்ட எண்கள் .(13,14 ,1/1 , 2 ,16,17,6,7,8,9.10.11)

  • 1.ஒருவர் தவறிவிட்டார் அதற்கு தகுதியானவர் உறவினர் ,நண்பர் ,எவாராவது 2.ஒருவர் இறந்தவருக்கு பொறுப்பேற்க முதலில்முன் வரவேண்டும் .
  • 3. தீர்ப்பு நிறை வேற்றல் அலுவலகம் (verdict execution )அரபு மொழியில் (அதல் ஜனாஹியா )என்றழைப்பர். அங்குசென்று இறந்தவருக்கான உடல் பிரேத கையோகப்படுத்தி உடல்உறுதி அடையாள நகல் ஒன்றை வழங்குவார்கள் அந்த  நகலை முதலில்பெற வேண்டும் .
  • 4.அதற்கு பிறகு அவர் வசிக்கும் அல்லது சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் பகுதியில் (வழக்கு பதிவு செய்யப்பட )உட்பட்ட காவல் நிலையத்தில் சென்று எடுக்கப்பட்ட உடல் அடையாள உறுதி நகலை சமர்பிக்க வேண்டும்.
  • 5.இதன் பினால் அந்த காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நகலுடன் தகவல் சேகரிப்பு (இறப்பு பதிவு நகலை) இணைத்துகொடுப்பார் .அதனைக்கொண்டு 
  • 6. இறந்தவரை கையொகப்படுத்த பொறுப்பாளர் ஒருவர் நியமனம் செய்து உடன் அதைக்கொண்டு இந்திய தூதரகத்தில் சமர்பிக்க வேண்டும் .
  • 7.அவர்கள் அதனைப்பெற்று அதனுடன் 1 .இறப்பு உறுதி நகல் 2 . தூதரக உறுதி சான்று இரண்டு தருவார்கள் .அதை ஆங்கிலத்திலிருந்து அரபு மொழியில் மொழி பெயர்பு செய்ய வேண்டும் .
  • 8.அதை கொண்டு இறந்தவருக்கான இறுதி உறுதி ஆய்வு மையம் (மைதான் ஹவல்லி) அமைந்துள்ள அலுவலகத்தில் தூதரகத்தினால் பெறப்பட்ட இரு நகலையும் சமர்பிக்க வேண்டும் .அவர்கள் அதனை பெறப்பட்டு அதனுடன்உறுதிசெய்யப்பட உண்மையான இறப்பு சான்றிதழ் வழங்குவார்கள்( எந்த நாட்டுடைய குடியுரி(மை பெற்றாரோ அந்த நாட்டுக்கு செல்லக்கூடிய உண்மையான உறுதி செய்யப்பட இறப்பு சான்றிதழாகும் .
  • 9.அந்த இரு இறப்பு சான்றிதழையும் 1 ஆங்கிலத்தில் உள்ளவை அரபு மொழியிலயும் 2 அரபு மொழியில் உள்ளவை ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்புசெய்து கொள்ள வேண்டும்.
  • 10.அதனை வெளிநாடு விவகாரத்துறை (FOREIGN AFFAIRS )அவர்களிடத்தில் முத்திரை வாங்க வேண்டும் .  
  • 11.விவாகாரத்துறையினரால் முத்திரையிடப்பட்ட நகலை தூதகரத்தில் சமர்பித்து தூதரக முத்திரையை பெற வேண்டும்.  
  • 12.முத்திரை பெறப்பட்டப்பிறகு சரக்கு சேவை நிறுவனத்தில் சடலம் மற்றும் பொறுப்பு தாரர் உட்பட இருவருக்கு விமான ரசீதைபெற வேண்டும் 
  • 13.அதன் பின்பு சடலம் மீட்பதற்கு மருத்துவமனை சடலம் பிரேத மருத்துவரிடம் ஒப்புதல் நியமனம் வாங்க வேண்டும் .
  • 14.அவரால் (எம்புர்நிங்) {SAFE  CERTIFICATE}வாங்கியப்பிறகு 1.தூதரகத்திற்கு பாதுகாப்பு  சான்றிதழ் ஆங்கிலத்தில் மொழி பெர்யர்ப்பு செய்யப்பட வேண்டும். 2 தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகத்திற்கு சடலத்தை மாற்றம் செய்யக்கோரி சான்றிதழ் வேண்டுகோள் நகல் .குறிப்பிட்ட இடத்தில் சமர்பிக்க வேண்டும்.
  • 15.மருத்துவரால் பெறப்பட்ட பாதுகாவல் நகலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து தூதரகத்தில் ஒப்புதல் பெறவேண்டும் (அப்பைன்மென்ட்)
  • 16.மாற்றம் செய்யப்பட சடலத்தை தூதரகத்தால் சோதனை செய்யப்பட்டு அடையாளம் கண்டு இறுதியில் சவப்பெட்டியில் வைத்து அடித்தப்பின் 
  • 17.நாம் செய்த அத்துணை வேலைபாடுகளுடைய நகல்களை ,நகல் செய்யப்பட்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக மருத்துவ அலுவலகத்தில் சமர்பித்தால் அவர்கள் விரைவு ஊர்தி பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிடுவார்கள் சடலம் குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தில் தானாக விரைவு ஊர்தி சேவை ஏற்றுமதி செய்து தரும் .
(இதில் இடம்பெற்றிருக்கும் இறப்பு தகவல் விளக்கம் தேவை எனும் பட்சத்தில் இந்த வலைப்பதிவு ஆசிரியர் அல்லது நிர்வாகத்திற்கு தொடர்புக்கொண்டு விளக்கத்தை கேட்டறிந்து கொள்ளலாம் .அசம்பாவிதம் நேர்ந்திட்டால் தங்களுக்கு எதுவும் அறியாத பட்சத்தில் சமூக ஆர்வலர்கள் ,அமைப்புகள் அவர்களிடம் தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க முன்வருவார்கள் .கைப்பேசி எண்கள் :- 99325462 ஆசிரியர்)

ஆங்கிலத்தில் தேவையான சான்றிதழ் குறிப்பு மற்றும் விபரம் :
  1. Adal janahiya paper submit to 
  2. police clearance paper submit to 
  3. embassy paper no: 2 (1. English to Arabic 2. Arabic to English )
  4. dead certificate Arabic translation .
  5. English + Arabic translation paper submit to kuwait foreign affair seal .
  6. submit to embassy seal .
  7. cargo airway bill .
  8. hospital chief   doctor appointment
  9. em-burn certificate (safe cert)1. for embassy clearance  2. for body transfer to mortuary .
  10. for embassy from the Arabic transfer to English {embassy stuff appointment}  .
  11. paper all xerox for ambulance.

  • இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்நாஸ்ஹெல்ப் லைன் தலைவர் சகோதரர் சாதிக் அவர்களை (55230290)தொடர்புக்கொண்டு விளக்கத்தை கேட்டு அறிந்துக்கொள்ளலாம் .
  • அல்லது இதுப்போன்ற துயர சம்பவம் நடைபெற்று என்ன செய்ய வேண்டும் அறியாமல் இருக்கும் நண்பர்களுக்கு வழி காட்ட சகோதர் சாதிக் அவர்களும் ,கூனிமேடுகுரல் நிர்வாகம் மற்றும் T.N.T.J.அமைப்பு உதவி செய்ய காத்திருக்கிறது .
  • சடலம் மீட்பு மற்றும் ஆலோசைனைக்கு T.N.T.J அமைப்பின் மருத்துவ அணி செயலர் சகோதரர் சித்திக் அவர்களை தொர்புக்கொள்ளவும் 24 மணி நேரம் சேவை செய்ய காத்திருப்பதாக தகவலை தெரிவித்துள்ளார் . கைப்பேசி எண் : 55234306 .
  • தகவல் :சகோதரர். சாதிக் . தொகுப்பு ஆசிரியர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்