ஐம்பது நாட்களின் சிறப்பு பார்வை சிறியத் தொகுப்பு !

31 / 12 /2011 அன்று அதிகாலை சரியாக 5 : 30 மணி அளவில் அதி வேக புயல் காற்றால் நம் ஊரில் இருந்த மரங்கள் குடிசைகள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தது இதனால் எப்போதும் வெளிச்சத்தோடு காணப்படும் கூனிமேடு இரண்டு நாட்கள் இருட்டில் மூழ்கியது .

அந்த வேக புயல் காற்றிற்கு தாநேப்புயல் பெயர் சூட்டப்பட்டது .

அழ நிஸ்வான் பெண்கள் பாட சாலை மேலே அமைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை முறிந்து அந்த பாட சாலை கோபரத்தில் சாய்ந்தது . அது சாய்ந்ததால் விளம்பரபலகை சேதமடைந்தது இல்லாமல் கோபரமும் கட்டிடமும் சேதமடைந்தது . இதனால் பள்ளிவாசல் நிர்வாகம் இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் .இன்னும் அப்புறப் படுத்தாமல் சாய்ந்த நிலையில் இருப்பது வேதனைக்குரியது .

அந்த பலகை சாய்ந்ததில் ஒன்றரை இலட்சம் ரூபாய் சேதம் கூடும் நினைத்து பொதுமக்கள் வருத்தம் . பல இலட்சம் ரூபாய் கொட்டி கட்டிய கட்டிடம் சேதம் அடைந்தது சிறு துளியும் கவலைக்கொள்ளவில்லை நடவடிக்கை எடுக்காமல் அப்படியே இருக்கிறது .

செயளிழுந்து பழுதடைந்திருந்த இருந்த கூனிமேடு ஊராட்சி தற்போது தேர்தலுக்கு பிறகு சிறப்பான பனிச் செயல் .

பல ஊர்களுக்கு பல நாட்களாக கிடைத்த மின் தட்டுப்பாடு தலைவரின் முயற்ச்சியால் முதன் முதலாக கூனிமேடிற்கு கிடைத்தது  புதுவைக்கு நிகராகும் . புதுவையைத் தவிர மற்ற ஊர்களில் ஒரு மாதம் கடந்து மின்சாரம் வராதது குறிப்பிடத்தக்கது .

கூனிமேடு கிராமத்தின் உட்பட்ட கிராமத்திற்கு மின்சாரம் இல்லாததால் மின்சாரம் கிடைக்கும் வரையில் தண்ணீர் வசதி கிடைக்க நம்முடைய தலைவர் ராட்சத ஜெநெரேட்டருக்காக விழுப்புரம் மட்டும் திண்டிவனம் போன்ற ஊர்களில் அலைந்து உடனே தண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்தது வரவேற்க்கதக்கது .

கூனிமேடு காலனி வளைவில் நடந்த சாலை விபத்தில் செய்யான்குப்பத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக இறந்து கடந்தார் .ஆகவே அவரை ஒப்படைக்க அந்த ஊர் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தெரிவிக்கப்பட்டும் வராததால் நம்முடைய தலைவர் அதை அவசர ஊர்தியை வரவழைத்து தன்னுடைய சார்பாக ஒரு சிறியத் தொகையை  தந்து அதை மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார் .அனுப்பினால் மட்டுமே அந்த குடும்பத்திற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கும் கருதி அனுப்பியது மனித நேய அடிப்படையில் வியக்கத்தக்கதாகும் .

முதன் முதலாக புயலால் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரணம் தொகையை வழங்கப்பட்டது ,இதில் சிறிது தொய்வும் சங்கடமும் ஏற்ப்பட முதலில் அரசு கூனிமேட்டிர்க்காக வழங்கியது 432 வீடுகளுக்கு மட்டும் இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் அரசு பிரதிநிதியை தலைவர் கண்டு மேலும் நம்முடைய ஊருக்கு நிதி உதவி கிடைக்க ஏற்ப்பாடு செய்தார் .

கூனிமேடு மக்கள் குரல் சார்பாக தமிழ் நாடு தவ்ஹித் மற்றும் k .i .s .k சகோதரர்கள் இணைந்து அஞ்சல் நிலையத் தெருவில் வசிக்கும் வித்யா என்கின்ற சகோதரிக்கு கல்வி உதவி வழங்கியது . அதை தலைவர் முன்னிலையிலும் விழுப்புர மாவட்ட ஒன்றிய செயலர் சகோதரர் ஜலில் அவர்களின் முன்னிலையிலும் வழங்கப்பட்டது .

சகோதரர் அசரத் சாதிக் அவர்களின் தலைமையில் இளைய சகோதரர்களுடன் பிரமாண்ட பையான் ஒன்றை ஏற்ப்பாடு செய்தனர் .அந்த பையானை சொர்ப்போழிவை ஆற்ற வேலூர் மற்றும் வேறு ஊர்களில் நல்ல பேச்சாளர்களை வரவழைத்து பையான் நடத்தியது மிகவும் அருமை .அந்த பையான் சொற்ப்பொழிவு மதியம் இரண்டு முதல் இரவு ஒன்பது வரை நீண்டது அருமை . இந்த பையானை கேட்டறிய நம்மூர் தாய்மார்கள் அலை அலையாய் திரண்டது வியப்புக்குரியது .

அந்த பையானை ஆண்களுக்கு படம் பிடிக்க சென்ற ஆசிரியருக்கும் சில வாலிபருக்கும் ஏற்பட்ட தகராறில் .ஆசிரியருக்கு கை கால் துண்டித்து விடுவதாக அச்சுரத்தல் அதையும் மீறி புகைப்படம் எடுத்து விடியும் முன் செய்திகள் வெளியிட்டது குவைத்திற்கு கிடைத்த பெருமை .

கபர்ஸ்தான் விரைந்து விரிவாக்கம் செய்துமுடிக்க வேண்டும் சகோதரர் ஜலில் அவர்கள் வலியுறுத்தல் அந்த சுவர் அமைக்கும் திறமை குவைத்தை சார்ந்த இளம் வாலிபர்களால் மட்டுமே ஊழலற்று செய்ய முடியும் என தகவல் .

கூனிமேடு பஞ்சாயத் போர்டு பிர்தௌஸ் நகர் செல்லும் வழியில் அரசு போக்கு வரத்தும் சிறிய நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்தில் ஒருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மற்றொருவரும் பரிதாபமாக உயிர் இழுன்தனர் .

பேருந்தில் செல்லும் நம்மூர் பெண்கள் நடத்துநரிடமும் அவரின் உதவியாலரிடமும் சகசமாக பழகுவது வேதனைக்குரிய விழையமாகும் .அதுவும் புர்கா உடை அணிந்து முஸ்லிம்கள் என்று காண்பித்து இஸ்லாம் சமுதாயத்தை கேவலப்படுத்துவது அரவருப்புக்குரியதாகும் .

பஞ்சாயத் போர்டு ஆசிரியர் வீட்டு எதிரில் வாடகை வீட்டில் வசிக்கும் சகோதரர் இப்ராகிம் (எ ) இப்பு அவரின் தந்தையார் உடல் நலம் குறைவாக காலமானார் .

கூனிமேடு பள்ளிவாசல் நிர்வாக முத்தவல்லி அப்துல் சத்தார் அவரின் பேத்தியும் சகோதரி உஜாளி சகோதரர் அலி அவரின் மகளின் திருமணம் மிகவும் உற்சாகமாக நடைப்பெற்றது .அத் திருமணத்தில் பேண்டு முழங்க பையான் நடிப்பெற்றது வேடிக்கையாக இருந்தது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்