சீரழியும் கலாசாரம்!கழிக்கும் கண்களுக்காகும் வரபிரசாதம்!
 
 

பஞ்சமின்றி பணமிருந்தால்..
வஞ்சகமின்றி தயங்காது
ரூபாய் நோட்டினால்
அங்கத்தை மூடிக்கொள்ளுங்கள்!

... தோழிகளே..!

உங்கள் மானத்தை விற்க
விளங்குகளின் சந்தையல்ல
பிடித்து பார்ப்பதற்கும்!-கண்டு
இரசித்து செல்வதற்கும்.!

ஒட்டுப்போட்ட உடைகள்
ஏழ்மையின் மானத்தை
மூடச் செய்யும் -அறிந்திடும்
வறுமையின் பெருமை!

வளர்ந்த நாகரீகம்
சிறுகைகுட்டையானது!
உடல் அங்கத்தை
மூடச் செய்யாது !

தடையின்றி தாவும்
பிறரின் கண்கள்
வசியமின்றி இழுக்கும்
தேடல் வண்டுகளின் இரசனை!

கவர்ந்திழுக்க செய்யும்
துண்டாடைகள் விலைப்போகும்.
கைப்பேசிக்கும்,கணினிக்கும்!
இரசிக்கும் புகைப்படமாய்..!

நம்முயர் பண்பாடு
சீரழியூம் விளம்பரங்களில்- நிகர்
விபச்சாரமாய் காட்டும்
மானபங்கம் கலாச்சாரம் ...
அனைவருக்கும் ஆகும்
அதுவோர் வரபிரசாதம்!

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்