கடவுள் அறியவா? கருணாநிதி அறியவா?

First Published : 26 Oct 2011 01:41:21 AM IST



மேயராக சைதை துரைசாமி பதவியேற்றபோது "கடவுள் அறிய' என முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கைகாட்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதன் பிறகு, உறுப்பினர்களாகப் பதவியேற்ற அனைவரும் கடவுள் அறிய என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 2-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சி.செல்வம் "காவல் தெய்வம் அம்மா' என்று உறுதிமொழி எடுத்தார். அப்போது முதல்வர் குறுக்கிட்டு "இப்படி உறுதிமொழி எடுக்கக்கூடாது. கடவுள் அறிய அல்லது உளமார என்று கூறிதான் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவு கூறினார். இதன்பின் மீண்டும் உறுப்பினர் சி.செல்வம் "கடவுள் அறிய' என உறுதிமொழி எடுத்துக் கொண்
டார்.
இதன்பின் 90-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் செ.ஆன்ட்ரூஸ் உறுதிமொழி எடுக்கும்போது "கலைஞர் அறிய' என்று உறுதிமொழி எடுத்தார். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஆணையர் கார்த்திகேயன் மீண்டும் அவரை உறுதிமொழி எடுக்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து 91-வது வார்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பி.வி.தமிழ்ச்செல்வன் உறுதிமொழி எடுக்கும்போது "அன்னை சோனியா காந்தி அறிய' என்று உறுதிமொழி எடுத்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மீண்டும் உறுதிமொழி எடுத்தார்.
இதன் பின் அ.தி.மு.க. பெண் உறுப்பினர் முதல்வர் ஜெயலலிதா அறிய என்று உறுதிமொழி எடுத்தார். அப்போது ஆணையர் குறுக்கிட்டு, "நான் தேர்தல் அதிகாரி. முறையாக உறுதிமொழி ஏற்காவிட்டால் நீங்கள் பதவியேற்றதே செல்லாது என்று என்னால் சொல்ல முடியும்' என்றார். இதன்பிறகு உறுப்பினர்கள் முறையாக உறுதிமொழி ஏற்றனர்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்