குவைத்தில் பித்ரா வசூல் செய்யும் K.M.J.K அமைப்புக்கு கூனிமேடு குரல் ஆதரவு .!

ரமதான் மாதத்தில் வசூல் செய்யும் பணத்தில் எப்படி வழங்கலாம் ?பணமா?இல்லை பொருளா?எது சிறந்தது என்று ஒப்பிட்டு பார்த்தும் மார்க்க அறிஞர்களின் 
சொல்லும் ,அறிவுரையும் முன்னிறுத்தி ,நேர்மையாக வழங்கப்பட்டுள்ளது .

இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமாக தேவையாக கருதுவது பணமே !மக்களிடத்தில் பொருளுக்கு ஆதரவு இல்லை இருப்பினும் ஏன் இந்த ஆதரவு என்கின்ற கோணத்தில் ஆய்வுக் கொள்ளுகையில் எங்களுக்கு கிடைத்த ஓர் மறுக்க முடியாத உண்மைத் தகவல் .

இதைப்பற்றி அறிய முற்பட்டப்போது பல ஊர் ஜமாஅத் தார்களின் வழங்கிய ஒப்புதலும் ,அவர்களின் உரையை ஏற்று இங்கு பதிவு செய்திருக்கிறேன் .

இன்றைய கால கட்டத்திற்கு உகந்தது பணம்தான் ஆனால் அந்த பணத்தை வைத்து மக்கள் தங்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவே நினைக்கிறார்கள் .ரமதான் அன்று சீருடை பொருட்களை வாங்கி அன்றைய நாள் 
மிகவும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்கின்ற எண்ணம் எண்ணம்  மிகுந்து காணப்படவில்லை .

பணம் கிடைத்தால் மருந்து செலவுக்காகும் ,வாங்கிய கடனை திருப்பி தரலாம் ,வட்டி கட்ட வேண்டும் ,மேலும் சில முக்கிய தகவல்களில் பணம் தந்தாள் நாங்கள் எங்கே செலவு செய்ய முடிகிறது வீட்டுக்காரன் பிடிங்கிட்டு போயிடுறான் சொல்கிற வார்த்தையும் கேட்க முடிகிறது .அப்படியிருக்க நாம் என்ன எண்ணத்தில் தரவேண்டும் என்று நினைக்கிறோமோ ?அந்த எண்ணம் நிறைவுப்பெருகிறது .ஆனால் நாம் தரும் பணம் தவறான செலவுக்கே உபயோகம் ஆவது உணமைஎன தெளிவாகிருக்கிறது .ஆகையால் பணத்தை விட பொருளே சிறந்தது .கொடுக்கும் ஒருசிலப் பொருளாவது நாக்கு ருசிப்பார்க்கும் என்பது நிதர்சனம் ,!

சமீப காலத்தில் குவைத்  கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் குவைத்தில் இந்த பித்ரா  வசூலைப்பற்றி ஆலோசனை  நடத்தியது இதில் பெருவாரியான மக்கள் பணம் தர வேண்டும் என்கின்ற கோரிக்கை முன் வைத்ததால் பொருளாக தர வேண்டும் வலியுறுத்திய இந்த இணையத்தின் சொல் எடுபடவில்லை சொற்ப நபர்களே இதற்காக ஆதரவு அளித்ததால் ,மிகுதியான மக்களின் விருப்பம் போல பணம் வழங்கப்படும் அறிவித்தது அந்த நிர்வாகம் ,அதற்கு முழு ஆதரவும் கூனிமேடு குரல் இணையம் ஆதரவு வழங்கியது இதனால் சொல்லும் ,வாக்கும் மனிதனுக்கு முக்கியம் என்பதால் தற்போது விலக  முடியாது .

அவர்களுக்கு ஆதரவாக  இருப்பினும் இயன்ற  அளவு பொருளை வழங்க வேண்டும் என்பதாக அந்த அமைப்பை வலியுறுத்த நினைக்கிறோம் .மேலும் காலம் இருக்கும் காரணத்தால் இதைப்பற்றி பொறுமையாக  பேசலாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .

பொருளாக தந்தால் ஒன்றிணைந்து செயல்படுவதாக கூறும் அமைப்பின் செயலும் தவறில்லை போதிலும் அவர்களுக்கு எதிராக செயல்படுவது ஏற்றுக் கொள்ளப்படாது .இருந்தாலும் அவர்களின் பக்கமே நியாயம் உள்ளது .

இந்த வருடம் இக்கருத்து முன்னிறுத்தி கோரிக்கை வைக்க முடியாவிட்டாலும் 
வர இருக்கின்ற வருடங்களில் கோரிக்கையை வைக்கப்படும் .

இந்தக்கருத்து எவருக்கும் மனவருத்தம் தரக்கூடாது இருந்தாலும் உண்மையை எழுதுவதே தர்மமாகும் . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்