குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்ற த.மு.மு.க/ம.ம.க. வின் விழிப்புணர்வு எழுச்சிக்கூட்டம்


ஜனாப் .ஜவாஹிருல்லாஹ் மற்றும் அசலம் பாஷா .
நன்றி படம் உதவி:-தமுமுக இணையதளம் .

குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  நடைப்பெற்ற த.மு.மு.க/ம.ம.க. வின் விழிப்புணர்வு எழுச்சிக்கூட்டம் நடைப்பெற்றது .இக்கூட்டத்திற்காக தாய்மண்ணிலிருந்து குவைத் மண்ணிற்கு வருகைப்புரிந்த பேராசிரியர் ஜனாப் .ஜவாஹிருல்லாஹ் அவர்களும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோ.ஜனாப் .அசலம் பாஷா அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினர் .அதற்கு முன்பாக நூல் வெளியிட்டு விழாவாக காட்சியளித்த இந்த கூட்டம் .சகோ .ஜனாப் தாஜ்தீன் அவர்களால் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட இறைத் தூதரின் தலைமைத்துவ முன்மாதரி  நூலை அரபு நூலான சுலைமான் இபுனு அவாத் கைமான்  அவர்களின் தொகுப்பை தனது  ஆக்கமாக பிரசிவித்தார் .

அதன் பிறகு மக்ரிப் தொழுகைக்கு பின்னால் நடைப்பெற்ற எழுச்சிக்கூட்டத்தை வழி நடத்திய குவைத் த .மு.மு.க/ம.ம.க தொண்டர்கள் வேண்டுதலின் பேரில் அரசியல் சூழல் குறித்து கழகத்தின் பங்கைப்பற்றி விளக்கிட ஆரம்பித்து கட்சி களத்தில் இறங்கி சகித்த பிரச்சனையும் தங்களின் சுயத் தீர்வும் கூற ..இன்றைய கல்வியில் இஸ்லாமியர்களின் பின்னடைவு பற்றியும் ,கோட்டாக்கள் காலியாக கொறட்டை விடுவதாக கூறி ரசனைக் கலந்த வசிய ரசனைப்பேச்சு செவிகளுக்கு ஈர்க்க சென்றது .அவர் பேச்சை இதுதான் முதன் முதலாக கேட்கும் வாய்ப்பை செவிகள் பெற்றாலும் இனிக்கும் கீதமாகவும் அமைந்தது .அவர் கொடுத்த நேரத்தோடு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டாலும்
அளப்பை ஏற்படுத்தாமல் மிகைப்பைத்தந்து உண்மைக் கதையை எதார்த்தமாக முடித்துக்கொண்டார் .

இவரைத்தொடர்ந்து பேரா.ஜவாஹிருல்லாஹ் எழுச்சிமிகு பேருரையை வழங்கினார் .ஒளிப்பெருக்கியே நடுங்கியது .இவரா அவர் நன்றாக பேசுகிறாரே கூறிடும் பலப்பேர் மத்தியில் முக்கிய சில நிகழ்வுகளை அனைவர் மத்தியில் எடுத்து வைத்தது மட்டுமின்றி ..!இன்றைய அரசியல் சூழலுக்கு அடிப்படைத்தேவை இஸ்லாமியர்களின் ஒற்றுமை கூறியும்,ஒன்றிணைத்து அனைத்து முஸ்லிம்கள் செயல்பட்டால் எளிமையாக அரசியலில் மட்டுமின்றி அனைத்து விதத்திலும் முன்னேற முடியும் கூறி உரையை முடித்ததுடன் பலரின் சிந்தனையை உடைத்து சிந்திக்கவும் வைத்துவிட்டு அமர்ந்துக்கொண்டார் .

விழா முடிவாக இந்த அமைப்பின் செயல்வீரர்களுக்கு கவுரவிக்கும் விதத்தில் நற்சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது .இந்த அமைப்பின் செயலர் முஜிபுர் ரஹமானுடன் பலர் இருப்பதால் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது .இந்த விழாவில் ஆண்கள் ,பெண்கள் ஆகியோர் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்