மொபைல் போன் மூலம் பம்ப் செட்டை இயக்கும், ' மொபைல் போன் ஸ்டார்ட்டர்' கருவி



மொபைல் போன் மூலம் பம்ப் செட்டை இயக்கும், 'மொபைல் போன் ஸ்டார்ட்டர்' கருவி, விவசாயிகள் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகள் மின் மோட்டாரை மொபைல் போன் மூலம் ஒரு இடத்தில் இருந்து கொண்டு மிஸ்டு கால் மூலம் இயக்கவும், ஆப் செய்யவும் முடியும். இதற்கு எவ்வித செலவும் இல்லை. அரை எச்.பி., முதல் 100 எச்.பி., வரையுள்ள அனைத்து மின் பம்ப்களிலும் இதை பொருத்தலாம். மின்சாரம் சரியாக இருந்தால் மட்டுமே இதை இயக்க முடியும். மோட்டார் இயங்கிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைபட்டால், உடனடியாக எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்தும்.

 கிணற்றில் தண்ணீர் தீர்ந்தவுடன் மோட்டார் இயக்கத்தை ரத்து செய்து எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவிக்கப்படும். தோட்டத்திற்கு செல்லும் போது மொபைல் போனை மறந்து சென்றால் வழக்கம் போல் மின்பம்பை, 'ஆன்/ஆப்' செய்யலாம். உரிமையாளருக்கு தெரியாமல் யாராவது மோட்டாரை இயக்கினாலும், உடனடியாக மோட்டார், 'ஆன்' செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் வரும். திண்டுக்கலில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 'மொபைல் போன் ஸ்டார்ட்டரை' அறிமுகம் செய்து அதிகாரிகள் கூறியதாவது:

"தனியார் நிறுவனம் இந்த மொபைல் போன் ஸ்டார்ட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்டார்ட்டர் விலை 7 ஆயிரம் ரூபாய். கம்பரசருக்கு 8 ஆயிரம், சொட்டு நீர் பாசனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மொபைல் போன் ஸ்டார்ட்டரில் சிம் கார்டு இணைப்பு வசதியுண்டு. அந்தந்த பகுதியில் எந்த கம்பெனி டவர் கிடைக்கிறதோ, அந்த சிம் கார்டு பொருத்தப்படும்." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
நன்றி: கல்வித்தகவல்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்